பெற்றோர் கிளினிக்குகள் மூலம் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ தொடர்பான விழிப்புணர்வை வலுவூட்டும் பேபி செரமி

பெற்றோர் கிளினிக்குகள் மூலம் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ தொடர்பான விழிப்புணர்வை வலுவூட்டும் பேபி செரமி

இலங்கையின் முன்னணியில் உள்ள, மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, அண்மையில் பண்டாரகம, பாணந்துறை, புளத்சிங்கள, இங்கிரிய, ஹொரணை, வாதுவை, மத்துகம, அகலவத்தை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக, களுத்துறை மாவட்டத்தில் தனது பெற்றோர் கிளினிக் நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மேம்பாடு மற்றும் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ ஆகியன தொடர்பில் இந்த பெற்றோர் கிளினிக்குகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. வெற்றிகரமான பெற்றோராக இருப்பதற்கான சரியான அறிவு மற்றும் மனப்பான்மையுடன் பெற்றோருக்கு மதிப்புமிக்க அறிவை இது வழங்குகின்றது. இந்த பெற்றோர் கிளினிக்குகள் மூலம், குழந்தை பிறக்கும் போது, அவர்கள் எவ்வாறு ஈடுபாடு மற்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையும், குழந்தையின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் குழந்தை பருவ வளர்ச்சியில் அவர்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பதையும், பெற்றோர்களுக்கு குறிப்பாக தந்தையருக்கு பேபி ஷெரமி கற்பிக்கிறது.

களுத்துறை பெற்றோர் கிளினிக்கில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட, நிபுணர் வளக் குழுவினால் விளக்கமளிக்கப்பட்டது. தாய் – சேய் நல ஆலோசகர் ஷியாமளி பத்திரகே, குழந்தை பராமரிப்பு மற்றும் போசாக்கு, உள்ளடக்கிய பெற்றோர் பராமரிப்பு தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இசைப் பணிப்பாளர் ஜகத் வட்டவல மற்றும் எல்பிட்டிய வலயக் கல்வி அலுவலக அழகியல் கற்பித்தல் பயிற்றுவிப்பாளர் ஸ்வர்ணா வட்டவல ஆகியோரின் இசை தெரபி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்ப குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு கட்டத்திலுமான மேம்பாடுகள் தொடர்பில், பண்டாரகம பிரதேச செயலகத்தின் ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர் மதுஷானி அமரசூரிய விளக்கினார்.

பெற்றோர் கிளினிக்கின் முடிவில், பெறுமதியான பேபி ஷெரமி பரிசுப் பொதி மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய பெற்றோருக்குரிய வழிகாட்டல் கையேடு ஆகியன தாய்மார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. சுகாதார அமைச்சின் (MoH) அனுமதியுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சுடன் இணைந்து இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மருத்துவர்களும் இதில் ஒரு சில அமர்வுகளில் பெற்றோரிடம் கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து கருத்துப் படிவங்கள் மூலமாக, பங்கேற்பாளர்களிடமிருந்து இந்நிகழ்ச்சி தொடர்பான கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

‘உள்ளடக்கிய பெற்றோர்’ எனும் விடயம் தொடர்பில், தாய் மற்றும் தந்தை இருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மேல், தென், கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும், ‘தரு பெட்டியாகே சுரக்ஷித லொவக்’ (குழந்தைச் செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் 30 பெற்றோர் கிளினிக்குகளை நடத்துவதை பேபி ஷெரமி நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை தாய்மார்களின் நம்பிக்கையை வென்று, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாக மாறியதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில் பேபி ஷெரமி தொடர்ந்தும் இவ்வாறான விழிப்பூட்டல்  நிகழ்ச்சிகளை நடத்தும்.

பேபி ஷெரமியின் தயாரிப்புகள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு: www.babycheramy.lk இணையத்தை அல்லது https://www.facebook.com/BabyCheramy/ ஊடாக அவர்களின் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

END