புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’
தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
U.S. Soybean Export Council (USSEC) மூலம் செயற்படுத்தப்படும் ‘Right To Protein’ திட்டமானது, அதன் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘Solve With Protein’ (புரதம் மூலம் தீர்வு) எனும் தலைப்பை, 2024 பெப்ரவரி 27ஆம் திகதி கொண்டாடப்படும் புரத தினத்திற்கான கருப்பொருளாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள பொதுமக்கள், புரத உணவுகளை அணுகக்கூடிய வகையில் வழங்குதல், புரதம் நிறைந்த உணவுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைக்க, இந்த பிரசாரம் அழைப்பு விடுக்கிறது.
புரதமானது, ஒரு அத்தியாவசிய பெரும் போசணை உணவு எனும் புரிதல் இல்லாமை காரணமாக, போதியளவான புரதத்தை மக்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ‘Solve With Protein’ (புரதம் மூலம் தீர்வு) எனும் 2024 புரத தினத்தின் எண்ணக்கருவானது, ஆரோக்கியமான மற்றும் அதிக நெகிழ்வுத் தன்மை கொண்ட மக்களை உருவாக்குவதில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய செய்தியை பரப்புமாறு, வர்த்தகநாமங்கள், சிந்தனையாளர்கள், சமூகம் மற்றும் ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது. தினசரி உணவுகளில் சேர்க்கக்கூடிய, இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய புரத உணவு மூலங்கள் மற்றும் ‘போசணை பாதுகாப்பை’ செயற்படுத்துவதற்கான முயற்சிகளை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும், தீர்வுகளை முன்னிலைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
New Anthony’s Farms Pvt. Ltd நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரங்க குருகுலஆராச்சி இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னோடியான, பசுமை சான்றிதழ் பெற்ற கோழி உற்பத்தியாளரும் தெற்காசியாவில் நிலைபேறான U.S. Soy Label சான்றுப்படுத்தலை அறிமுகப்படுத்திய நிறுவனமும் எனும் வகையில், எமது நாட்டிற்குள் விவசாய விசேடத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உணவு தொடர்பான நிலைபேறான தன்மையை விருத்தி செய்வதற்கும் நாம் உறுதியுடன் உள்ளோம். புரத தினமான 2024 இல், Right To Protein இன் ‘Solve With Protein’ எனும் கருப்பொருளை ஏற்று செயற்பட நாம் முழு மனதுடன் இருக்கிறோம். இது, போசணை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுடன் ஒன்றிணைவதாக அமைகிறது. அந்த வகையில், தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம், தொழில்துறை வரையறைகளை மீள்வரையறை செய்யவும், கோழி வளர்ப்பு முறைகளில் புரட்சியை ஏற்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் நாம் முயற்சி செய்து வருவதோடு, அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகவும் நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்த மிகத் தீவிரமாக பங்களிக்கிறோம்.” என்றார்.
சமூக மருத்துவம், பொதுச் சுகாதார போஷாக்கு மற்றும் மருத்துவ போசணை தொடர்பான இலங்கை SARRC உணவு சங்கத்தின் தலைவர், மருத்துவ நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ (MD, MSc, MBBS) இது பற்றி குறிப்பிடுகையில், “சுகாதாரம் மற்றும் போசாக்கை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புள்ள ஒரு மருத்துவ நிபுணர் எனும் வகையில், ‘உணவுப் பாதுகாப்புக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம்’ மற்றும் உணவு தொடர்பான உதவியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட மூலோபாயத் திட்டம் 2023-2027 போன்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களை நான் பாராட்டுகிறேன். எனினும், இந்த முயற்சிகளுடன், எமது சமூகத்தில் போசணை தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். பொதுச் சுகாதாரத்தை பராமரிப்பதில் புரதத்தின் முக்கிய பங்கை ஏற்று, சரியான புரத உட்கொள்ளலின் முக்கியத்துவத்தைப் பற்றி தனிநபர்களுக்குக் கற்பிப்பது அவசியமாகும். புரதம் நிறைந்த உணவின் நன்மைகளைப் புரிந்துகொள்வதானது, சிறந்த சுகவாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதோடு, ஆரோக்கியமான மற்றும் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட இலங்கை சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்” என்றார்.
அமெரிக்க சோயாஅவரை ஏற்றுமதி கவுன்சிலின், U.S. Soy சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பான தெற்காசியா மற்றும் துணை சஹாரா ஆபிரிக்கா பிராந்தியத் தலைவர் தீபா கியானூலிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “U.S. Soy எனும் வகையில், உலகளாவிய போசணைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். உயர்தர, நிலைபேறான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் மற்றும் பொருட்களை வழங்கி, சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் செழிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் முன்னணியில் இருக்கிறோம். வணிகங்கள் மற்றும் நுகர்வோரின் பல்வகை சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதன் மூலம், உச்சபட்ச செயல்திறனுக்காக விநியோகச் சங்கிலியை நெறிப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ‘Right To Protein’ திட்டத்தின் உந்து சக்தியான, இவ்வருட #SolveWithProtein எனும் கருப்பொருளை நாம் பெருமையுடன் வரவேற்கிறோம். தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் ஆரோக்கியமான, புரத உணர்வுள்ள சமூகத்தை மேம்படுத்துவதில் தொழில்துறை பங்குதாரர்கள் மட்டுமல்லாது, தனிநபர்களாகிய நாமும் ஒன்றுபடுவதற்கு ஒரு பலம் வாய்ந்த அழைப்பு இதுவாகும்” என்றார்.
Right To Protein அமைப்பானது, 2024 ஆம் ஆண்டு புரத தினத்தை எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி கொண்டாடத் தயாராகி வருகின்றது. இங்கு, போசணை வல்லுனர்கள், உணவுத் துறை வல்லுநர்கள், சமையல்கலைஞர்கள், உணவு வர்த்தகநாமங்கள் மற்றும் இது பற்றிய ஆர்வம் கொண்ட பொதுமக்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து ஒவ்வொரு உணவிலும் புரதம் பற்றிய விழிப்புணர்வையும் நுகர்வையும் அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.
2024ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி, புரத தினத்தைக் கொண்டாடுவதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு Right To Protein அமைப்பு அழைப்பு விடுப்பதோடு, “Solve With Protein” (புரதம் மூலம் தீர்வு) என்பதை” நோக்கமாகக் கொண்டு, விழிப்புணர்வுடன் எமது அன்றாட வாழ்வில் போசணை குறைபாடுகளை எதிர்த்துப் போராடுமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறது
புரத தினம் மற்றும் இதில் நாம் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றிய மேலதிக தகவலுக்கு, https://righttoprotein.com/protein-day.html
Right To Protein பற்றி: ‘Right To Protein’ அமைப்பானது, சிறந்த போசணை, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு அவசியமான புரத உட்கொள்ளலின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்கான விழிப்புணர்வு பிரசாரமாகும். பல்வேறு வகையான புரத மூலங்களைப் பற்றிய பொது அறிவை உருவாக்கவும், பாரிய போசாணை பாதுகாப்பு இலக்குகளை அடையவும் இந்த பிரசாரம் எதிர்பார்க்கிறது. Right To Protein ஆனது, தமது நோக்கம் தொடர்பில் ஆர்வம் கொண்ட அதே எண்ணம் கொண்ட நிறுவனங்கள், அமைப்புகள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தனிநபர்களால் ஆதரிக்கப்படுகிறது. இப்பிரசாரமானது, முழுமையாக U.S. Soybean Export Council (USSEC) கவுன்சிலால் முன்னெடுக்கப்படுகிறது.