PRISL வருடாந்த பொதுக்கூட்டம் தலைமுறைகளை இணைக்கும் ஒரு முக்கிய தருணத்தை குறிப்பதோடு, விசேடத்துவத்தை ஏற்படுத்துகிறது
இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தை (AGM) அண்மையில் இராஜகிரியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடாத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் பின்னணியிலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், 63 ஆண்டுகால நம்பகமான கல்விப் பங்காளி எனும் அதன் சேவையை PRISL கொண்டாடியது. இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு அவசியமான திறனை வளர்ப்பதில் தேசிய ரீதியிலான ஒரு முக்கிய பங்கை அது கொண்டுள்ளது.
PRISL இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு உரித்தான நிபுணத்துவத்தை வழங்குகிறார்கள். இந்த அமைப்பிற்கு P.P. பெரேரா தலைமை தாங்குகிறார். இந்த முயற்சியில் அவருக்கு உதவியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உப தலைவர்களான டாக்டர் உபுல் ரத்நாயக்க மற்றும் பிரபாத் ஜயசிங்க ஆகியோர் தலைமைத்துவம் மற்றும் மூலோபாய நோக்கு ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கப்பட்ட சாதனையாளர்களாவர். செயலாளராக பியோ பெரேராவும், பொருளாளராக K.A.C. வித்யாரத்னவும், நிர்வாகத் தகுதியின் மூலம் இக்குழுவை ஆதரிப்பவரான உதவிச் செயலாளராக திருமதி தேவகி ரொட்ரிகோவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து ஒரு ஆற்றல்மிக்க குழுவாக தொடர்ச்சியாக வெற்றியை நோக்கி பயணிக்கவுள்ளனர்.
PRISL இன் தலைவராக இருந்து தற்போது பதவி விலகும் கல்யாண திரசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “எமது தூரநோக்கு மற்றும் பணி நோக்கு ஆகியவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு எனும் வகையில், எமது உறுதிப்பாட்டை நான் வலியுறுத்த விரும்புகிறேன். 63 ஆண்டுகால பாரம்பரியத்துடன், அரசியல், பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு PRISL வழிகாட்டியுள்ளதோடு, வலுவாக பயணித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் பலத்தை வலுப்படுத்தும் வகையில், ஆற்றல்மிக்க மற்றும் சாதகமான தாக்கங்கள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு பாடநெறியை நாம் பட்டியலிட்டுள்ள இவ்வேளையில், எமது வருடாந்த பொதுக் கூட்டமானது ஒரு முக்கிய தருணமாக அமைகிறது.” என்றார்.
PRISL இன் தலைவராக தெரிவாகியுள்ள P.P. பெரேரா தெரிவிக்கையில், “இலங்கையின் பொலிமர் தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், இந்த வலையமைப்பின் ஒரு முக்கிய மையமாகவும், எமது உறுப்பினர்களின் நலன்களுக்கான ஒரு ஊக்கியாகவும் PRISL விளங்குவதோடு, அதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். புத்தாக்கமான திட்டங்களை செயற்படுத்துவதன் மூலமும், நெறிமுறை சார்ந்த தொழில் வழிகாட்டல்களை ஆதரிப்பதன் மூலமும் தொழில்வாண்மை மிக்க உறுப்பினர்களின் ஊடாக உயர் தரத்தை பேணுவதன் மூலம், PRISL இத்துறையில் ஒரு ஆற்றல்மிக்க வீரராக இருப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எமது மூலோபாய திட்டங்கள் மற்றும் அனுபவமிக்க நிபுணத்துவத்துடனும், இளைமையின் சுறுசுறுப்புடனுமான கலப்புடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பு காட்டப்படுகிறது.” என்றார்.
தமது தூரநோக்கு மற்றும் நோக்கங்களுக்கு அமைய, இலங்கை பொலிமர் தொழிற்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க PRISL உறுதிபூண்டுள்ளது. இத்தொழிற்துறையில் உள்ள ஒரு முக்கிய நிறுவனம் எனும் வகையில், தன்னை ஒரு வலையமைப்பிற்கான மையமாக மட்டுமல்லாமல், அதன் உறுப்பினர்களின் நலன்களை மேம்படுத்துவதிலான ஒரு உந்து சக்தியாகவும் PRISL விளங்குகிறது. தொடர்ச்சியான தொழில்நுட்ப கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை தளங்களுக்கு செல்லுதல் போன்ற புத்தாக்கமான திட்டங்கள் மூலம் இந்த நோக்கத்தை அடைவதில் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது.
நாட்டில் ஏற்படும் பொருளாதார மீட்சியின் முக்கிய அறிகுறிகளுக்கு மத்தியில், பொருளாதாரத்திற்கு பங்களிப்பதில் அதன் பங்கை PRISL அறிந்துள்ளது. தொழில்துறைக்கு சிறந்த நெறிமுறை வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறைகளின் வளர்ச்சிக்கு நிறுவனம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. PRISL ஆனது, அதன் தொழில்முறை உறுப்பினர்களின் மூலம், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொடர்பான விஞ்ஞான, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்தர கல்வி மற்றும் தொழில்முறை திறனை வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது.
PRISL இன் புதிய நிர்வாகக் கட்டமைப்பானது, இளைமையின் சுறுசுறுப்பு உட்செலுத்தப்பட்டு, அனுபவமிக்க வல்லுநர்களின் அறிவு மற்றும் அனுபவம் இணைக்கப்பட்டு, ஒரு முற்போக்கான முன்னேற்றத்தை காணலாம். முக்கிய மூலோபாய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இலங்கையின் பொலிமர் தொழிற்துறையில் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் செல்வாக்குமிக்க வீரராக தனது நிலையை ஒருங்கிணைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதை PRISL நோக்கமாகக் கொண்டுள்ளது.
PRISL மற்றும் அதன் திட்டங்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.prisrilanka.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும் அல்லது +94112864354 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
END