பசுமைஐதரசன்: பூச்சியகாபன்எதிர்காலத்தைநோக்கியபயணத்தின்இறுதிப்படி
முழுமையான பூச்சிய காபன் வெளியேற்றத்தை அடைவதில் பசுமை ஐதரசனின் முக்கியத்துவத்தை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 54ஆவது வருடாந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். “செலவுகளைக் குறைத்தல்: நிகர பூச்சிய காபனை அடையும் பாதையில் பசுமை ஐதரசனை மேம்படுத்துவதற்கான திறவுகோல்” எனும் தலைப்பில், தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எதிர்காலத்தை நோக்கி உலகம் மாற முயற்சிப்பதற்கு அமைய, கனிம எரிபொருளுக்கு ஒரு முக்கியமான மாற்றீடான பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மை மற்றும் திறன் பிரதிபலிக்கிறது என அதானி இங்கு வெளிப்படுத்தினார்.
WEF இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சூழலுக்கும், அபிவிருத்திக்கும் பசுமை ஐதரசனின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பூச்சிய காபன வெளியீட்டுடனான தூய்மையான எரிபொருளாக பசுமை ஐதரசன் விளங்குவதையும், அதன் நம்பகத்தன்மையையும் அது எடுத்துக் காட்டுகிறது. உலகம் முழுவதும் காபன் நடுநிலைப்படுத்தல் பற்றிய கனவை நனவாக்குவதற்கு பசுமை ஐதரசன் ஒரு திறவுகோலாக அமையும். ஐதரசன் ஒரு சாத்தியமான வலுசக்தி சேமிப்பு ஊடகமாக அறியப்படுவதோடு, அதன் எரிபொருள் கலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, ஒரேயொரு கழிவுப் பொருளாக நீரை வெளியிடுகிறது.
எனவே, அதன் திறனை முழுமையாக உணரும் வகையில் அமைந்துள்ள இந்த இணையப் பதிவானது, உற்பத்திச் செலவைக் குறைக்கவும், பல்வேறு கொள்கை ஆதரவு நடவடிக்கைகளுக்காகவும், பசுமை ஐதரசனை மலிவு விலையில் வழங்கவும் முழு விநியோகச் சங்கிலியையும் உள்ளடக்கிய நிலைக்குத்தான ஒருங்கிணைப்பு அணுகுமுறையைப் பின்பற்றும் வகையில், அதனை பரந்த அளவில் தழுவுதவன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பின்தங்கல் மூலமான ஒருங்கிணைப்பு, கொண்ட நிறுவனங்கள் மட்டுமே உலகிற்கு மலிவு விலையில் பசுமை மூலக்கூறுகளை வழங்க முடியும். பசுமை ஐதரசனின் உற்பத்திச் செலவு ஒரு கிலோகிராமுக்கு 3-5 டொலரிலிருந்து 1 டொலர் வரை பரவலாக குறைவடையும்.
இந்த இணையப்பதிவானது, வளர்ந்து வரும் வலுசக்தியினால் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வழிநடத்துவதற்கான திட்ட வரைபடத்தை, தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கு எடுத்துக் கூறுகின்றது. நாளைய வலுசக்தி துறையை வடிவமைப்பதில் பசுமை ஐதரசன் வகிக்கும் பங்கைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்த இணையப்பதிவை பின்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்: https://www.weforum.org/agenda/2024/01/da7a7745-1747-4519-8bc5-aec6c64a42bb/
Adani New Industries Limited (ANIL) பற்றி
Adani Enterprises Limited (AEL) இன் ஒரு அங்கமான Adani New Industries Limited (ANIL), உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட பசுமை ஐதரசன் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைபேறான விடயங்களை உற்பத்தி செய்வதற்கான, ஒரு முடிவிலிருந்து மறு முடிவிற்கு இறுதித் தீர்வுகளை உருவாக்கி வரும் ஒரு நிறுவனமாகும். வருடாந்தம் 1 மில்லியன் மெட்ரிக் தொன் (MMTPA) பசுமை ஐதரசனை உற்பத்தி செய்யும் ANIL இன் முதல் திட்டம், குஜராத்தில் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஆரம்ப கட்டமானது, 2027 நிதியாண்டுக்குள் உற்பத்தியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை நிலவரங்களைப் பொறுத்து, எதிர்வரும் 10 வருடங்களில் சுமார் 50 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் மூலம் வருடாந்தம் 3 மில்லியன் மெட்ரிக் தொன் வரையிலான பசுமை ஐதரசன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் இலக்கை ANIL கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ENDS