DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது
இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work – GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு ஹில்டனில் இடம்பெற்றிருந்தது.
முன்னைய வருடங்களைப் போல, இம்முறையும் பல விருதுகளை DIMO தனதாக்கியது. இம்முறை “Best Workplaces in Sri Lanka 2020” விருதுக்கு மேலதிகமாக, “Excellence in People Initiatives – Inspiring”, “Best PLC to work for in Sri Lanka 2020” இற்கான தங்க விருது மற்றும் “Best Workplace in Extra Large Enterprise Category in Sri Lanka 2020” ஆகிய விருதுகளையும் வெற்றி கொண்டது.
இந்த “Best Workplaces in Sri Lanka 2020” விருதுகள், DIMOவிற்கான மேலுமொரு அங்கீகாரம் என்பதை விட முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த மூலோபாயத்தை ஆதரிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் நீண்டகால நோக்கம் பலனைத் தருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். கடந்த 10 ஆண்டுகளில், DIMO தனது வணிக மூலோபாயங்களை அடைவதற்கு ஆதரவாக நிறுவன கலாசாரத்தை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ள அதேவேளை, அனைத்து மட்டங்களிலும் குழு உறுப்பினர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பேணுகிறது. வெளிப்படையான தொடர்பாடல், திறமையான தலைமை, அர்ப்பணிப்பு, மரியாதை, அங்கீகாரம் மற்றும் நட்புறவு போன்ற ஒரு சிறந்த பணியிடத்தின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய ஒரு கலாசாரத்தை நிறுவனம் வளர்த்துள்ளது. DIMOவைப் பொறுத்தவரை, GPTW என்பது பகட்டான நபர்களின் நடைமுறைகளைப் பற்றியது அல்ல. இது ஒரு ஈடுபாடு மற்றும் சீரமைக்கப்பட்ட தொழிற்படையின் மூலம் கூட்டாண்மை நிறுவன இலக்குகளை அடைவதற்காக உயர் செயல்திறன் கொண்ட நபர்களை நடாத்துதல், ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் அங்கீகரித்தல் தொடர்பிலானதாகும்.
DIMO, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டோமொபைல் துறையில் நடவடிக்கைகளைத் தொடங்கினாலும், அதன் தொடர்ச்சியான நீண்ட வெற்றிப் பயணத்தின் போது, பொறியியல், consumer goods, கல்வி, விவசாயம் மற்றும் தொழில்துறை தீர்வுகள் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாக இது விரிவடைந்துள்ளது. இந்த நேரத்தில், ஒரு துடிப்பான பணியிடத்தை உருவாக்குவது அதன் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதைத் தாண்டி, அதற்கு அப்பாலும் செல்வதென்பதனையும் இந்த நிறுவனம் புரிந்துகொண்டுள்ளதுடன், தொடர்ந்து சிறப்பாக செயற்படும் நபர்களை உருவாக்கும், ஊக்குவிக்கும் மற்றும் வெகுமதிகளை வழங்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்குவதையும் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு ‘முன்னேற்றகரமான தொழிற்படை’ என்பது ஊழியர்கள் வெறுமனே ஆக்கத்திறன் கொண்டவர்களாக இருப்பது மட்டுமல்ல, மாறாக நிறுவனத்துக்கும் தமக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் என இந் நிறுவனம் காண்கின்றது. பல தசாப்தங்களாக நிறுவனத்தின் இலட்சிய பல்வகைப்படுத்தல் முயற்சிகளின் போது, இது அறிவூட்டல் முயற்சிகள் ஊடாக மக்களின் பலத்தை விரைவாக பெரிதுபடுத்தியுள்ளது. பொருளாதார வீழ்ச்சி அல்லது உலகளாவிய தொற்றுநோய் போன்ற எந்தவொரு வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான தாக்கத்தையும் அதன் தொழிற்படை மீது சுமத்தாமல், அவற்றைத் தடுக்கும் திறன் கொண்ட உள்ளார்ந்த வலிமை நிறுவனத்துக்கு உள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக, GPTW கலாச்சார தணிக்கைகளில், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ‘அபிவிருத்தியடைந்து வரும்’ பகுதியில் அதிக மதிப்பெண்களை பெறுவதன் மூலம் DIMO தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. அனைத்து உறுப்பினர்களுடனும் ஒரு வெளிப்படையான தொடர்பாடல் வழியை வைத்திருக்க நிறுவனம் எப்போதும் முன்னிற்கின்றது. ஏனெனில், அவர்கள் பாரிய இலக்குகள் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமென்பதுடன், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக அமைப்பின் குறிக்கோளுக்கு அவர்கள் பங்களிக்கும் வழியை நினைவில் கொள்கிறார்கள்.
