‘X70 Plus’ மற்றும் ‘T2 Dark Warrior’ வெளியீட்டுடன் இலங்கையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் Jetour
நவம்பர் 20 – 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் Colombo Motor Show 2026 நிகழ்வில், Jetour X70 Plus, Jetour T2 Dark Warrior ஆகிய இரண்டு புதிய SUV வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் தனது இருப்பை Jetour மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகங்கள் வர்த்தகநாமத்தின் உள்ளூர் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிப்பதுடன், பல்வேறு நுகர்வோர் விருப்பங்களையும் வாழ்க்கை முறை அனுபவங்களையும் பூர்த்தி செய்வதற்காக அதன் தயாரிப்புகளின் விரிவாக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
2025 ஆம் ஆண்டில் இலங்கைச் சந்தையில் நுழைந்ததிலிருந்து, Euro Motors (Pvt) Ltd நிறுவனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் Jetour, தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பில் மூலோபாய ரீதியான முதலீடுகள் மூலம் தனது இருப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, அநுராதபுரத்தில் தனது புதிய 3S (Sales, Service and Spare Parts) விற்பனை, சேவை, உதிரிப் பாகங்கள் வசதிகளின் ஆரம்பத்துடன், அதனுடன் இணைந்ததாக கொழும்பு சிட்டி சென்டரில் Euro Motors தனது இரண்டாவது Jetour காட்சியறையை அண்மையில் திறந்து வைத்தது. இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், கண்டி, யாழ்ப்பாணம், குருணாகல், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் புதிய காட்சியறைகளுக்கான இடங்களைத் திட்டமிட்டு, தனது நாடளாவிய வலையமைப்பை மேலும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதோடு, Jetour இன் முதன்மை வாகன மாதிரியையும் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து Euro Motors நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர் இம்தியாஸ் தெரிவிக்கையில், “Jetour இலங்கையில் ஒரு வலுவான இருப்பை நிறுவியுள்ளது. Jetour X70 ஆனது அதன் முதலாவது ஆண்டிற்குள்ளேயே சந்தையின் அதிகம் விற்பனையாகும் ஏழு இருக்கைகள் கொண்ட SUV களில் ஒன்றாக மாறியுள்ளது. Jetour T2 வாகனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி, இலங்கையின் அதிகம் விற்பனையாகும் SUV ஆக உருவெடுத்துள்ளது. புதிய Jetour T2 Dark Warrior இந்த வெற்றிகரமான மாதிரியுடன் ஒரு அற்புதமான இணைப்பாகும். இது எமது தயாரிப்பு வரிசைகளையும், உள்ளூர் சந்தையுடன் எதிரொலிக்கும் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும் மேலும் எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
Jetour X70 Plus ஆனது, 7 வேகத்திலான கியர் பொக்ஸுடன் இணைக்கப்பட்ட, 1.5L turbocharged எஞ்சினால் இயக்கப்படும், பல்வகைத் தன்மை கொண்ட, 7 இருக்கைகளுடன் கூடிய SUV ஆகும். இது செயல்திறன் மற்றும் சிறந்த எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான சமநிலையை வழங்குகிறது. ADAS Level 2 இனை கொண்டுள்ள இது, இப்பிரிவில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அறிமுக விசேட சலுகையாக, X70 Plus இன் விலை ரூ. 19.5 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Jetour T2 Dark Warrior ஆனது T2 வகைகளில் மிகவும் உறுதியான மற்றும் தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. இதிலுள்ள மிடுக்கான front grille, sporty body kits மற்றும் எளிதான அணுகலுக்காக மின்சாரத்தால் இயக்கப்படும் பக்கவாட்டு படிகள் முக்கிய கவனத்தை பெறுகின்றன. இந்த மேம்பாடுகள் உற்பத்தியாளரால் நேரடியாக வழங்கப்பட்ட அசல் Jetour பாகங்களைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப பாகங்களைத் தெரிவு செய்து, தமது வாகனங்களைத் தனிப்பயனாக்கும் நெகிழ்வுத் தன்மைக்கான வாய்ப்பையும் கொண்டுள்ளனர்.
இலங்கையில் Jetour இன் அங்கீகரிக்கப்பட்ட முகவரான Euro Motors, உற்பத்தியாளர் ஆதரவுடனான உத்தரவாத ஏற்பாடுகள், அசல் (genuine) உதிரிப் பாகங்கள் மற்றும் தொழில்முறை ரீதியான விற்பனைக்குப் பிந்தைய சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கிறது. இது நம்பகமான வாகன உரிமை அனுபவத்திற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
கொழும்பு மோட்டார் ஷோ வாகனக் கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள் Jetour T1 மற்றும் T2 உடன் இணைந்ததாக, புதிதாக அறிமுகமான இரண்டு மாதிரிகளையும் கண்டறிந்து அனுபவிக்கும் வாய்ப்புகளை பெற்றனர். அதே நேரத்தில் விசேட கண்காட்சி சலுகைகள், தெரிவு செய்யப்பட்ட வங்கி மற்றும் நிதிப் பங்காளர்கள் மூலம் நிதி ஏற்பாடுகள் மற்றும் வாகன முன்பதிவு வாய்ப்புகளையும் ஆராய்ந்து, அறிந்து, பெற்றுக் கொண்டனர்.
விரிவடைந்து வரும் வாகன வகைகள், முகவர் வளர்ச்சி மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கென திட்டமிடப்பட்ட புதிய மாதிரிகளின் அறிமுகங்களுடன், Jetour மற்றும் Euro Motors ஆகியன, இவ்வர்த்தகநாமத்தின் இருப்பை வலுப்படுத்துவதிலும் இலங்கை SUV கொள்வனவாளர்களுக்கு மேலும் பல தெரிவுகளைக் கொண்டு வருவதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றன.