ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் வெள்ளி விருதினால் கௌரவிக்கப்பட்ட DIMO

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் வெள்ளி விருதினால் கௌரவிக்கப்பட்ட DIMO

சமீபத்தில் நடைபெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளில், வாகன சேவை பிரிவில் DIMO நிறுவனம் வெள்ளி விருதை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பிற்காக வெலிவேரியவில் உள்ள DIMO Logistics Centre இற்கு இவ்விருது வழங்கப்பட்டது. DIMO Logistics Centre ஆனது சுற்றுச்சூழல் தொடர்பான தாக்கங்களை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறது. சூரிய மின்கலத் தொகுதி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை பயன்படுத்துதல், நீர் சுத்திகரிப்பு தொகுதி மற்றும் மழைநீர் சேகரிப்பு தொகுதி ஆகியன, DIMO வெலிவேரிய மையத்தினால் பின்பற்றப்படும் ஒரு சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைககளாகும்.

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பங்களிப்பிற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு வாகனத் துறையில் முன்னோடி எனும் வகையில், ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளில் DIMO பெற்றுள்ள வெற்றியானது, சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் CEA தலைவர் சுபுன் எஸ் பத்திரகே ஆகியோர் முன்னிலையில் இவ்விருது வழங்கும் விழா இடம்பெற்றது. DIMO நிறுவனம் சார்பாக, நிறுவனத்தின்  இணக்க செயற்பாட்டு தலைவர் தனுஷா சந்திரசேகர, இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

END