குபோட்டாமயம் எனும் எண்ணக்கருவின் புதிய கட்டமாக ஹேலீஸ் அக்ரிகல்ச்சரினால் இலங்கையின் விவசாய நிலங்களுக்கான மூன்று புதிய இயந்திரங்கள் அறிமுகம்
இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர விநியோகஸ்தரான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Hayleys Agriculture Holdings Limited) நிறுவனம், உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வசதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மூன்று அதிநவீன விவசாய இயந்திரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குருணாகல், தம்பொக்கவில் உள்ள அஸ்லிய கோல்டன் கஸாண்ட்ராவில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற்ற இந்த அறிமுக விழாவானது, நாட்டின் விவசாயத் துறையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது. விவசாய நிலங்களை குபோட்டாமயம் செய்யும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சரின்…
Hatch Demo Day இல் சிறந்ததொடக்க நிலை வணிகங்கள் First Capital Startup Nationனின் 160,000 அமெரிக்க டொலர்ஐ பெற்றுக்கொண்டன
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட First Capital Startup Nation னின் Hatch Demo Day நிகழ்வு ஒக்டோபர் 1, 2025 அன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதுமை, இலக்கு மற்றும் சந்தர்ப்பங்களை கண்டறிவதற்கான ஓர் சக்தி வாய்ந்த மாலைப்பொழுதில் இலங்கையின் முன்னணி ஸ்தாபகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சூழலியல் பங்காளர்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்நிகழ்வானது Hatch ன் பிரதான இடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது நாட்டின் தொழில் முயற்சி சார் பயணத்தின் ஒரு தீர்க்கமான மைல்கல்லைக் குறிப்பதுடன் உள்ளூர் தொழில்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவத்தில், பெண்களின் இயற்கையான அழகைக் கொண்டாடிய குமாரிகா
யாழ்ப்பாணத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவமானது, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன், ஆலய மணிகளின் ஓசை, பக்திப் பாடல்கள் என பக்திப் பரவசத்துடன் இனிதாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது, ஒரு மதநிகழ்வென்பதற்கு அப்பால், ஒரு கலாசாரத்தினதும், சமூகத்தினதும் உயிரோட்டமான வெளிப்பாடாகும். நம்பிக்கை, அழகு மற்றும் பாரம்பரியம் ஆகியன ஒருங்கிணையும் ஒரு புள்ளியாகும். Hemas Consumer Brands (HCB) நிறுவனத்தின், இலங்கையின் மிகவும் நம்பகமான கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான குமாரிகா, இவ்வருடம்…
நிலைபேறானதலைமைத்துவத்திற்காககௌரவிக்கப்பட்டஹேமாஸ்
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, நெறிமுறைசார்ந்த ஆளுகை, நிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும்…
கல்விசார் விசேடத்துவம், உலகளாவிய கல்விப் பாதைகளின் கொண்டாட்டம்2025 NCHS – Swinburne பட்டமளிப்பு விழா
நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS) மற்றும் Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆகியன, இலங்கை மாணவர்களுக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலான கல்விசார் விசேடத்துவத்தையும், பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கும் மற்றுமொரு வெற்றிகரமான கூட்டாண்மையின் வருடத்தை அண்மையில் கொண்டாடியிருந்தன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 2025 ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற 2025 பட்டமளிப்பு விழாவில், Swinburne – NCHS வழிகாட்டலின் கீழ் பல்வேறு துறைகளில்…
விகாரைகளில் வேம்பு மரங்களை நடும் ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்த சுதேசி கொஹொம்ப
இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தக நாமமான சுதேசி கொஹொம்ப (Swadeshi Khomba), விகாரைகளில் வேம்பு மரங்களை நடும், அதன் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டமான ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. ‘காடானது தன்னைத் தியாகம் செய்தவாறு, அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்க்கையை வழங்குவதோடு, அடைக்கலம் அளிக்கும் ஒரு இடம்’ என்று புத்த பிரான் தெரிவித்துள்ளார். இந்த ஞானத்துடன் இணைந்ததாக, சுதேசி தனது ‘சுதேசி கொஹொம்ப மிஹிதலா…
உலகளாவிய மின்கல முன்னோடி CATL, இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கான Evolution Auto நிறுவனத்தின் இலக்கிற்கு வலுவூட்டுகிறது
உலகளாவிய ரீதியில் மின்சார வாகன (EV) மின்கலங்களின் முன்னணி உற்பத்தியாளரும், புத்தாக்கவியலாளருமான Contemporary Amperex Technology Co. Limited (CATL) இன் தலைமையில், நிலைபேறான போக்குவரத்திற்கான உலகளாவிய கேள்வி தொடர்ச்சியாக துரிதப்படுத்தப்படுகிறது. உலகளாவிய ரீதியில் EV மின்கலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் 42.81% எனும் சந்தைப் பங்கை கொண்டுள்ள CATL ஆனது, Tesla, BMW, Mercedes-Benz போன்ற முன்னணி வர்த்தகநாமங்கள் உள்ளிட்ட, உலகெங்கிலும் உள்ள அனைத்து மின்சார வாகனங்களினதும் சுமார் அரைவாசிக்கு இது மின்கலங்களை வழங்குகிறது. Evolution Auto…
இணைய வர்த்தகநாம பிரிவில் சிறந்து விளங்கியமைக்காக SLIM Brand Excellence 2025 இல் கௌரவிக்கப்பட்ட dsityreshop.com
DSI Tyres நிறுவனத்தின் சக்தியால் ஆதரிக்கப்படும் dsityreshop.com இணையத்தளமானது, SLIM Brand Excellence 2025 விருது விழாவில், ஒன்லைன் வர்த்தகநாமத்திற்கான (Online Brand) வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி டயர் விற்பனை இணைய வர்த்தகத் தளம் எனும் அதன் பயணத்தில், இந்த சாதனையானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த அங்கீகாரமானது, டிஜிட்டல் வர்த்தகத்தில் இவ்வர்த்தக நாமத்தின் வளர்ச்சி, சந்தையில் அதன் நம்பகமான இருப்பு மற்றும் இலங்கையர்கள் இணையத்தில் டயர்களை கொள்வனவு செய்யும் முறை…
இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் ஹலால் சான்றுறுதி பேரவை கௌரவிப்பு
நிறுவன விசேடத்துவத்திற்கான நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்கும், 2023 இலங்கைத் தேசியத் தர விருதுகள் (Sri Lanka National Quality Awards 2023 (SLNQA) விழாவில், ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (Halal Assessment Council (Guarantee) Limited) (HAC) மெரிட் விருது (Merit) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 நவம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப…
சீரோ சான்ஸ் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்திய மாணவர்களின் படைப்பாற்றல்களுக்கான கௌரவிப்பு
கடந்த 2025 நவம்பர் 15ஆம் திகதி, கொழும்பு BMICH இல் நடைபெற்ற சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழாவில் (zero Chance art and Essay award ceremony), தொடர்ந்து மூன்றாவது வருடமாக இலங்கை மாணவர்களின் படைப்பாற்றல்கள் கௌரவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்றப் பயணத்தின் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை தங்கள் சித்திரங்கள் மற்றும் எழுத்தாற்றல்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதைக் கவனிக்கச் செய்த நிகழ்வாக இது அமைந்தது. 2025 ஆம் ஆண்டு…