Ocean Lanka 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் சிறந்த கௌரவத்துடன் வெற்றியீட்டியது
இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் கொழும்பு 07 BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளின் 25ஆவது பதிப்பில் குறிப்பிடும்படியான சாதனையை அடைந்து, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க போட்டியில் அதன் தொடக்க பங்கேற்பைக் குறிக்கும் வகையில், ஏற்றுமதித் துறையில் அதன் சிறந்த பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை அது பெற்றிருந்தது. இந்த விருதுகள், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதற்கான மிக உயர்ந்த தேசிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இதன் மூலம், Ocean Lanka தொழில் தரங்களை நிர்ணயித்து உலக சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பு காட்டப்படுகிறது.
1981ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் (PEA) விழாவானது, இது வரை 24 முறை இடம்பெற்றுள்ளது. 25ஆவது வருட பதிப்பான இம்முறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட, அமைச்சரவை அமைச்சர்கள், இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், விருதுகளுக்கான வெற்றியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,500 அழைப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
“Presidential Export Awards 2021/22” விழாவில், நெசவுத் துணி பிரிவில் Ocean Lanka (Pvt) Ltd ஆனது சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது, ஆடைத்துறையில் சிறந்து விளங்குவதிலும், புத்தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் Ocean Lanka கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றியைக் தொடர்ச்சியாக கட்டியெழுப்பும் வகையில், Ocean Lanka (Pvt) Ltd ஆனது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2022/23 இல் தொடர்ச்சியாக பிரகாசிக்கும் வகையில், நெசவுத் துணி பிரிவில் Merit விருதைப் பெற்றது. இந்த தொடர்ச்சியான வெற்றியானது, உயர் தரத்தைப் பேணுவதற்கும், ஏற்றுமதிச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்வதற்கும் Ocean Lanka கொண்டுள்ள நிலையான அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த அங்கீகாரம் குறித்து Ocean Lanka Pvt Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. Austin Au தனது உற்சாகமான கருத்தை வெளியிடுகையில், “இந்த மதிப்புமிக்க விருதுகளை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாகப் பெறுவதில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இந்த சாதனையானது முழு Ocean Lanka அணியினரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். தொழிற்துறையில் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கும் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.” என்றார்.
Ocean Lanka (Pvt) Ltd ஆனது, ஆடைத் துறையில் தரம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், நிறுவனம் தனது புத்தாக்கப் பயணத்தைத் தொடர்வதற்கும் அதன் ஏற்றுமதி முயற்சிகள் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளது.