குளோபல் பிராண்ட் விருதுகளில் சிறந்த குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் 2023 எனும் மகுடத்தை சூடிய பேபி செரமி

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy, பெருமைக்குரிய Global Brand Magazine UK இன் Global Brand விருதுகளில் ‘Best Baby Care Brand, Sri Lanka – 2023’ (சிறந்த குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம், இலங்கை – 2023) எனும் சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்று அதன் சிறப்பை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெற்றோரின் பாராட்டைப் பெற்ற, பாதுகாப்பான மற்றும் நம்பகமான குழந்தை பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதில் பேபி செரமி கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டு கருத்துத் தெரிவித்த, Hemas Consumer Brands நிறுவனத்தின் குழந்தை பராமரிப்பு – சந்தைப்படுத்தல் முகாமையாளர் அஸ்மரா மன்னன், “’Best Baby Care Brand, Sri Lanka – 2023′ எனும் விருதை UK Global Brand Magazine இடமிருந்து பெறுவதானது, குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளில் தரம் மற்றும் புத்தாக்கங்களில் இடைவிடாத கவனம் செலுத்தும் பேபி செரமிக்கு ஒரு சான்றாகும். உலகளாவிய அரங்கில் எமக்கு இவ்வாறான அங்கீகாரம் கிடைத்தமை தொடர்பில் பெருமை கொள்கிறோம். எமது நுகர்வோரின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

Global Brands Magazine என்பது உலகின் மிகப்பெரிய வர்த்தகநாம சஞ்சிகைகளில் ஒன்று என்பதோடு, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு விருது வழங்கும் அமைப்பாகும். இது தொழில்துறைகள் முழுவதிலும் உள்ள வர்த்தகநாமங்களை பக்கச்சார்பின்றி தெரிவு செய்வது தொடர்பில் நன்கு அறியப்படுகின்றது.

Global Brand Magazine UK இனால் வருடாந்தம் வெளியிடப்படும் Global Brand Awards ஆனது, வர்த்தகநாமங்கள் உலகில் சிறந்து விளங்குவதை காட்டும் ஒரு அளவுகோலாகும். இந்த விருதுகள், மொத்தமாக 28 பிரிவுகளில், உலகளாவிய ரீதியில் நிறுவப்பட்ட வர்த்தகநாமங்கள், நுகர்வோர் மத்தியில் கொண்டுள்ள நிலையை சரிபார்த்து, தெரிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. சில்லறை விற்பனை விருதுகள் (Retail Awards) பிரிவில் இவ்வருடம் பல்வேறு வகைகளில் சிறந்துவிளங்கும் பல்வேறு வர்த்தகநாமங்களை கண்டறிய நுணுக்கமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  இங்கு Global Brand Magazine UK இன் நடுவர் குழுவால் ஒரு விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதோடு, இதில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வர்த்தகநாமங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொதுவான தரவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. சிறந்த சேவையை வழங்குதல், இணையற்ற செயற்றிறனை  வழங்குவதை கொண்டாடும் வகையில், உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பிடும்படியான இந்த தேர்வுச் செயன்முறை அமைந்தது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் ஒரு பாரிய நோக்கத்தில் பேபி செரமி அண்மையில் களமிறங்கியது. இந்த உன்னத நோக்கமானது, பல வெற்றிகரமான திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. ‘குழந்தைக்கு பாதுகாப்பான உலகம்’ எனும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் திட்டமும் இதில் ஒன்றாகும். உள்ளீர்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி தொடர்பில் இது கவனம் செலுத்துகிறது. அத்துடன் பேபி செரமி சமீபத்தில் Baby Cheramy Safety Institute இனை அறிமுகப்படுத்தியது. இது குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மிக உயர்ந்த தரத்தில் புத்தாக்கமான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குதல் ஆகிய நோக்கத்தை கொண்டுள்ளது. இந்த நிறுவகம், குழந்தை பராமரிப்புத் தொழில்துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) வசதிகளைக் கொண்டுள்ளது.

மாற்றமடைகின்ற, தயாரிப்புகளின் பாதுகாப்பு தொடர்பான இயக்கவியலைத் தொடர வேண்டியதன் அவசியத்தை பேபி செரமி புரிந்துகொண்டமைக்கு இந்த நிறுவகம் ஒரு சான்றாகும். ஒரு முக்கிய நோக்கத்தை அடிப்படையாக் கொண்டு இயங்கும் இத்திட்டமானது, Safety Institute நிறுவகத்தால் கவனமாக வழிநடத்தப்படும் 8 படிகளைக் கொண்ட பாதுகாப்புச் செயன்முறையை அறிமுகப்படுத்தியது. இது எமது குழந்தைகளுக்கான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளில் உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த 8 படி பாதுகாப்புச் செயன்முறையானது, நுகர்வோருடன் இணைந்த கூட்டான தயாரிப்பு மேம்பாடு, மூலப்பொருட்களின் கவனமான தெரிவு, மூலப்பொருளின் தரம் மற்றும் பாதுகாப்பின் விரிவான மதிப்பீடு, பொதியிடல் மற்றும் வடிவமைப்பு பற்றிய ஆய்வு, மருத்துவ ரீதியான மதிப்பீடு மற்றும் சோதனை, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி நடைமுறைகள், தயாரிப்பு தரம் மற்றும் அதன் ஆயுளை மதிப்பீடு செய்தல், தொடர்ச்சியான மேம்பாடுகள் மற்றும் மதிப்பீடு ஆகியன இதில் அடங்குகின்றன.

Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர குறிப்பிடுகையில், “இந்த சர்வதேச அங்கீகாரமானது, எமது நுகர்வோருக்கு 60 வருடங்களுக்கும் மேலாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமான குழந்தைப் பராமரிப்பு பொருட்களை வழங்குவதிலான பேபி செரமியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். சந்தையில் முன்னணில் உள்ள, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் பேபி செரமியின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்ற, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்,” என்றார்.

“Best Baby Care Brand, Sri Lanka – 2023” விருதைப் பெற்ற பேபி செரமியின் சாதனையானது, சிறந்து விளங்குதல், புத்தாக்கம், அசைக்க முடியாத நுகர்வோர் திருப்தி ஆகியன தொடர்பான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது. பேபி செரமி, குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் துறையில் அதன் இடத்தை தொடர்ச்சியாக உயர்த்தி வருவதன் அடிப்படையில், இந்த மதிப்புமிக்க பாராட்டானது, தொழில்துறையில் புதிய தரத்தை அமைத்து, மாற்றத்தை அடைவதற்கான ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது.