ராஜா ஜூவலர்ஸின் ‘நீங்களாகவே இருங்கள்’ பிரசாரம் 2023 சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை வலுவூட்டுகிறது

ராஜா ஜூவலர்ஸின் ‘நீங்களாகவே இருங்கள்’ பிரசாரம் 2023 சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை வலுவூட்டுகிறது

தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், ‘நீங்களாகவே இருங்கள்’ எனும் அதன் பிரசாரம் மூலம், 2023 சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. தாங்கள் விரும்புவதைச் செய்கின்ற, ஆபரண கைத்தொழிலில் தங்கள் ஆர்வத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தும் பன்முக ஆளுமை கொண்ட பெண்களைக் கொண்டாடுவதில் இந்த பிரசாரம் கவனம் செலுத்துகின்றது.

இப்பிரசாரம் குறித்து கருத்து தெரிவித்த ராஜா ஜூவலர்ஸ் பணிப்பாளர் ரன்மினி எலியபுர, “ராஜா ஜூவலர்ஸ் இந்த 2023 சர்வதேச மகளிர் தினத்தில் அச்சமற்ற மற்றும் தடுத்து நிறுத்த முடியாத மனப்பான்மையை கொண்ட பெண்களை, ‘நீங்களாகவே இருங்கள்’ எனும் எமது பிரச்சாரத்துடன் இணைந்து கொண்டாடுகிறது. ஒவ்வொரு பெண்ணும் அவளது தனித்துவமான குணங்களை பேண வேண்டும். அவளுடைய ஆர்வத்தைத் தொடர வேண்டும்; அவளுடைய பன்முகத் திறன் கொண்ட ஆளுமைகளில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஒரே மாதிரியான கொள்கைகளை தகர்த்து, சவால்களை பொறுப்பேற்று, தாங்கள் விரும்புவதைச் செய்யும் பெண்களுக்காக நாம் துணை நிற்கிறோம். எமது பிரசாரத்தின் மூலம், பெண்கள் தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்காமல், அவர்கள் தங்க ஆபரணங்களைப் போல தங்களை பிரகாசமாக்கி கொள்ள ஊக்குவிக்க விரும்புகிறோம்.” என்றார்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ராஜா ஜூவலர்ஸின் ‘நீங்களாகவே இருங்கள்’ பிரசாரமானது, ஆபரண கைத்தொழில் துறையில் ஆர்வமுள்ள பெண்களின் ஈடுபாட்டைக் கொண்டாடுகிறது. இந்த பிரசாரத்தில் புகைப்பட அறையொன்று (photo booth) உள்ளடக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட ஆளுமைகளைப் படம்பிடிக்கவும், அதனை உடனடியாக புகைப்படங்களாக மாற்றி நினைவுப் பரிசாகப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஜா ஜூவலர்ஸ் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், ஆபரண வணிகத்தின் உற்பத்தி, வடிவமைப்பு, கைவினை, விற்பனை, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பன்முகத் திறன் கொண்ட பெண்களின், எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், பெண்கள் தங்களுக்கு ஆர்வமான விடயங்களைத் தொடரவும், ஊக்கமளிக்கவும், தங்களுடைய தனித்துவமான பாணியில் நகைகளை அணியவும் ஊக்குவிக்கிறது. அத்துடன், ராஜா ஜூவலர்ஸ் தமது சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்கள்  மற்றும் வாடிக்கையாளர்களை அவர்களின் பணி மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் அல்லது வீடியோவைச் சமர்ப்பித்து இப்பிரசாரத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் தனது துறையில் உள்ள பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் வலிமையைக் கொண்டாடுவதன் மூலம், ராஜா ஜூவலர்ஸ் அவர்களின் தனித்துவம் மற்றும் தனித்துவமான பாணியை தழுவுவதற்கு ஏனையவர்களை ஊக்குவிக்க முடியும் என நம்புகிறது. ராஜா ஜூவலர்ஸ், பலவிதமான நகை தெரிவுகளை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு பெண்ணின் தேவைகளையும் பூர்த்தி செய்ய தன்னை அர்ப்பணித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட கடனட்டைகளுக்கான தவணைக் கட்டண திட்டங்களுடன், Paragon – வைர ஆபரண தெரிவுகள் மற்றும் Opera Work Wear ஆபரண தெரிவுகளும் தள்ளுபடியுடனான விலையில் கிடைக்கின்றன. இத்தள்ளுபடி கொண்ட விலைகளை பம்பலப்பிட்டி, நீர்கொழும்பு, கண்டி ஆகிய மூன்று ராஜா ஜூவலர்ஸ் காட்சியறைகளிலும் கொள்வனவு செய்யலாம்.

