சுதேசி கொஹொம்ப 14ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தை கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது

சுதேசி கொஹொம்ப 14ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தை கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது

தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ​​”சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் 3ஆவது வருடம் இதுவாகும்.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதேசி நிறுவனத்தின் தலைவி, திருமதி அமாரி விஜேவர்தன தெரிவிக்கையில், முற்றிலும் இலங்கை நிறுவனம் எனும் வகையில், இவ்வாறான வருடாந்த ஒளியூட்டல் பூஜைகளை மேற்கோள்வன் மூலம், இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய பாரம்பரியத்தை பாதுகாப்பதை நாம் கடமையாக கருதுகிறோம்.

சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றமையானது, அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்குமாகும் என அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒளியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து கண்கவர் கலாசார போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது இலங்கையின் மரபுகள் மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

அப்போதிருந்த உண்மையான உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், கிபி 661 இல் தபுலுசென் மன்னனால் கட்டப்பட்டது. இது பின்னர் போர்த்துக்கேயர்களால் அழிக்கப்பட்டது. பௌத்த இலக்கியங்களின்படி, புத்தர் இயற்கை எய்துவதற்கு முன் இலங்கையில் பௌத்தத்தை பாதுகாக்கும்படி ‘சக்ரா’ கடவுளிடம் கோரியிருந்தார். ‘சக்ரா’ கடவுள் இந்தக் கடமையை ‘உத்பலாவர்ண’ கடவுளிடம் ஒப்படைத்தார். ‘உத்பலாவர்ண’ என்பது “நீல நிறம்” என்பதாகும். இது ‘விஷ்ணு’ கடவுளின் நிறத்தை ஒத்திருக்கிறது. எனவே தெவுந்தர தேவாலயம் உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு தேவ மந்திரய என்று அழைக்கப்படுகிறது.

கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் கண்டியில் உள்ள நான்கு பிரதான தேவாலயங்களில் ஒன்றாகும். இது அரசகுடும்ப அரண்மனை (மஹா வாசல) மற்றும் புனித தந்த ஆலயம் (ஸ்ரீ தலதா மாளிகை) ஆகியவற்றுடன் நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது.

புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ளதும் பண்டைய சுவரோவியங்கள் பேணப்படுகின்றதுமான, வரலாற்று சிறப்புமிக்க தம்பதெனிய ரஜ மகா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ சுதேசி நிறுவனத் தலைவர் திருமதி அமாரி விஜேவர்தனேவினால், கடந்த கால மகிமையை மீண்டும் கொண்டுவரும் எனும் வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

திருமதி அமாரி விஜேவர்தன ஹெலன விஜேவர்தன லமாதெனியின் பேத்தி ஆவார். ஹெலன விஜேவர்தன, 1927 ஆம் ஆண்டில் களனி ராஜ மகா விஹாரையின் புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.

கதிர்காம கிரி வெஹெர, ருஹுணு மஹா கதிர்காம தேவாலயம், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட சபரகமு மஹா சமன் தேவாலயம், ரெதிகம ரிதி விகாரை, லங்காதிலக ரஜ மஹா விகாரை, தெரணியகல சமன் தேவாலயம், அம்மதுவ குடா கதரகம தேவலாயம், சங்கபாலி ரஜ மகா விகாரை, கொலம்பகம ரஜ மகா விகாரை, தம்பதெனிய ரஜா மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’, ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்கராய’ உள்ளிட்ட, நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் வருடாந்த ஒளியூட்டல் விழாவை முன்னெடுத்து வருவதோடு, வேம்பு மர நடுகை பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடை செய்தல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னணி நிறுவனம் எனும் வகையில்,

“சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயல்பாட்டு நன்மைகள் பற்றி நுகர்வோர் மேலும் அறிய வேண்டுமென நாம் விரும்புகிறோம். நாம் சிறந்த இலங்கை மூலிகைகளை மாத்திரமே மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறோம் என்பதுடன், எமது அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வு செய்யப்படுவதோடு, தயாரிப்புகளின் தரம் மற்றும் அனைத்தையும் உறுதிப்படுத்த முழுமையாக சோதிக்கப்படுகின்றன. எமது தயாரிப்புகள் யாவும் 100% தாவர ரீதியானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன், விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளான சுதேசி கொஹொம்ப ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்டவை பிரித்தானியாவின் Vegetarian Society இனது அங்கீகாரம் பெற்றவையாகும்.” இது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்து முன்னுரிமையளிக்கிறது. ஒரு உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் பல்வேறு முதன்முதலான விடயங்களை தனது பெயருடன் இணைத்துள்ளது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடி மற்றும் சந்தையின் முன்னணி நிறுவனமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் சுதேசி கொஹொம்ப ராணி சந்தனம், சுதேசி கோஹோம்ப பேபி, லிட்டில் பிரின்சஸ், பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ்,  கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன.

சிறந்த மூலிகை சவர்க்கார தரக்குறியீடான  கொஹொம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தனத்தை நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.

Photo Caption:

சுதேசி நிறுவனத் தலைவி திருமதி அமாரி விஜேவர்தன, கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம்/ அலுத்நுவர ஸ்ரீ மகா தெடிமுண்ட தேவாலயம் சார்பில் மஹிந்திர ரத்வத்தே மற்றும் சுதேசி நிறுவன அதிகாரிகள், குறித்த ஒளியூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது…