First Capital Holdings நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதைக் கொண்டாடுகின்றது

First Capital Holdings நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதைக் கொண்டாடுகின்றது

LMD சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டு வருகின்ற, இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய 100 நிறுவனங்கள் என்ற பெருமதிப்புமிக்க பட்டியலில் முதன்முறையாக தான் இடம்பெற்றுள்ளதை First Capital Holdings PLC நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. நிதியியல் பலம், மூலோபாய தலைமைத்துவம், தொழிற்பாட்டு மகத்துவம், நிறுவன ஆட்சி, ஊழியர்களின் நலன், ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான பங்களிப்புக்கள் அடங்கலாக, பல்வகைப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனத்தின் மிகச் சிறப்பான பெறுபேற்றுத்திறனை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.   

மூலதனச் சந்தைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள First Capital நிறுவனம், மிகச் சிறந்த தொழிற்பாடுகள் மற்றும் முன்னோக்குச் சிந்தனை அணுகுமுறை ஆகியவற்றுடன் தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் சக்தியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. விவேகமான முதலீட்டுத் தீர்மானங்களுடன் சந்தையில் வேறு எந்த நிறுவனமும் வழங்காத அளவுக்கு மிகச் சிறந்த பிரதிபலன்களை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரினதும் நம்பிக்கையையும், மரியாதையையும் சம்பாதித்துள்ளது. சிறந்த நிர்வாக ஆட்சிக் கட்டமைப்புக்களுடன், பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள ஒரு நிறுவனமான First Capital, உயர் மட்டத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணி வருகின்றது. LRA இடமிருந்து “positive outlook” (சாதகமான வெளித்தோற்றம்) உடன் “A” கடன் தரப்படுத்தலைப் பெற்றுள்ள இந்நிறுவனம், சிறந்த நிர்வாக ஆட்சி நடைமுறைகளின் இணக்கப்பாட்டுடன் சந்தையில் தனது நம்பகத்தன்மை மற்றும் ஸ்தானத்தை மேம்படுத்தியுள்ளது.            

அதன் நிதியியல் அளவுகோல்களுக்குப் புறம்பாக, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் First Capital நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. மிகக்கூடிய வரியைச் செலுத்துகின்ற நிறுவனங்கள் மத்தியில் இந்நிறுவனமும் அடங்கியுள்ளதுடன், கணிசமான வரி இணக்கப்பாட்டு நடைமுறை மூலமாக தேசிய அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை ஆற்றி வருகின்றது. அத்துடன், இலங்கையில் மக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்துவதிலும் First Capital நிறுவனம் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது. மூலதனச் சந்தைகள் மற்றும் காத்திரமான முதலீடுகளின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டுவதன் மூலமாக, மிகவும் நன்மதிப்புடைய வர்த்தக நிறுவனம் என்ற தனது மதிப்பை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. LMD சஞ்சிகையின் தரப்படுத்தல் குறித்த மதிப்பீட்டின் போது மேற்குறிப்பிட்ட பங்களிப்புக்களும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

மேலும், First Capital Holdings நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக தொழில்துறையில் அதன் நன்மதிப்பிற்கு கணிசமான அளவில் வலுவூட்டப்படுகின்றது. பணிப்பாளர் சபை மட்டத்தில் தொழில்துறையில் ஆழமான அறிவு கொண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டலுடன் நிறுவனத்தின் மூலோபாய பயணம் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், நிதியியல் துறையில் அது தொடர்ந்தும் முன்னிலை வகிப்பது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு இணையாக, திறமைமிக்க வல்லுனர்களைக் கொண்ட சிரேஷ்ட தலைமைத்துவம், தெளிவான குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்புடன் நிறுவனத்திற்கு தலைமை வகித்து, அதனை தொடர்ந்தும் வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்கின்றனர். அனைத்து பணிப் பிரிவுகள் மற்றும் தொழிற்பாடுகள் மத்தியிலும், உயர்ந்த மட்டத்தில் திறமைகளைக் கொண்ட நிபுணர்கள் தமது பணிப்பொறுப்புக்களில் மிகச் சிறப்பாக சேவைகளை ஆற்றி வருவதுடன், மகத்துவத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து, “பெறுபேற்றுத்திறனுக்கு முதலிடம்” (performance-first) என்ற நிறுவனத்தின் விழுமியங்களைக் கட்டிக்காத்து வருகின்றனர். இந்த கூட்டு முயற்சியானது, நேர்மை மற்றும் நெறிமுறைகள், ஒத்துழைப்பு, மரியாதை, பெறுபேற்றுத்திறன் அடிப்படையிலான செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய நிறுவனத்தின் பிரதான விழுமியங்களுடன் இணைந்து நிறுவனத்தை வலுப்படுத்தியுள்ளது. இந்த விழுமியங்களே எமது அடையாளத்தின் அத்திவாரமாகக் காணப்படுவதுடன், நிறுவனத்தினுள் அனைத்து தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளை வடிவமைத்து, அதன் நன்மதிப்பிற்கு உரமூட்டி வருகின்றன.            

முற்றும்.

First Capital Holdings PLC நிறுவனம் குறித்த விபரங்கள்:

முன்னோடி முதலீட்டு நிறுவனமாகவும்முதன்மை வணிகத்தில் வங்கி அல்லாத சந்தை முன்னிலையாளராகவும் திகழ்ந்து வருகின்ற First Capitalமூலதனச் சந்தைகளில் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக தன்னை நிலைநிறுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகின்ற ஒரு நிறுவனமாக காணப்படுவதுடன், “பெறுபேற்றுத்திறனுக்கு முதலிடம்” என்ற நிறுவனத்தின் விழுமியங்களை வெளிப்படுத்தியவாறு நிதியியல் தீர்வுகள் மூலமாக அனைத்து இலங்கை மக்களின் வாழ்வையும் மேம்படுத்தும் நோக்குடன் இயங்கி வருகின்றது. ஜனசக்தி குழுமத்தின் உறுப்பு நிறுவனமான First Capital Holdings PLCமுதன்மை வணிகர்நிறுவன நிதி ஆலோசகர்செல்வ முகாமையாளர் மற்றும் பங்குத்தரகர் ஆகிய செயற்பாடுகளுடன் இயங்கி வருகின்றது. Brand Finance இடமிருந்து தொடர்ந்து இரு ஆண்டுகளாகமுதலீட்டு வங்கிச்சேவைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் வர்த்தகநாமம் என்ற அங்கீகாரத்தை First Capital சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.                    

மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலத்திற்கு மேலான அனுபவத்துடன்இலங்கையில் பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளமுழுமையான சேவைகளை வழங்கும் முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC இயங்கி வருகின்றது. First Capital Holdings PLC நிறுவனத்திற்கு LRA இடமிருந்து Positive outlook உடன் [SL] A கடன் தரப்படுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளது.            

First Capital Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இராஜேந்திரா தியாகராஜா (தலைவர்)மஞ்சுள மத்தியூஸ் (பிரதித் தலைவர்)டில்ஷான் வீரசேகர (முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி)ரமேஷ் ஷாப்ட்டர்குடா ஹேரத்இனோஷி பெரேராரச்சினி ராஜபக்ச மற்றும் டிலேந்திர விமலசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.