புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்துள்ள Ocean Lanka

புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்துள்ள Ocean Lanka

Fountain Set (Holdings) Limited, Brandix Lanka Limited, Hirdaramani Group ஆகியவற்றின் மதிப்புமிக்க கூட்டு நிறுவனமான Ocean Lanka (Pvt) Ltd ஆனது, அதன் நவீன வசதியுடன் புணரமைப்பு செய்யப்பட்ட புதிய அலுவலகத்தை அண்மையில் பெருமையுடன் திறந்து வைத்துள்ளது. இம் முக்கிய நிகழ்வானது மிகவும் கோலாகலமாக நடைபெற்றதுடன் மாலை நேர விருந்துபசாரமும் ஏட்பாடுசெய்யப்படடிருந்தது. இது மதிப்புமிக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் குறிப்பிடும்படியான மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்நிகழ்வில், Ocean Lanka முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Austin Au வரவேற்புரை நிகழ்த்தியிருந்தார். இந்த முயற்சி தொடர்பில் தனது ஆர்வத்தையும் நன்றியையும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அவர் இங்கு தெரிவிக்கையில், “இன்றிரவு எமது பங்குதாரர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாம் இந்த இடத்தில் கொண்டிருப்பது ஒரு புதிய, மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான அனுபவமாகும். இந்த கொண்டாட்டமானது, எமது புணரமைப்பு செய்யப்பட்ட அலுவலகத்தை திறப்பது மட்டுமல்லாது, எமது செயற்பாடுகள் ஆரம்பித்து 25ஆவது ஆண்டு நிறைவின் கொண்டாட்டமுமாகும். அதனை கொவிட் தொற்று காரணமாக எம்மால் கொண்டாட முடியாமல் போனது. ஓஷன் லங்காவின் வர்த்தகத்தின் புதிய சகாப்தத்தில் நாம் நுழைந்துள்ளோம். எமது புதிய தோற்றம் மற்றும் நோக்குடன், இதன் எதிர்காலம் எவ்வாறு அமையவுள்ளது என்பதைக் காண நாம் ஆவலாக உள்ளோம்.” என்றார்.

இவ்விழாவில் முக்கிய பங்குதாரர்களின் விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன. Fountain Set (Holdings) Limited நிறைவேற்றுப் பணிப்பாளரும், அதன் உப தலைவருமான Dr. Li Gang, மகத்தான கூட்டு முயற்சி பற்றியும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடையேயும் அது கொண்டிருக்கும் அபரிமிதமான ஆற்றல் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். “ஓஷன் லங்காவின் புதிய அலுவலகத்திற்கு நான் வருகை தந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எமது தொழில்துறையில் சவாலான காலகட்டமாகும். எதிர்வரும் காலத்தில் அதை எம்மால் சமாளிக்க முடியுமென நம்புகிறேன்.” என்றார்.

ஓஷன் லங்காவுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில், Brandix Lanka Limited குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூட்டுப் பயணத்தை உருவாக்குவதில் தரம் மற்றும் நிலைபேறான தன்மையின் பகிரப்பட்ட பெறுமதியை அவர் வலியுறுத்தினார். “ஓஷன் லங்கா ஆனது, இலங்கையின் முதலாவது தொழில்முறை அறிவு பெற்ற ஆடைத்தொழிற்சாலை என நான் நினைக்கிறேன். ஓஷன் லங்கா காரணமாக, நாம் தைத்த ஆடைகளின் தேசமாக அறியப்படுகின்றோம். நாடு, தொழில்துறை, அதன் பங்குதாரர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்காக ஒரு அற்புதமான பணியை ஓஷன் லங்கா மேற்கொண்டு வருகின்றது.” என்றார்

இலங்கையின் ஆடைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் கூட்டாண்மை மற்றும் அதன் ஆற்றலை, Hirdaramani குழுமத்தின் பணிப்பாளர் சித்தார்த் ஹைட்ராமணி பாராட்டிப் பேசினார். “இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ளவர்கள் எனும் எமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள, நாம் நிலைமைக்கு ஏற்ப எம்மை மாற்றியமைத்து புத்தாக்கங்களை உருவாக்க வேண்டும். இதுவே ஓஷன் லங்காவுடன் பல வருடங்களாக நாம் செய்து வரும் விடயமாகும். எனவே தொடர்ச்சியாக நாம் முன்னேறுவோம் என எதிர்பார்க்கிறேன். நாட்டில் உள்ள சில பெரிய அளவிலான ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்று எனும் வகையில், எமது தொழில்துறையின் எதிர்காலத்தில் செல்வாக்குச் செலுத்த எமக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் முன்னேற்றத்திற்கான வழிகளையும், சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் நாம் தொடர்ச்சியாக கருத்தில் எடுக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

இந்த நிகழ்வில், Fountain Set (Holdings) Limited, Brandix Lanka Limited, Hirdaramani Group உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்புமிக்க நிகழ்வில் Fountain Set நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அதன் துணைத் தலைவருமான Dr. Li Gang, Ocean Lanka நிறுவன பணிப்பாளர் Liu Qing மற்றும் Fountain Set நிறுவனச் செயலாளர் திருமதி Cheng Wai Han Charmaine ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Brandix Lanka நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அக்குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர் மற்றும் பெரோஸ் ஒமர் Hirdaramani குழுமத்தின் பணிப்பாளர், பணிப்பாளர் அனில் ஹைட்ராமணி, பணிப்பாளர் வினோத் ஹைட்ராமணி, பணிப்பாளர் சித்தார்த் ஹைட்ராமணி ஆகியோரும் விழாவை சிறப்பித்தனர். முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.கே.டி. லோரன்ஸ் மற்றும் பியகம முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் கித்சிறி குமாரசிங்க ஆகியோரின் பிரசன்னம் இந்நிகழ்விற்கு மேலும் கௌரவத்தை சேர்த்தது. Ocean Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Austin Au நிறுவனம் சார்பில் தலைமைத்துவத்தை வழங்கினார்.

Ocean Lanka (Pvt) Ltd ஆனது, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் வலிமை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனித்துவமான ஒத்துழைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. Chinatex Corporation ஆனது, Fountain Set (Holdings) நிறுவனத்தின் மிகப் பெரும் பங்குதாரராகும். Brandix Lanka மற்றும் Hirdaramani குழுமம் ஆகியன முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன. இதன் மூலம் இந்த கூட்டாண்மைக்கு பரந்த தொழில்துறை அனுபவவுமும் அர்ப்பணிப்பும் கொண்டு வரப்படுகின்றன.

END

Photo Caption

Image 01 :

இடமிருந்து வலமாக: திருமதி Cheng Wai Han Charmaine (Fountain Set (Holdings) Limited நிறுவனத்தின் செயலாளர்), Liu Qing (Ocean Lanka (Private) Co.Ltd பணிப்பாளர்), கித்சிறி குமாரசிங்க (பியகம முதலீட்டுச் சபையின் பணிப்பாளர்), (Director of the Board of Investment Biyagama), Dr. Li Gang (Fountain Set (Holdings) Limited நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் உப தலைவர்), சித்தார்த் ஹைட்ராமணி, (ஹைட்ராமணி குழும பணிப்பாளர்), அஷ்ரப் ஒமர் (Brandix Lanka Limited குழும பிரதம நிறைவேற்று அதிகாரி), அனில் ஹைட்ராமணி (Hirdaramani குழும பணிப்பாளர்), வினோத் ஹைட்ராமணி (Hirdaramani குழும பணிப்பாளர்), Dr. Austin Au (Ocean Lanka (Pvt) Ltd முகாமைத்துவ பணிப்பாளர்)