Startup Genome யின் உலகளாவிய தொடக்க தொகுதி 2021 அறிக்கையின் பார்வை ஊடான இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு

Startup Genome யின் உலகளாவிய தொடக்க தொகுதி 2021 அறிக்கையின் பார்வை ஊடான இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு

உலகளாவிய புத்தாக்க கொள்கை ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான Startup Genome ஆனது, உலகளாவிய தொடக்க தொகுதி அறிக்கையின் (Global Startup Ecosystem report – GSER) 2021 ஆம் ஆண்டுக்கான பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில், இலங்கையின் தகவல் தொடர்பாடல் (ICT) முகவரான ICTA உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள, இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு தொடர்பான முக்கிய உள்ளார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளதன் மூலம் அதன் எதிர்கால முன்னேற்றமானது எவ்வாறு அமைய வேண்டுமென இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. வருடாந்தம் வெளியிடப்படும் இந்த அறிக்கையானது,  280 தொழில்முனைவோர் புத்தாக்க தொகுதி அமைப்புகளை பற்றியும், 3 மில்லியன் தொடக்கங்கள் மற்றும் உலகின் முன்னணி 140 தொடக்க தொகுதி அமைப்புகளின் தரவரிசை, பிராந்திய ரீதியான உள்ளார்ந்த தகவல்களுடன் கண்டங்கள் ரீதியாக ஆராயப்பட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தொடக்கங்களின் அடிப்படையில் நோக்கும்போது, GSER ஆனது மிகவும் விரிவானதும் பரவலாக வாசிக்கப்படுகின்றதுமான ஒரு ஆய்வு என அறியப்படுகிறது.

இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் நிறுவனமான ICTA, உள்ளூர் தொடக்க தொகுதி அமைப்பு தொடர்பில், பயன்படுத்தப்படாத திறன்களை ஆராய்ந்து அதனை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியும் பொருட்டு, Startup Genome உடனான உறுப்பினர் ஒப்பந்தத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு முதல் இணைந்து செயற்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பை ஆராய்ந்து, உள்நாட்டிலுள்ள திறமையாளர்களை வளர்ப்பதற்கும், வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், தொடக்க தொகுதிகள் நீடித்து நிலைப்பதற்கு சாதகமான சர்வதேச தொடர்புகளை மேம்படுத்துவதற்குமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், தொடக்க தொகுதிகளின் வளர்ச்சி வேகமடைந்துள்ளது என்பதை, இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் நிறுவப்பட்டு அது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள், அதற்கென இயற்றப்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் ஐந்து புதிய தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவுவதற்கான அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, தொடக்க நிதிக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஒரு தொடக்கத் வணிகத்தை ஆரம்பிப்பது தொடர்பில், இப்பிராந்தியத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதை இவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.  அரசாங்க ஊக்கத்தொகை மற்றும் தொடக்க தொகுதி அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றன, தொடக்கத் தொகுதி அமைப்பின் விரைவான வளர்ச்சியை வலுவூட்டும் விடயங்களாக அமைந்துள்ளன.

மேலும் இவ்வறிக்கையானது, தூய்மை தொழில்நுட்பம் (Cleantech), விவசாய தொழில்நுட்பம் (Agtech) மற்றும் புதிய உணவு (New Food) துறைகள் போன்ற துணை துறைகளின் திறனின் அளவு, அதனை ஆதரிக்கும் வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடக்க செயல்பாடுகளானவை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் பங்குச் சந்தை, பெருநிறுவனங்களுக்கான குறைக்கப்பட்டுள்ள வருமான வரி, அறிவாற்றல் ரீதியில் இயக்கப்படும் பொருளாதாரம் ஆகியவற்றுடன் இணைந்தவாறு, திறமையாளர்களை இலகுவாக பெறக் கூடியதாக உள்ளதன் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில்  இலங்கை 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதுடன், வழங்கப்படும் ஈடுபாட்டுக்கு கிடைக்கும் விளைவின் (Bang for Buck) அடிப்படையில், ஆசிய தொடக்க தொகுதி அமைப்புகளில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள், தொடக்க தொகுதியானது இலங்கையில் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையிலிருந்து கண்டறியப்பட்ட முக்கிய விடயங்களில், 2021ஆம் ஆண்டில் இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பின் மொத்த பெறுமதியானது கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% வளர்ச்சியுடன் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை உருவாக்கியுள்ளது. மொத்த ஆரம்ப கட்ட நிதி 26 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சராசரி தொடர் A சுற்று – 1.06 மில்லியன் டொலராகவும், சராசரி மூல சுற்று – 50,000 அமெரிக்க டொலராகவும், மென்பொருள் பொறியியலாளர் சம்பளம் – 6,000 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளன.

