VIVO  V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்!  – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

VIVO V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்! – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாகமேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றதுகடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதுஉண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமானஅழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர்இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றனஉதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும்அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும்பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறனஇருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது.

மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளதுஇதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும்.

இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள்.

Fig 1 – படம் – பிரியந்த பண்டார

பிரியந்த பண்டார ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார்.  அவர் VIVO V21 5G இனைப் பயன்படுத்தி பல அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் ” VIVO V21 5G சந்தையில்  உள்ள மிக அற்புதமான ஸ்மார்ட்போன் ஆகும். இயற்கை காட்சிகள் மற்றும் கட்டிடங்கள்  போன்றவற்றை புகைப்படமாக்கும் போது கெமராவின்  Angle எனும் விடயம் பெரும் சவாலாக அமைகின்றது. எனினும் V21 5G இல் உள்ள wide angle நுட்பத்தின் மூலம் பாரிய அளவிலான பரப்பினை இலகுவாக புகைப்படம் எடுக்க முடிகின்றமை சிறப்பான விடயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.              

Fig 2 – படம் – ரஃபேலா பெர்ணான்டோ

அதேபோன்று, ரஃபேலா பெர்ணான்டோ   எனும்  முன்னணி பெஷன் புகைப்படக் கலைஞர் VIVO V21 5G குறித்து கருத்து தெரிவிக்கையில் “VIVO V21 5G ஆனது 7.38mm ultra slim AG வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இதிலுள்ள கெமரா மற்றும் செயலி என்பன மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. இதிலுள்ள  AI night potrait மிக துல்லியமாக புகைப்படம் எடுக்க உதவி புரிவதோடு பிரகாசமான ஒளி மற்றும் நுண்ணிய விடயங்களைக்கூட இலகுவாக புகைப்படம் எடுக்க உறுதுணையாய் அமைகின்றது. எனது தொழிலைப் பொருத்தவரையில் மிக நுணுக்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து அதனை சிறப்பாக காட்சிப்படுத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும்” என தெரிவித்தார்.

Fig 3 – படம் – உபுல் நெலுந்தெனிய

உபுல் நெலுந்தெனிய என்பவர் Travel and abstract  புகைப்படக் கலைஞர் ஆவார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் “தொழில்முறை கெமராக்களில் உள்ள DSLR மற்றும் lenses என்பன சிறு விடயங்களைக்கூட துல்லியமாக படம் பிடிக்கும். எனினும் இந்த விடயமே ஸ்மார்ட்போன்களுக்கு சவாலாக காணப்பட்டது. ஆயினும்  VIVO V21 இல் உள்ள Super macro mode, தொழில்முறை கெமராக்களுக்கு நிகராக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.