யாழ்ப்பாணத்தில்தனதுஇருப்பைவிரிவுபடுத்தும்சூரியமின்கலஜாம்பவான்

யாழ்ப்பாணத்தில்தனதுஇருப்பைவிரிவுபடுத்தும்சூரியமின்கலஜாம்பவான்

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவான Hayleys Solar, யாழ்ப்பாணத்தில் தனது சமீபத்திய அறிமுகத்தை தொடர்ந்து, நாட்டின் தெற்கிலிருந்து வடக்கே சூரிய சக்தியை அனைவரும் அணுகக்கூடிய வகையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

இலக்கம் 148-1/1, தபால் பெட்டிச் சந்தி, பலாலி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புதிதாக நிறுவப்பட்ட நிறுவனத்தின் அனுபவ மையம், பிரதேச மக்களுக்கு சூரிய சக்தியை அணுகக்கூடியதாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த மையம், மேற்கூரை PV தொகுதிகள், மின்கலங்கள் மற்றும் இன்வேர்ட்டர்கள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த சூரிய மின்கல தீர்வுகள், சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகள், மின் விளக்குத் தொகுதிகளை வழங்குவதோடு, சூரிய மின்கலத் தொகுதிகளின் நேரடி விளக்கக்காட்சிகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தூய வலுசக்தி தீர்வுகளை பயன்படுத்துவதற்கும், நிலைபேறான எதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கும் தனிநபர்களை ஊக்குவிக்கின்ற ஈடுபாட்டுடன் கூடிய இந்த விளக்கக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Hayleys Solar மாத்தறையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திற்கு விரிவுபடுத்தும் முடிவானது, பரந்தளவிலான சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளப்படுகிறது. இலங்கையின் தெற்கிலும் வடக்கிலும் தனது இருப்பை நிறுவுவதன் மூலம், பல்வேறு சமூகங்களின் வலுசக்தி தேவைகளை நிவர்த்தி செய்வதை Hayleys Solar நோக்கமாகக் கொண்டுள்ளது.

Hayleys Fentons இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த விரிவாக்கமானது, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களுக்கு, நிலைபேறான சூரிய சக்தியை அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தியை ஊக்குவிக்கும் எமது நோக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகளவான சூரிய ஒளியைப் பெறும் யாழ்ப்பாணம், பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. வலுசக்தியில் தன்னிறைவை அடைவதன் மூலம் இதன் மூலமான பாரிய பயனை அடைய முடியும். பாரம்பரிய மின்விநியோக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் செலவு ஒரு தடையாக அமையும் என்பதோடு, தொலைதூர மற்றும் மின் விநியோக வலையமைப்புகள் அற்ற இடங்களில் மின்சாரத்தை வழங்குவதன் காரணமாக கிராமப்புறங்களுக்கான மின் விநியோகத்தில் சூரிய சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

Hayleys Solar நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேனஂ பெரேரா தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள கூரைகள் போதுமான அளவு சூரிய கதிர்வீச்சைப் பெறுகின்றன, மேலும் இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமானது, வீணாகிவிடக்கூடாது என நாம் விரும்புகிறோம். அந்த வகையில் இங்கு எமது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, சூரிய சக்தியில் இயங்கும் விவசாயத்திற்கான நீர் இறைக்கும் பம்பிகள் உள்ளிட்ட ஏனைய சூரிய சக்தி தொழில்நுட்பங்களை யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

“புனித நல்லூர் கோவிலுக்கு அருகில் அனைத்து வசதிகளுடனும் அமைந்துள்ள எமது நிலையத்தில், நட்புறவு கொண்ட எமது உள்ளூர் ஊழியர்களை சென்று சந்திக்குமாறு பொதுமக்களை நாம் அழைக்கிறோம். நீங்கள் சொல்வதை உரிய முறையில் கேட்டு, உங்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும் பொருட்டு” உங்களது வலுசக்தி தேவைகளை அடையாளம் காண நாம் தயாராக உள்ளோம். உலகப் புகழ்பெற்ற நல்லூர் கோவில், ஹென்றி கல்லூரி மற்றும் ஜெட்லங்கா உள்ளிட்ட, யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய இடங்களில் நாம் ஏற்கனவே முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், எமது இருப்பை நாம் குறிப்பிடும்படியான மட்டத்தில் நிலைநிறுத்தியுள்ளோம்.” என்றார்.

சமூக ஈடுபாட்டிற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, Hayleys Solar குழுவானது, யாழ்ப்பாண நல்லூர் திருவிழா, யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி, யாழ்ப்பாண வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் தனது ஆழமான பங்கேற்பை மேற்கொண்டிருந்தது. அங்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப் பம்பிகளின் நேரடி விளக்கக்காட்சிகளையும் காட்சிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் பசுமை அனுபவ மையங்களை நிறுவுவதற்கான தனதுஉறுதியான நோக்கத்துடன், சமூகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் சூரிய சக்திக்கான அணுகல் மற்றும் கட்டுப்படியாகும் தன்மையை மேம்படுத்தி, ஒரு தூய்மையான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிலைபெறுதகு வளர்ச்சியை Hayleys Solar வென்றுள்ளது. Hayleys Solar ஆனது 140MW இற்கும் அதிக வலுசக்தி கொண்ட சூரியமின்கலத் தொகுதி நிறுவல்களை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நிறைவுசெய்து, இலங்கையில் பொறியியல், கொள்வனவு மற்றும் கட்டுமான (EPC) துறை தொடர்பான நிறுவனங்களில் மறுக்கமுடியாத முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.