முன்னோடியான சேமிப்புத் தீர்வுடன் ஆயுள் காப்புறுதி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஜனசக்தி லைஃப்

முன்னோடியான சேமிப்புத் தீர்வுடன் ஆயுள் காப்புறுதி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஜனசக்தி லைஃப்

ஒரு முன்னோடியான ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், அதிக பலன்களை கொண்ட சேமிப்புகளை வழங்கும் புத்தாக்கமான சேமிப்புத் தீர்வின் மூலம், தனது காப்புறுதி திட்டங்களில் புதிய ‘ட்ரீம் சேவர்” (Dream Saver) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புத்தாக்கமான சேமிப்பு தீர்வானது, வாடிக்கையாளர்களுக்கு நடுத்தர அல்லது நீண்ட கால முதலீடுகளில் அதிக வருமானத்துடன் மூலோபாய ரீதியான முதலீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ட்ரீம் சேவர் திட்டமானது, ஒரு தனிக்கட்டுப்பணத் திட்டமாகும். இது சந்தையில் காணப்படுகின்ற இலாப பங்கீட்டு தொகை விகிதத்திற்கு (dividend rate) அதிகமான வீதத்தையும், வருடாந்த உத்தரவாத விகிதம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஆயுள் மற்றும் விபத்து மரண பாதுகாப்பையும் குறைந்தபட்ச முதலீட்டு பெறுமதியான ரூ. 1 மில்லியனுடன் வழங்குகிறது.  இந்த முதலீட்டு வாய்ப்பானது நிலையான வைப்புத்தொகை மற்றும் EPF மற்றும் ETF நிதிகள் கொண்ட தனிநபர்களுக்கு ஏற்றதாகும். ஏனெனில் இங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப இலாப பங்கீட்டு தொகை (dividend) பெறும் அளவை மாற்றியமைக்கும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில், ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த முன்னோடியான சேமிப்புத் தீர்வை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் இது அவர்களின் அன்றாட நிதி வாழ்க்கையைப் பொறுப்பேற்று அதிக இலாபத்தை தரும் முதலீடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய வேகமாக மாறிவரும் சூழலில் வாடிக்கையாளரின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பது போதியதாக இல்லை. இந்த புத்தாக்கமான சேமிப்புத் தீர்வானது, நிதி ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நடுத்தரம் முதல் நீண்ட கால பலன்களை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிகளுக்கு எதிராக இலங்கையர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் வலுவூட்டுவதற்காக, எமது நிபுணத்துவம் மற்றும் புத்தாக்க ஆற்றலை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், நிதி ரீதியாக சவாலான இந்த காலக்கட்டத்தில் எமது சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கான இத்தொழில்துறையில் எமது ஸ்திரப்படுத்தப்பட்ட சேவை வழங்கலுக்கு இது ஒரு சான்றாகும்.” என்றார்.

வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல் ஆகிய தனது கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ஜனசக்தி லைஃப் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறையான மற்றும் வெளிப்படையான முறையில் பெறுமதியான சேவையை வழங்க எப்போதும் பாடுபட்டு வருகிறது. வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தி, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் காப்பீட்டாளரால் இது உயிர்ப்பிக்கப்படுகின்றது. இந்த நோக்கத்தை தனது ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டிற்கு விரிவுபடுத்தும் வகையில், ஜனசக்தி லைஃப் எப்போதும் தனது குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக் கொள்ளவும், அதனை நனவாக்கவும் உதவும் உயர்ந்த ஆதரவான பணிச்சூழலை வழங்க முயற்சித்து வருகிறது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச புகழ் பெற்ற Capital Finance International (CFI.co) நிறுவனத்தால், ‘இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதியாளர் 2022’ எனும் விருதின் மூலம் ஜனசக்தி லைஃப் ஆனது அண்மையில் உலகளாவிய ரீதியிலான அங்கீகாரத்தை பெற்றிருந்தது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்துவதோடு, அனைத்து பங்குதாரர்களுக்கும் உண்மையான மதிப்பை சேர்க்கிறது. 2022 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமான வர்த்தகநாம மதிப்பு வளர்ச்சியைப் பதிவுசெய்தவாறு, ‘TOP 10 அதி வேகமாக வளரும் இலங்கை வர்த்தகநாமங்களில்’ ஒன்றாக TOP 10 கௌரவப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒரே காப்புறுதி வர்த்தகநாமமாக இடம்பிடித்துள்ளது.

பிராந்திய ரீதியான காப்புறுதித் தொழிற் துறையை, சிறந்த தீர்வுகளுடன் மாற்றியமைத்த அதன் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 விருதுகள் விழாவில், 2021 ஆம் ஆண்டிற்கான ‘Best Strategies for Insurance Spreading’ (காப்புறுதி பரவலுக்கான சிறந்த மூலோபாயங்கள்) விருதை இந்த முன்னணி காப்புறுதி நிறுவனம் வென்றுள்ளது. மேலும், ஜனசக்தி லைஃப் ஆனது, உலகளாவிய ரீதியில் ‘வருடத்தின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனம்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜனசக்தி லைஃப் கையடக்கத் தொலைபேசி செயலியானது, இன்சூரன்ஸ் ஆசியா விருதுகள் 2022 மூலம் ‘Mobile App of the Year’ (வருடத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலி) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நற்சான்றிதழானது மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகின்றது. இங்கு கடுமையான மதிப்பிடல் மற்றும் தெரிவுச் செயன்முறை உள்ளிட்டவை அடங்குவதால், இது காப்புறுதித் துறையில் ஒரு சிறந்த அங்கீகாரமாகும்.

28 வருடங்களுக்கும் மேலாக, ஜனசக்தி லைஃப் நிறுவனம் காப்புறுதித் துறையில் தொடர்ச்சியாக புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், கருத்திலெடுக்கக்கூடிய ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிக கிளைகள் கொண்ட அதன் வலையமைப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதி தீர்வுகளை அணுக உதவுகிறது.

END