பரகன் – வைர நகை தெரிவுகள், அழகியல் அம்சத்தை மட்டுமல்லாமல், அன்பு, காதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் நீடித்த சின்னமாகவும் திகழ்கின்றன. வைர கல்லின் பெயர் Adamas என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது. இது ‘unconquerable’ (வெல்ல முடியாதது” என மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்த அடையாளம் மிக்க அர்த்தமானது வைரத்தின் நித்திய அன்பின் வரலாற்று நினைவுகூரலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறது. ஆரம்பகால வைரங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும் இந்த தொகுதியில் வயதில் குறைந்தவை 900 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவையாகும். ராஜா ஜூவலர்ஸின் தற்போதுள்ள தெரிவுகளுடன், காலத்தால் அழியாத அழகுடன், நேர்த்தியான கைவினைத்திறனை வழங்கும், வசீகரிக்கும் ‘Paragon’ வைர நகை வடிவமைப்புகளில் நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் உள்ளிட்ட மேலும் பல நேர்த்தியான நகைகளும் அடங்குகின்றன. இந்த தெரிவுகள் யாவும், இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு ஒப்பிட முடியாத மாயாஜாலத்தை ஏற்படுத்தும் அழகிய நகைகளின் தெரிவுகளை அனுபவிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பையும் வழங்குகிறது.

அது மாத்திரமன்றி, “Opera” Work Wear ஆபரண தெரிவுகள் யாவும், வண்ணமயமான கற்களான, மாணிக்கம் மற்றும் வைரங்களாக கிடைக்கின்றன. பெண்கள் வேலைக்குச் செல்லும் போது வித்தியாசமாக இருக்க விரும்புவதால், இது அழகியல் ரீதியாகவும், பெண்களுக்கு பொருத்தமானதாகவும் இருப்பதோடு, இது பெண்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. தொழில் துறை வல்லுநர்களான பெண்களுக்கு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, வேலைக்கு செல்வதற்காக அணியும் நகைகளின் தொகுப்பானது, ஆடம்பரமான அலங்காரங்களைக் கொண்ட பரந்த அளவிலான தெரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு, இது பெண்களுக்கு தமக்கு பொருத்தமான நேர்த்தியான ஒன்றைக் தெரிவு செய்ய அனுமதிக்கிறது. அத்துடன் அனைத்து பெண்களும் தமது வாழ்க்கையை கொண்டாட உதவுகிறது.

கடந்த ஒன்பது தசாப்த காலமாக, இலங்கையின் கலாசாரத்தை எப்போதும் மதிக்கும் ஒரு வர்த்தக நாமமாக ராஜா ஜுவலர்ஸ் திகழ்கின்றது. அத்துடன் இலங்கையின் ஆபரணத் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த நிறுவனங்களில் ஒன்றாகவும் அது விளங்குகின்றது. அதன் நேர்த்தியான கைவினைப்பொருட்கள் யாவும் உள்நாட்டில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் புகழ்பெற்றவையாகும். அதே நேரத்தில் இங்குள்ள பல்வேறு வகையான நகைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவையாக கிடைக்கின்றன. மிகச்சிறந்த இரத்தினக்கற்கள், சிர்கோன்கள் (Zircons), சுத்திகரிக்கப்பட்ட தங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தனித்துவமான அலங்காரத்துடனான, காலத்தால் அழியாத படைப்புகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். ராஜா ஜுவலர்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து நம்பிக்கை, சிறப்பான சேவை, தனித்துவமான கைவினை தாயரிப்பு நகைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவை பேணி வருகின்றது.

ராஜா ஜூவலர்ஸ் தொடர்பான விரிவான தெரிவுகள் தொடர்பான மேலதிக தகவலுக்கு: www.rajajewellers.com, அதன் Facebook பக்கம்: https://www.facebook.com/Rajajewellers.lk/ அதன் Instagram பக்கம்: https://www.instagram.com/rajajewellers.lk

END