தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை கொழும்பில் திறக்கும் Electrodeals
செய்திச்சுருக்கம் தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம் பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி முழுவிபரம் இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை இலங்கையில் திறந்து வைத்துள்ளது. Electrodeals நிறுவனம் Dell Technologies உடன் இணைந்து இந்த பிரத்தியேக Concept Store இனை அறிமுகம் செய்துள்ளது. இது கணனிகள், மடிகணனிகள் முதல் கணனிப் பாகங்கள் வரை பரந்த அளவிலான Dell நுகர்வோர் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.…
இன்மை வென்றிட காத்திருக்கும் தைரியமான பெண்களுடன் ஒன்றிணைவோம்
கடந்த 25 வருடங்களில் இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் இணைந்தவாறு புற்றுநோய் இறப்பு வீதமும் உயர்ந்து, பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக நாட்டில் புற்றுநோய் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, இதற்காக அரசாங்கம் கணிசமான தொகையை செலவிட்டும் வருகின்றது. புற்று நோய் தடுப்பு, அதனை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில், இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான முயற்சிகள் தற்போது மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. எவ்வாறாயினும், செலவிடப்படும் நிதி, உணர்வு ரீதியான…
உற்பத்தி மற்றும் வளர்ச்சியை விரிவுபடுத்தும் Pelwatte: எதிர்பாராத காலங்களிலும் விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் தொடர்ந்து ஆதரவு
உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, 2021 உடன் ஒப்பிடும்போது காலாண்டிற்கான பால் சேகரிப்பு வளர்ச்சியை 24% ஆக பதிவு செய்துள்ளது. இந் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது நாடு முழுவதும் அதன் பால் சேகரிப்பு வலையமைப்பில் ஒட்டுமொத்தமாக 41% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. “இந்த வளர்ச்சியானது நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், தொடர்புடைய தொழிற்துறைகள் மற்றும் நுண் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் குறிக்கிறது. நாம் இதுவரை அடைந்துள்ள…
Huawei Nova 7i, FreeBuds 4i, FreeLace Pro இன்றைய நேர்த்தியான தெரிவு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Huawei தனது உற்பத்திகளை விரிவுபடுத்தி பயனர்களுக்கு எளிதான சேவை வழங்ககுவதில் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் Huawei தனது பயனர்களுக்கு wireless earphones களை அறிமுகப்படுத்துவது புதிய அனுபவத்தையும் தரத்தையும் மேம்படுத்தும். இந்த wireless earphones கள் Huawei இன் smartphones, tablets உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களுடன் கிடைக்கப்பெறும். Huawei Nova 7i சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய முன்னணியில் விற்பனையாகும் ஸ்டார்ட் போன்களாகும். நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களான Quad…
வேம்பு மற்றும் சந்தனத்தின் இயற்கையான சாற்றுடன் கூடிய புதிய மூலிகை கொலோனை அறிமுகப்படுத்தும் பேபி செரமி
இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசையின் புதிய இணைப்பே 100% இயற்கை சாற்றுடன் கூடிய பேபி செரமி வேம்பு மற்றும் சந்தன மூலிகை கொலோன் ஆகும். பெற்றோர்கள் தமது குழந்தைகளின் வாழ்வின் முதல் சில ஆண்டுகளில் சிறந்த கவனிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இக் காலப்பகுதி உடல்…
புதிய இரண்டு உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய தயாரிப்பு வலையமைப்பை மேம்படுத்தும் vivo
பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனது உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் அண்மைய விரிவாக்கம் தொடர்பில் vivo இன்று அறிவித்தது. சர்வதேச சந்தையில் vivoவின் வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் “More Local, More Global” மூலோபாயத்திற்கு ஏற்ப உலகெங்கிலும் அதன் தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில் புதிய அறிவார்ந்த உற்பத்தித் தளங்கள் vivoவின் ஏழு தொழிற்சாலைகளை குறிக்கின்றது. பாகிஸ்தானில் உள்ள 16,000 சதுர…
தொழில்வாய்ப்பு, கண்ணியமான வேலை மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு வலியுறுத்திய DIMOவின் உலக இளைஞர் திறன் தின வெபினார்
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தும் தொடர்பில் கவனம் செலுத்தி, உலக இளைஞர் திறன் தினத்தை கொண்டாடியது. இதன் பிரதான உரையை, தொழிற்துறை நிபுணரான, மங்கள பி.பீ யாப்பா – பணிப்பாளர் நாயகம் / பிரதான நிறைவேற்று அதிகாரி இலங்கை…
பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக “Accelerating the Sri Lankan Startup Ecosystem” (இலங்கையின் தொடக்க தொகுதியை விரைவுபடுத்துதல்) எனும் தலைப்பின் கீழ் சமீபத்தில் ஒரு இணைய வழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. 111 தொடக்க நிறுவுனர்கள் மற்றும் தொடக்க…
தெற்காசியாவில் Dell Technologies இன் சிறந்த விநியோகஸ்தர் விருதினை வென்ற Singer
நாட்டின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC, 2021 ஆம் ஆண்டிற்கான Dell Technologies South Asia CSB Partner Connect நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த பிராந்திய விநியோகஸ்தர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்தர் – இலங்கை’ விருதுகளை வென்றது. இந்த மெய்நிகர் நிகழ்வானது 2020 ஆம் ஆண்டில் விநியோகஸ்தர்களின் பிராந்திய செயல்திறனை மீளாய்வு செய்வதற்காக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் Dell Technologies Asia Emerging Markets இன் உப தலைவர் அனோதை…
மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்களின் இணையற்ற சிறப்பம்சங்கள் : Huawei Nova 7 SE, Band 4e (Active) மற்றும் Band 6
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, இந்த டிஜிட்டல் சகாப்தத்தின் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் பரந்த அளவிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டெப்லெட்கள், மடிகணினிகள் அணியக்கூடியவை மற்றும் ஓடியோ சாதனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் முதல், டிஜிட்டல் பரப்பை புரட்சிகரப்படுத்தும் விரிவான தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையை Huawei வழங்குகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று Huawei Nova 7 SE. Nova 7 SE இன்…