குறைந்த காலத்தில் பிரபலமடைந்த Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் DIMO Agribusinesses

குறைந்த காலத்தில் பிரபலமடைந்த Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் DIMO Agribusinesses

DIMO Agribusinesses தனது நீண்ட கால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, கடந்த போகத்தில் அறிமுகப்படுத்திய Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்கள், மிகக் குறுகிய காலத்தில் இலங்கை விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளை வழங்க, DIMO Agribusinesses ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

DIMO நிறுவத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses, நாட்டின் விவசாயிகளுக்கு உயர் தொழில்நுட்ப உழவு இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், உள்ளூர் விவசாயத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை கடந்த போகத்தில் இலங்கைக்கு அறிமுகம் செய்திருந்தது. Mahindra Tractors இன் அதிக எரிபொருள் திறன் கொண்ட Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரமானது, கடந்த போகம் நிறைவடைவதற்கு முன்னரே சாதனை வேகத்தில் சந்தையில் வளர்ச்சி அடைந்தது. இந்த விரைவான சந்தை வளர்ச்சியைத் தொடர்ந்து, Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு, தொழிலாளர் கட்டணம் அற்ற 3 பராமரிப்பு சேவையுடன், Mahindra உழவு இயந்திரங்களுக்கு அதன் உற்பத்தி நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட M Star அசல் எஞ்சின் ஒயிலை இந்த மூன்று பராமரிப்பு சேவைகளிலும் DIMO Agribusinesses இலவசமாக வழங்குகிறது. அத்துடன் 6 பராமரிப்பு சேவைகளுக்கான துணைப் பாகங்களையும் இலவசமாக வழங்குகின்றது. அந்த வகையில், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பராமரிப்பு சேவைகளை வழங்க DIMO ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த DIMO Agribusinesses விவசாய இயந்திரப் பிரிவின் தலைவர் அமில டி சில்வா, “பொதுவாக எந்தவொரு புதிய விவசாய இயந்திரங்களும் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதன் சந்தைப் பங்கானது, சில போகங்களின் பின்னரே அதிகரிக்கும். ஆனால் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரமானது, கடந்த போகத்திலேயே அதன் சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது ஒரு விசேடத்துவம் வாய்ந்த உண்மையாகும். Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தின் விசேட தொழில்நுட்ப அம்சங்கள், 4 வருட உத்தரவாதம், அதிக எரிபொருள் திறன், பல் செயற்பாட்டுத் தன்மை, நவீன தோற்றம், எளிதான கையாளுகை ஆகியன, இதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன என்பதை நாம் இங்கு குறிப்பிட வேண்டும்.” என்றார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரமானது, இளம் விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பராமரிப்பு செலவைக் குறைத்து இந்நாட்டு விவசாயிகளுக்கு Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை கொள்வனவு செய்வதை மிக எளிதாக்குதல் மற்றும் அவர்களின் முதலீட்டிற்கான அதிக வருமானத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டே, இந்த உழவு இயந்திர பராமரிப்பு சேவைகளுக்காக விசேட சலுகைகளை வழங்க நாம் ஆலோசனை செய்தோம். இந்தப் பராமரிப்புப் பலன்கள் மூலம் விவசாயிகள் அடுத்து வரும் சிறு போகத்தில் தமது விவசாயப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என நாம் நம்புகிறோம். அடுத்த தலைமுறை விவசாயத்தின் மூலம் இலங்கை விவசாயிகளின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டுவதற்கு DIMO தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.

Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரமானது, பல்வேறு தனித்துவமான அம்சங்களுடன் வருகிறது. 2979 CC திறன் கொண்ட எஞ்சின் மூலம் சேறு நிறைந்த வயல்களில் மாத்திரமன்றி போக்குவரத்தின் போதும் அதிக சுமைகளை இழுக்கும் திறனை இது கொண்டுள்ளது. இது 44.9 HP குதிரை வலுவுடன், நவீன Slipto தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

இங்கு உள்ள Synchro shuttle தொழில்நுட்பத்துடனான, பக்க கியர் தொகுதியுடன் முன்னோக்கிய 12 வேகம் மற்றும் பின்னோக்கிய 12 வேகம் உள்ளதன் காரணமாக, வயல் நிலத்திலும் போக்குவரத்திலும், குறைந்த அளவான நேரத்தில், குறைந்த எரிபொருள் விரையத்துடன் அதிக செயற்றிறனுடன், அதிக பணிகளை மிக எளிதாக முன்னெடுக்க முடியும். முன்புறம் (9.5*20) மற்றும் பின்புறம் (14.9*28) தவாளிப்புகள் கொண்ட பெரிய அளவிலான டயர்கள் மூலம் தரைக்கும் உழவு இயந்திரத்திற்கும் இடையேயான தூரத்தை அதிகரிப்பதன் மூலம், சேற்று நிலங்களில் கூட மிக எளிதாக கையாளும் திறனை இந்த நவீன உழவு இயந்திரம் கொண்டுள்ளது.