Singer Fashion Academy இன் பெஷன் டிசைனிங் சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரல்
60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, இலங்கையின் பெஷன் துறையில் மிகவும் விரும்பப்படும் தகுதியான தனது பெஷன் டிசைன் சான்றிதழ் கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Chartered Society of Designers (CSD)இனால் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்றதாகும்.
ஐக்கிய இராச்சியத்தின் Chartered Society of Designers (CSD) இனால் கற்கை நெறி சான்றளிப்பு நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்ற இலங்கையில் உள்ள ஒரே ஒரு கற்கை நிலையம் இது என்பதுடன், தொழில்முறை வடிவமைப்பில் தலைசிறந்து விளங்கும், வடிவமைப்புத் தொழிலுக்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் அமைப்பு இதுவாகும். பெஷன் டிசைனிங்கில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தெளிவான பாதையுடன் சர்வதேச அங்கீகாரத்தை அடைய இக் கல்வி நிலையம் உதவுகிறது. பெஷன் டிசைனிங் சான்றிதழ் கற்கையின் செப்டம்பர் 2020 இற்கான மாணவர்கள் சேர்ப்பானது, நெகிழ்வான ஒன்லைன் கற்றல் முறைக்கு ஏற்றவாறான கற்கை அலகுகள் மற்றும் ஒன்லைன், நேரடியாக நடைபெறும் வகுப்புகளின் சரியான கலவையை கொண்டமையவுள்ளது.
ஒன்லைன் வகுப்புகள் Microsoft Teams தளம் ஊடாக இடம்பெறுமென்பதுடன், வகுப்பைறையில் நடைபெறும் செயல்முறை சார்ந்த அமர்வுகளுக்கு மாணவர்கள் நேரடியாக பங்குபற்ற வேண்டும். அனைத்து ஒன்லைன் விரிவுரைகளின் பதிவுகளும் மாணவர்களின் மேலதிக குறிப்புகளுக்காக Microsoft Teams இல் கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு இந்த கற்கை நெறியைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்காக தொடர் அறிமுக அமர்வுகளை Singer Fashion Academy நடாத்தும். இந்த அமர்வுகள் ZOOM வழியாக நடாத்தப்படும். இது மேலும் பாடநெறி மற்றும் அதன் தொழில் வாய்ப்புகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு முன் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த இலவச விழிப்புணர்வு அமர்வுகளுக்கான பதிவை Singer Fashion Academy பேஸ்புக் பக்கம் மூலமாகவோ அல்லது துரித எண்ணுக்கு அழைப்பதன் மூலமாகவோ மேற்கொள்ளலாம்: 0766177177. மேலும், பெஷன் டிசைனிங் கற்கைநெறியின் சான்றிதழுக்கு பதிவுசெய்யும் மாணவர்கள் ஒரு இலவச பெஷன் டிசைனிங் கருவி பெட்டியையும் பெறுவதோடு, அதனை அவர்கள் மாதிரி தயாரிப்பிற்கு பயன்படுத்தவும் முடியும்.
இந்த பெஷன் டிசைனிங் சான்றிதழ் ஒரு திடமான வாழ்க்கைப் பாதைக்கான முதற்படியாகும். ஆறு மாத கால சான்றிதழானது அடிப்படை கற்கைநெறியாகும். இதை பூர்த்தி செய்ததுடன் மாணவர்கள் Diploma மற்றும் Advanced Diploma இற்கான தகுதியைப் பெறுவார்கள். பெஷன் டிசைனிங்கில் சான்றிதழ் கற்கைநெறிக்கு வருடாந்தம் இரு முறை மாணவர்கள் உள்ளெடுக்கப்படுகின்றனர். இது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடம்பெறுகின்றது. க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களிலும் C சித்திகள் பெற்ற மாணவர்கள் இந்த கற்கைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பெஷன் டிசைனிங் Diploma (ஓராண்டு கற்கை) மற்றும் பெஷன் டிசைனிங் Advanced Diploma (ஓராண்டு கற்கை) ஆகியவை ஐக்கிய இராச்சிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பல்கலைக்கழக கற்கையின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சமமாகும். பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு Singer Fashion Academyலிருந்து வழங்கப்படும் சான்றிதழுக்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்தின் Chartered Society of Designers (CSD) வழங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
விரிவான செயன்முறை அமர்வுகள், தொழில் திறன்களில் தேர்ச்சி, தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் புகழ்பெற்ற விரிவுரையாளர்கள், தனிப்பயனாக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வுகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாடத்திட்டத்திலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை கல்வியகம் உறுதி செய்கிறது. எனவே, இலங்கை பெஷன் தொழிற்துறைக்கு இந்த கல்வியகத்தின் பங்களிப்பு கணிசமானது. Singer Fashion Academyயின் ஒட்டுமொத்த பங்களிப்பு குறித்து Singer Business School இன் தலைவர் கோஷித்த பெரமுனுகமகே, கருத்து தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக, பெஷன் டிசைனிங்கில் ஆர்வமுள்ள தனிநபர்களை எம்மால் தொழில் வல்லுநர்களாக மாற்ற முடிந்தது. இதனால்தான் தொடர்ச்சியான சவால்கள் இருந்தபோதிலும், எங்கள் கற்கை நெறிகளில் சேர ஆவலுடன் காத்திருக்கும் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்துமான மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாணவர்கள் பெஷன் டிசைனிங்கில் தொழில் நிபுணர்களாக மாறுவதற்கு அவர்களை தயார்படுத்தும் எங்கள் வாக்குறுதிக்கு நாம் உண்மையாக இருக்கின்றோம். மேலும் எங்கள் கற்கைகள் மூலம் சர்வதேச அளவிலான அனுபவத்தையும் அங்கீகாரத்தையும் வழங்க நாங்கள் எப்போதும் விரும்புகிறோம், என்றார்.
தற்போது Singer Fashion Academy, 20 வெவ்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றது, இதில் 03 டிப்ளோமாக்கள், 08 சான்றிதழ் கற்கைகள் மற்றும் 11 குறுகிய கால கற்கை நெறிகள் ஆகியன உள்ளடங்குகின்றன. அதன் கிளைகள் நாடுமுழுவதும் 65 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாடத்திட்டங்களை வழங்குவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் இருந்தே கற்கை நெறியை இது வாய்ப்பளிக்கின்றது. Charted Society of Designers, UK இன் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலுக்கு மேலதிகமாக இதன் பெருமளவிலான கற்கைகள் இலங்கை Tertiary and Vocational Education Commission (TVEC) இனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெஷன் டிசைனிங் சான்றிதழ் கற்கைநெறி மற்றும் அதற்கு பதிவுசெய்யும் செயல்பாட்டு பற்றிய மேலதிக தகவல்களை [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ அல்லது Singer Fashion Academy பேஸ்புக் பக்கத்தின் மூலமாகவோ பெறலாம்.