சுதேசி கொஹொம்ப நிறுவனத்தால் கந்தானை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

சுதேசி கொஹொம்ப நிறுவனத்தால் கந்தானை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

முன்னணி தனிநபர் மூலிகை பராமரிப்பு தயாரிப்பு உற்பத்தியாளரான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், கந்தானை, கந்தேவத்தை கிராம அலுவலர் பிரிவு மற்றும் கந்தானை, நாகொட மொரவத்தை கிராம அலுவலர் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உதவி அவசியப்படும் குடும்பங்களுக்காக ‘சுதேசி கொஹொம்ப பிரஜா சத்கராய’ எனும் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இது சுதேசி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புத் திட்ட தொடரின் மற்றுமொரு செயற்பாடாகும்.

முழுமையான இலங்கைக்கு சொந்தமான ஒரு நிறுவனம் எனும் வகையில், இந்த கடினமான காலத்தில் எமது சொந்த ஊரில் உள்ள எமது நுகர்வோருக்கு ஆதரவளித்து அவர்களைப் பேணுவதை ஒரு சமூகப் பொறுப்பாகக் கருதுகிறோம் என, சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தன மற்றும் சுதேசியின் பிரதித் தலைவியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திருமதி சூலோதர சமரசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.

100% முழுமையான உள்ளூர் நிறுவனமான சுதேசி, எமது இலங்கை சமூகங்களுக்காக தேசத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டான சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. சுதேசி கொஹொம்ப வர்த்தகநாமம், இயற்கை அன்னையைப் பராமரிப்பதிலும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்ற, நிலைபேறானதன்மை கொண்ட திட்டங்களை செயற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில், ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’, ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’, வேம்பு மர நடுகை பிரசார திட்டங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடை செய்தல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

“இலங்கையிலுள்ள மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு உற்பத்திப் பிரிவில் முன்னணி நிறுவனம் எனும் வகையில் சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் பற்றி நுகர்வோர் மேலும் அறிய வேண்டுமென நாம் விரும்புகிறோம். நாம் எமது தயாரிப்புகளில் இலங்கையிலுள்ள சிறந்த மூலிகைகளை மாத்திரமே மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறோம் என்பதுடன், எமது அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வு செய்யப்படுவதோடு, தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்த அவை முழுமையாக சோதிக்கப்படுகின்றன. எமது தயாரிப்புகள் யாவும் 100% தாவர ரீதியானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன், விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டதாக அமைந்துள்ளன. சுதேசியின் முன்னணி உற்பத்திகளான சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்டவை பிரித்தானியாவின் Vegetarian Society இனது அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த தர அங்கீகாரமானது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளில் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் முக்கிய கவனம் செலுத்துகிறது. ஒரு உண்மையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் பல்வேறு முதன்முதலான விடயங்களை தனது பெயருடன் இணைத்துள்ளது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையிலுள்ள முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி,  பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ்,  கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன.

நம்பர் 01 மூலிகை சவர்க்கார தரக்குறியீடான கொஹொம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தனம் ஆகிய தயாரிப்புகளை நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், அவை ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

Photo Caption:

சுதேசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில உடவத்த மற்றும் சுதேசியின் அதிகாரிகள் கந்தானை, கந்தேவத்தை மற்றும் நாகொட, மொரவத்தை பிரதேசங்களில், தேவையுடைய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தபோது…