இது தொடர்பில் DIMOவின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “அதிக செயல்திறன் கொண்ட பணியிட கலாசாரத்தை ஊக்குவித்து, முன்கொண்டு செல்கையில் நானும் மற்ற தலைமைக் குழுவும் எங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்வதில் முக்கிய கவனத்தை செலுத்துகின்றோம். எங்கள் மக்களை அவர்களின் சிறந்ததை வழங்க நாங்கள் எப்போதுமே ஊக்குவித்தோம். மேலும், தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக அதிவேக வளர்ச்சி மற்றும் வெளிப்பாடு மூலம் அமைப்பு அவர்களுக்கு சிறந்ததை நிறுவனம் திருப்பித் தருகிறது என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். வேலையை சுவாரஸ்யமாக்கவும், வெகுமதியளிக்கவும் DIMOவின் தொழில்தருநர் வர்த்தகநாமத்தை உண்மையில் வேறுபடுத்தவும், எங்கள் EVP இற்கு உண்மையாக இருக்க நாங்கள் இதைப் பயிற்சி செய்துள்ளோம். எனவே, எங்கள் உணர்வுபூர்வமான முயற்சிகளுக்காக தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவது நிச்சயமாக DIMOகுழுவின் வெற்றிக்கும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கும் ஒரு உறுதிப்பாடாகும். ஆண்டுதோறும் நாங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு கிரீடத்திலும், DIMOவின் வாழ்க்கை முறை மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அத்துடன் ஏனையவற்றை விட ஒருபடி மேலே உள்ளது,” என்றார்.
DIMO அதன் வெளிப்படையான தொடர்பாடல்கள் உறுப்பினர்களுக்கு அதிக அளவு ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க தூண்டுவதுடன், தகவலுக்கான அணுகல் நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் சரியான நகர்வை மேற்கொள்ள அவர்களுக்கு தேவையான அறிவை அளிப்பதுடன் நம்பிக்கையுடன் முயற்சி எடுக்க உதவுவதாக நம்புகின்றது. இதன் விளைவாக, மக்களின் நடைமுறையில் சிறந்து விளங்குவதற்காக நிறுவனத்திற்கு “Excellence in People Initiatives – Inspiring” விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, DIMO தனது நிறுவன கலாசாரத்தை விரைவாக வளர்ந்து வரும் சூழலில் செழித்து வளர, ஒட்டுமொத்த வணிக மூலோபாயத்துடன் இணையாக அமைத்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த பணியிடங்கள் தொடர்பில் கற்றறிவதற்கும் அங்கீகரிப்பதற்கும் ஒரு சிறந்த இடம் Great Place To Work ஆகும். Great Place To Work , நம்பிக்கை சுட்டெண் கணக்கெடுப்பு மற்றும் விரிவான கலாசார தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி குழு உறுப்பினரின் பார்வை மற்றும் முகாமைத்துவத்தின் பார்வை ஆகிய மாதிரி இரண்டு கோணங்களின் அடிப்படையில் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. இந்த கருவிகள் மக்களின் பணியிட அனுபவம் தொடர்பான தெளிவுபடுத்தலுக்கு பயன்படுத்தப்படுவதுடன், நேர்மறையான மக்கள் அனுபவத்தை வழங்கும் ஒரு கலாசாரத்தை பராமரிக்க முகாமைத்துவத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளாகும்.