PwC உடன் ICTA இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு அறிமுகம்

PwC உடன் ICTA இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு அறிமுகம்

இலங்கையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான உச்ச நிறுவனமான, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ICTA,  PricewaterhouseCoopers (Pvt) Ltd. Sri Lanka உடன் இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கடன் வழங்கும்போது கடன் வழங்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான, குறைந்தபட்ச பிணையுடன் கடன் வசதிகளைப் பெறும் ஒரு புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே, ICTA பிரதான டிஜிட்டல் பொருளாதார உத்தியோகத்தர் அநுர டி அல்விஸ், Deals, PwC Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் காவிந்த வீரகோன், DFCC வங்கியின் பிரதான  இடர் அதிகாரி அசோக் குணசேகர, NDB Bank, SME, மத்திய சந்தை மற்றும் வர்த்தக வங்கியின் துணைத் தலைவர் இந்திக ரணவீர, இப்பணிக்கான மதிப்பீட்டு செயல்முறையை வெற்றிகரமாகச் செய்த தொழில்நுட்ப நிறுவனமான Paymedia (Pvt) Ltd நிறுவனத்தின் நிறுவுனர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி கனிஷ்க வீரமுண்ட ஆகியோரின் பங்குபற்றுதலுடனான நிகழ்வில் இது அறிமுகம் செய்யப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு அவசியமான நிதியை பெற்றுக் கொள்வது ஒரு பாரிய சவாலான விடயமாகும். குறிப்பாக பாரம்பரிய கடன் வழங்கல் மதிப்பீட்டு முறைகளுக்கமைய, கடனொன்றை பெறுவதற்காக நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கணக்கிடும்படியான பிணையத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதுடன், வணிக கடனுக்கு தகுதி பெறுவதற்காக பௌதீக பிணைகளை சமர்ப்பிக்கவும் வேண்டும். அத்துடன், தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பீடானது, பாரம்பரியமான கடன் மதிப்பீட்டு கட்டமைப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதால், தொழில்நுட்ப நிறுவனத்தின் தகுதிகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பிடுவதில் உள்ளார்ந்த குறைபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டமைப்பானது, பௌதீக பிணைகள் அடிப்படையிலான கடன்களைக் கையாளும் பாரம்பரிய கட்டமைப்பின் மாற்று வழிமுறையாக அமையும். அந்த வகையில், இப்புதிய கட்டமைப்பானது பௌதீக பிணைகள் அடிப்படையிலான கடன்களைக் கையாளும் பாரம்பரிய கட்டமைப்பின் மாற்று வழிமுறையாக அமையும். குறிப்பிட்ட கடன் மதிப்பீட்டு கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக கடன் சுட்டியை பெறவும், கடன் தகுதியை நிரூபிக்கவும் உதவுவதுடன் நிறுவுனர், சந்தை, தயாரிப்பு, நிதி ஆகியவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் சுட்டி தீர்மானிக்கப்படுகிறது. இப்புதிய கட்டமைப்பானது நிறுவுனர், சந்தை, தயாரிப்பு, நிதி ஆகிய நான்கு தூண்களை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவர்களுக்கு மிகவும் பொருந்தும் வகையில், எண்ணிக்கை மற்றும் தரம் ஆகிய காரணிகளை மதிப்பீடு செய்ய வழி வகுக்கின்றது.

.இபுதிய கட்டமைப்பை நான்கு தூண்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது; நிறுவனர், சந்தை, தயாரிப்பு மற்றும் நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவர்களுக்கு மிகவும் பொருத்தமான அளவு மற்றும் தரமான காரணிகளை மதிப்பீடு செய்ய வழங்கியுள்ளது.

Calcey Technologies (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள கருணாரத்ன, Lankan Angel Network நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி, NDB Investment Bank Limited நிறுவனத்தின் தலைவர் – காப்பரேட் நிறுவன பிரதான ஆலோசனை அதிகாரி, Cemex Software(Pvt.)Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் வெலிங்டன் பெரேரா, ZMessenger (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி செல்வி ஜயோமி லொக்குலியன ஆகியோரைக் கொண்ட ஒரு தொழில்துறை முன்னணி வழிநடத்தல் குழுவின் உரிய பங்களிப்பு மற்றும் ஆலோசனையுடன் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டமைப்பைப் பற்றி ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே தெரிவிக்கையில், “IT துறையின் உச்ச அமைப்பான ICTA, இப்புதிய கடன் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது வளர்ந்து வரும் மற்றும் தற்போதுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கு உதவும் வகையிலான, சரியான தருணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அணுகுமுறையாகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கும் நேரத்தில், அவற்றின் மிகப்பெரிய ஏற்றுமதித் திறனையும் கருத்திற் கொண்டு, இத்தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவியை வழங்குவது மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. இம்மாற்றுக் கடன் மதிப்பீட்டு செயன்முறையானது, அடிப்படை தகைமைகளைப் பூர்த்தி செய்த எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் தனிப்பட்ட முதலீடு அல்லது நிதி மூலதனத்தின் மீது தங்கியிருக்காமல், கடன் பெற தகுதியுடையவர்கள் என்பதை உறுதி செய்யும்.” என்றார்.

