Category: Tamil News

DELL Technologies உடன் 30 ஆண்டுகூட்டாண்மையைகொண்டாடும் SITL

Softlogic Information Technologies (Pvt) Ltd (SITL) ஆனது அண்மையில் Dell Technologies Inc உடன் இணைந்து தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. DELL மற்றும் அதன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த சாதனையை கௌரவிக்கும் வகையில், SITL ஆனது கொழும்பு Cinnamon Lakeside ஹோட்டலில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கையில்…

By Author 0

அதிநவீன பயிற்சி நிலையங்களை ஸ்தாபிப்பதன் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டுவதற்கான கூட்டுமுயற்சி

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் உள்ள அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC ஆனது, இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு உலகளாவிய தரத்திலான, திறமையான புனையுபவர்களாக சான்றளிக்கும் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்துடன் (DTET) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. Alumex PLC மற்றும் DTET ஆகியன, தொழில்துறையின் எப்போதும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு அதிநவீன மாதிரிப் பயிற்சி மையத்தை நிறுவி, நாடு முழுவதும்…

By Author 0

பாடசாலைமாணவர்களிடையேவாய்ச்சுகாதாரம்தொடர்பானநிகழ்வுகள்மூலம்பற்குழிஅற்றதேசத்தைஅடையும்க்ளோகார்ட்

பற்குழிகள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சமூகப் பணியை, Hemas Consumer Brands இனது நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அது ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் பயனுள்ள வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் 30 வருட வரலாற்றை க்ளோகார்ட் கொண்டுள்ளது. அத்துடன் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவது…

By Author 0

இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழிலை மேம்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட SLGJA

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் கைத்தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஒரு முக்கிய படியாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் இணைந்து ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MOC) கைச்சாத்திட்டுள்ளன. இந்த முக்கிய நிகழ்வு கடந்த 2023 ஓகஸ்ட் 23ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் செனட் சபை விசேட வளாகத்தில் இடம்பெற்றது. SLGJA இன் பட்டைதீட்டல் பிரிவின் உப தலைவர் பின்சிறி விஜேபால மற்றும் அவரது குழுவினரால்,…

By Author 0

நாட்டின் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் இலங்கையில் கேம்பிரிட்ஜ் கல்வி மாநாடு

– இலங்கையில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க கல்வி நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைவு Cambridge University Press and Assessment நிறுவனமானது, இலங்கையில் கேம்பிரிட்ஜ் கல்வி மாநாட்டை அண்மையில் நடாத்தியிருந்தது. இது நாடு முழுவதிலும் உள்ள கல்வித் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்ததோடு, கல்வி வளர்ச்சிப் பாதை தொடர்பான வரைபடத்தை ஆராய்வதற்கும் அதன் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குமான வாய்ப்பை இது ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விச் சூழல் தொகுதியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி…

By Author 0

வெற்றிகரமான 67ஆவது TAAI மாநாட்டிற்காக இலங்கையின் உள்நாட்டு சுற்றுலா நடத்துநர்களின் சங்கத்துடன் கைகோர்த்த HUTCH

இலங்கையில் 25 வருட வரலாற்றைக் கொண்ட முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான HUTCH, 67ஆவது TAAI மாநாட்டில் SLAITO (Sri Lanka Association of Inbound Tour Operators) மற்றும் TAAI (Travel Agents Association of India) உடன் மேற்கொண்ட வெற்றிகரமான கூட்டாண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ளது. இம்மாநாடு கொழும்பில் நடைபெற்றதோடு, அதில் 500 இற்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பயணத் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கைக்கு மிக அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து…

By Author 0

‘தீவா கரங்களுக்கு வலு’: தங்கொட்டுவ நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு

பெருமைக்குரிய இலங்கை வர்த்தக நாமமான தீவா (DIVA), Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கிய ‘தீவா கரங்களுக்கு வலு’ நிகழ்ச்சித் தொடரில், தங்கொட்டுவவில் இடம்பெற்ற நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வருடம் தங்கொட்டுவ பிரதேசத்தில் இதன் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கிய  தேசிய வேலைத்திட்டமாக இது இடம்பெற்று வருகின்றது. நாட்டில் பொருளாதார நெருக்கடியின் அழுத்தத்தை…

By Author 0

தனது 5 வருட ஆடம்பர மற்றும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டாடும் Le Grand Galle ஹோட்டல்

ஜப்பானுக்குச் சொந்தமான, மிகப் புகழ்பெற்ற சொகுசு ஹோட்டலான Le Grand Galle, தனது 5ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அண்மையில் ஒரு கோலாகல நிகழ்வை நடாத்தியிருந்தது. தனது நேர்த்தியான சேவைக்காகவும், காலி கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரையின் கவர்ச்சிகரமான காட்சிகளுக்காகவும் இது பிரபலமாக விளங்குகிறது. இந்த 5 வருட நிறைவுக் கொண்டாட்டமானது, Le Grand Galle இன் சிறந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமைந்ததோடு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றால் நிரம்பிய மாலைப்…

By Author 0

தனது மூலோபாய மைய முன்மொழிவை வெளியிட்ட இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் அண்மையில் தனது திட்டடமான ‘Sri Lanka Gemstone Hub Strategy Sapphire Capital of the World’ (இரத்தினக்கல் மைய மூலோபாய நீல மாணிக்க உலகின் தலைநகரம் இலங்கை) இனை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இது தொடர்பான விழா சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் அஜ்வார்ட் டீன் உரையாற்றுகையில், “பல மாதகால உன்னிப்பான திட்டமிடல், கூட்டு…

By Author 0

AI-இயங்கும் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிதல் தொழில்நுட்பத்தை தழுவிய முதல்தெற்காசியநாடாக இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்களின் போக்கானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. கடந்த காலங்களை பார்க்கும் போது, இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2005 இல் 13,372 ஆக இருந்து 2019 இல் 31,848 ஆக அதிகரித்துள்ளது. இது 138% எனும் குறிப்பிடும்படியான அதிகரிப்பைக் காட்டுகிறது. உலகளாவிய ரீதியிலும் புற்றுநோய் பதிவுகள் இதே விகிதத்திலேயே உயர்ந்துள்ளன. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதே புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான மிகவும் பயனுள்ள உத்திகளில் ஒன்றாகும் என, உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட…

By Author 0