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது தொடக்க தொகுதி அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முழுமையானதும் நம்பகமானதுமான அணுகுமுறையை இலங்கை செயற்படுத்தி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப பூங்காக்கள், தொடக்க நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் உட்கட்டமைப்பொன்றை வழங்குதல், ஒரு உறுதியான நிதி நிலையை உருவாக்குதல், தொழில்முனைவோர் வீசா, பிராந்திய தொடக்க மையங்களுக்கான வாய்புகளை எளிதாக்குதல் உள்ளிட்ட பல முன்முயற்சிகள் ஆனவை, எமது தொடக்க தொகுதி வளர்ச்சியில் செயல்படுத்தப்படும் மூலோபாயங்களாகும்.” என்றார்.

ICTA தலைவர் ஓஷத சேனாநாயக்க கருத்து வெளியிடுகையில், “உலகளாவிய தொடக்க தொகுதி அறிக்கை (GSER) இற்கு அமைய, இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பினது ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் செயல்திறனானது கொவிட் தொற்றுநோய் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தொழில்நுட்ப தொடக்க மேம்பாட்டுக்கு வசதிகளை வழங்கும் அமைப்பு எனும் வகையில், ICTA தொடர்ந்து Startup Genome உடன் நெருக்கமாக இணைந்து, தொடக்க தொகுதி அமைப்பை வலுப்படுத்தவும் அதனைத் துரிதப்படுத்துவதற்காகவும் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் வலுவான ஒத்துழைப்புடன் இணைந்து செயற்படும். இலங்கையில் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான உலகளாவிய நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் தொடக்கத் தொகுதி அமைப்பின் செயற்றிறன் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், உள்நாட்டு தொடக்க தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.

இலங்கையை அடைய விரும்பும் சர்வதேச வணிகங்களுக்காக, பல்வேறு சலுகைகளை இலங்கை வழங்குகின்றது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பான, பெருநிறுவன வரி 0% என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் நிறுவனங்களுக்கு 5 தொடக்கம் 10 வருடங்களுக்கான வரி விலக்கு சலுகையும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, பூச்சிய மூலதன வருமானம் மற்றும் பூச்சிய வருமானப்பங்கு பிடித்தம் வரி (dividend withholding tax) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, அண்மையில் ICTA ஆனது PwC Sri Lanka உடன் இணைந்து உருவான கூட்டாண்மை மூலம், ஒரு மாற்று கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு  உருவாக்கப்பட்டது. இக்கட்டமைப்பு, குறிப்பாக உள்நாட்டிலுள்ள நிதி நிறுவனங்களின் மூலம், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிதி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத் தொகுதி நட்பு அரசாங்கத் திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்முதல் கொள்கையின் அடிப்படையில், அரசாங்கத்திற்கு அவசியமான ரூபா 2 மில்லியனுக்கு குறைந்த பெறுமதி கொண்ட எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளின் ஏலமும், தொழில்நுட்ப தொடக்கங்களுக்கே பிரத்தியேகமாக வழங்கப்படும். அத்துடன் 2021 ஆம் ஆண்டில் Digital Nomad வீசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டவர்கள் தொலைதூரத்தில் இருந்தவாறு இலங்கையில் ஒரு வருடம் பணியாற்ற முடியும்.

ICTA ஆனது, 2024ஆம் ஆண்டுக்குள் 1,000 தொழில்நுட்ப தொடக்கங்களை நிறுவுவதற்கான அதன் நோக்கத்தை அடையும் பொருட்டு, அது Startup Genome, அரச நிறுவனங்கள், அதன் கூட்டாளர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

ICTA பற்றி

இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் நிறுவனமான ICTA, இலங்கையின் தொடக்கத் தொகுதி அமைப்பை உரிய வகையில் உருவாக்குவதில் ஊக்கியாக செயற்பட்டு வருகிறது. ICTA அதன் டிஜிட்டல் பொருளாதார தூணின் கீழ், தொடக்க தொகுதி மேம்பாடான SBU யில் Spiralation உள்ளிட்ட அனைத்து தொடக்கங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கும் உதவியளிப்பதில் முன்னோடியாக திகழ்கின்றது. நாட்டில் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான புதிய வணிக முயற்சிகளை மேம்படுத்துதல், தொடக்கங்களினால் வெளியிடப்படும் இறுதி வெளியீடுகளை அதிகரித்தல், தொடக்கங்களின் தரம், ஆரம்ப கட்ட நிதி, தேவையான அறிவு உள்ளிட்ட விடயங்கள் மூலம் ஒரு வெற்றிகரமான வணிகத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் நோக்கில் தொடக்க தொகுதி மேம்பாட்டு திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.