இப்பொறிமுறையை மேலும் நெறிப்படுத்தும் வகையில் பல்வேறு வங்கிகளின் கடன் மதிப்பீட்டு அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் இக்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயல்முறை முழுவதும் மிகவும் உறுதுணையாக இருந்த வங்கிகளில், Seylan Bank, DFCC Bank, Union Bank, NDB ஆகிய வங்கிகள், கடன் வழங்கலில் தொழில்நுட்ப நிறுவனங்களை மதிப்பிடும்போது இப்புதிய பொறிமுறைக் கட்டமைப்பைக் கருத்தில் கொள்வதற்கான தமது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில், ICTA யின் பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி அநுர டி அல்விஸ் தெரிவிக்கையில், “தொழில்நுட்பத் துறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். அதிகளவான வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் இதில் உள்ளன. ஆனால் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் பௌதீக பிணையமின்மை காரணமாக கடன்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கொவிட்-19 தொற்றுநோயானது, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் வளர்ச்சியை குறிப்பிடும் அளவில் தடம் புரட்டியுள்ளது. இப்பின்னணியில், PwC உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய கட்டமைப்பானது? தொழில்நுட்பத் துறையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இப்புதிய கட்டமைப்பை வடிவமைக்க எம்முடன் கூட்டுச் சேர்ந்தமைக்காகவும், முழு செயன்முறையையும் வெற்றிபெறச் செய்வதில் வழிநடத்தல் குழுவின் நிபுணர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் PwC இற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

Deals, PwC Sri Lanka பணிப்பாளர் காவிந்த வீரகோன் தெரிவிக்கையில், “தொழில்நுட்ப நிறுவனங்கள் பொதுவாக வங்கிகளால் குறைவாகவே மதிப்பிடப்படுகின்றன. அவை இந்த வணிகங்களுக்கு நிதி இடைவெளியை உருவாக்குகின்றன. PwC உடன் இணைந்து ICTA இப்பெறுமதிப்புமிக்க முன்முயற்சியை முன்னோடியாகக் கொண்டுவந்துள்ளமை தொடர்பில், நாம் நன்றி தெரிவிக்கிறோம். இக்கட்டமைப்பை உருவாக்க PwC ஒரு குறுக்கீட்டு செயல்பாட்டு நிபுணர்கள் மூலம், ஒரு ஆழமான வங்கித் துறையின் நுண்ணறிவைக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தின் உயர் தாக்கத்தை கொண்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்கு உதவும் வகையில், அந்நிறுவனங்களுக்கு நெகிழ்வான மற்றும் புதுமையான நிதி வசதிகளை வழங்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இக்கட்டமைப்பானது ஒரு ஊக்கியாக செயல்படுமென்று நாம் நம்புகிறோம்.” என்றார்

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நிதி சார்ந்த தொழில்நுட்ப (Fin-Tech) நிறுவனமான PayMedia வின் முக்கியத்துவத்தை விளக்கி, NDB யிடமிருந்து அதற்கு கடன் வழங்கப்பட்டமை தொடர்பில், அதன் நிறுவுனர் கனிஷ்க வீரமுண்ட தெரிவிக்கையில், “நீங்கள் சொந்த நிறுவனமொன்றைத் ஆரப்பிப்பது ஒரு அச்சுறுத்தலான விடயமாக இருந்தபோதிலும், அது பலனளிக்கும் செயலாகும். எம்மைப் போன்ற இலங்கையில் ஒரு தொழில்நுட்ப ஆரம்பத்தை பெறும் நிறுவனத்திற்கு, ஒரு உள்ளூர் வங்கியிடமிருந்து கடன் வழங்கப்படுவது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது ஏனைய இவ்வாறான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலையிலுள்ள நிறுவனங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அவ்வாறில்லையெனில் தங்களது வணிகத்திற்காக கடனுதவிகளை பெற, பங்குகளை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது பிணைகளை வழங்க வேண்டும். ” என்றார்.

கனிஷ்க மேலும் தெரிவிக்கையில், “இம்முழுச் செயன்முறையும், COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது இடம்பெற்றது. ஒரு வணிக முன்மொழி திட்டத்துடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி எம்மிடம் கேட்கப்பட்ட செயன்முறை மிகவும் நேரடியாக அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து, கடனைப் பெறுவதற்காக எமது நியாயத்தை முன்வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். 3 வாரங்களுக்குள், எமக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடனும் வழங்கப்பட்டது. ” என்றார்.

ICTA பற்றி

இலங்கையை டிஜிட்டல் முறையில் உள்ளடக்கிய நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குடன், நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் நிறுவனமான ICTA இலங்கையின் முன்னோடியான நிறுவனமாகும். ICTA இனது டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்திற்கு இணங்க, 2010 முதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொழில் முனைவோர் கலாச்சாரம், வழிநடாத்தல், சந்தை அணுகல், ஆரம்ப கட்ட நிதி, ஆலோசனை, ஆரம்ப வழிகாட்டல்களை ஊக்குவிப்பதன் மூலம் தொடக்க நிலைய அமைப்புகளின் வளர்ச்சிக்கு ICTA உதவியளித்து வருகிறது. இது தவிர தடைகளை நீக்குதல், கடன் கட்டமைப்பு, startupSL தளம், தொடக்க நிறுவனங்களுக்கு அரசாங்க மென்பொருள் உதவிகள் போன்ற முன்முயற்சிகளை, இலங்கையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான வணிகங்களை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தி, நாட்டின் அனைத்து தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கும் ஒரு பெரும் சொத்தாக திகழும் நிறுவனமாகும். மேலதிக விபரங்களுக்கு [email protected] இனை அணுகவும்.

ICTA தொடர்பான மேலதிக தகவலுக்கு, icta.lk இனைப் பார்வையிடவும்.