Category: Tamil News

CMA Excellence in Integrated Reporting 2023 இல் CMA இனால் கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMA) ஏற்பாடு செய்திருந்த, CMA Excellence in Integrated Reporting 2023 விருதுகளில், ஒட்டுமொத்த தங்க விருதின் இணை வெற்றியாளராக, முன்னணி நிறுவனமான DIMO கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 4 விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது. ‘CMA Excellence in Integrated Reporting Awards 2023’, நிகழ்வானது, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. அங்கீகாரம் மிக்க இந்த நிகழ்வானது தொடர்ச்சியாக 9ஆவது வருடமாக இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் உயர்…

By Author 0

HUTCH ரோமிங் சம்பியன்: இந்தியாவில் இடம்பெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பார்வையிடும் வெற்றியாளர்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் சமீபத்திய பரபரப்பான ஊக்குவிப்பு பிரசாரத்தின் முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா செல்வதற்கான இலவச விமான டிக்கெட்டை வெல்வதற்கும், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நேரடியாக பார்த்து மகிழவும் ஒரு நம்பமுடியாத வாய்ப்பை HUTCH வழங்கியுள்ளது. “Hutch Roaming Promotion” எனும் ஒரு தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஊக்குவிப்பு பிரசாம், கடந்த செப்டம்பர் 05 முதல் செப்டம்பர் 28 வரை இடம்பெற்றது. பங்கேற்பாளர்கள் மிக எளிய…

By Author 0

National Industry Excellence Awards 2023 இல் மதிப்புமிக்க தங்க விருதை வென்ற ராஜா ஜுவல்லர்ஸ்

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் மதிப்பு மிக்க தங்க விருதைப் பெற்ற ராஜா ஜுவல்லர்ஸ், மீண்டும் அதன் திறனை நிரூபித்துள்ளது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அண்மையில் நெலும் பொகுணவில் இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டமை…

By Author 0

வரலாற்றுசிறப்புமிக்கபாரியஇரத்தினக்கற்களைகாட்சிப்படுத்தும் FACETS Sri Lanka 2024

FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியாகும். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA), ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 2024 ஜனவரி 06 – 08 ஆம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலின் புகழ்பெற்ற ஏட்ரியம் லொபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இலங்கையின் ஏராளமான இரத்தினக்…

By Author 0

International Business Icon விருதை வென்ற பெல்வத்தை

பல்வேறு வகையான பால் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இலங்கைக்கு பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் பால் தொடர்பான துறையில் வர்த்தக முன்னோடியாக அது செலுத்தும் பங்களிப்பிற்காக அங்கீகாரமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. Medicina Alternativa OIUCM (Alma Ata-1909) இன் கூட்டமைப்பு உறுப்பினர்களால், கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கோலாகல விழாவில், பெல்வத்தை டெய்ரிக்கு 2023 International Business Icon (IBIA) (சர்வதேச வணிக ஐகன் விருது)…

By Author 0

நிலைபேறான விவசாயத்திற்காக வணிக தொடக்கங்களுக்கு உதவ, விவசாய அடைகாத்தலை செயற்படுத்தும் Hatch

GIZ Sri Lanka மற்றும் EU உடன் இணைந்து, “Green Innovation Lab” விவசாய அடைகாத்தல் (Agri Incubator) திட்டத்தை Hatch முன்னெடுத்துள்ளது. இது புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதோடு, வணிக ரீதியான நம்பகத்தன்மைக்கான யோசனைகளை சோதிக்கவும், அதனை மீள உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவுமான ஒரு சூழல் தொகுதியை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதற்கும் நாட்டின் விவசாயத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது. இந்த அடைகாத்தலானது, குறிப்பாக, போசணை,…

By Author 0

66% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Adani Green Energy Ltd

தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தூய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) ஆனது, 2023 செப்டெம்பர் 30 இல் நிறைவடையும் அதன் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. அதற்கமைய, நிறுவனத்தின் நிதிச் செயற்பாடானது கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்துள்ளதோடு, வருடாந்த ரொக்க இலாபத்தில் குறிப்பிடும் வகையிலான 63% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதுமாத்திரமன்றி, அதன் எரிசக்தி…

By Author 0

V29 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள vivo

தனது முதன்மையான V series சமீபத்திய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, அதன் V29 5G ஸ்மார்ட்போனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொள்வனவு செய்யக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன்கள், நவீன வடிவமைப்பு முன்னேற்றம் மற்றும் அதிநவீன கெமரா செயற்பாடுகளுடன் இணைந்த தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளை இணைத்து தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் V series பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் ஒருங்கிணைந்த 120 Hz கொண்ட 3D வளைந்த திரையைக் கொண்டுள்ளது. இது…

By Author 0

பாடசாலைமாணவர்களிடையேவாய்ச்சுகாதாரம்தொடர்பானநிகழ்வுகள்மூலம்பற்குழிஅற்றதேசத்தைஅடையும்க்ளோகார்ட்

பற்குழிகள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சமூகப் பணியை, Hemas Consumer Brands இனது நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அது ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் பயனுள்ள வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் 30 வருட வரலாற்றை க்ளோகார்ட் கொண்டுள்ளது. அத்துடன் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவது…

By Author 0

தருஷி கருணாரத்னவின் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையை பாராட்டிய ராஜா ஜுவல்லர்ஸ்

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில், தங்கப் பதக்கம் வென்ற 19 வயதான இலங்கை தடகள வீராங்கனையான தருஷி கருணாரத்னாவின் சாதனையைக் கொண்டாடுவதன் மூலம் இலங்கை சமூகம் தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ராஜா ஜுவல்லர்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சீனாவின் ஹாங்சோவில் இடம்பெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி…

By Author 0