ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உலகின் தலையாய கடமையை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் சிங்கர் நிறுவனம்
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக வளிமண்டலத்தில் காணப்படும் உலகின் பாதுகாப்புக் கவசமே ஓசோன் மண்டலமாகும். சூரியனிலிருந்து வெளியாகும் கழியூதாக் கதிர்கள், மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆற்றல் படைத்ததென்பதை நாம் அனைவரும் கற்றறிந்துள்ளோம். இந்த கழியூதாக் கதிர்களை தன்னகத்தே அகத்துறிஞ்சி உலக உயிர்களைக் காக்கும் ஒப்பற்ற செயலை இந்த ஓசோன் மண்டலம் இன்றளவும் மேற்கொண்டு வருகின்றது. மனித உயிர்களைக் காக்கும் இந்த இயற்கை அரணை, மனிதர்களாகிய நாமே காத்திட வேண்டுமென்ற கருத்தும், அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்;திட்டங்களும் கடந்த சில ஆண்டுகளின் மிக முக்கிய பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளமையை நம்மில் பலரும் உணர்ந்திருக்கக் கூடும். அதனால் தான் 1994 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத் தொடரில் ஓசோன் பலடத்தை மீண்டும் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது குறித்து சர்வதேச தினமொன்று அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து 1987 ஆம் ஆண்டு உலக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மொன்ட்ரியல் உடன்படிக்கை மற்றும் வியானா உடன்படிக்கை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இந்த உடன்படிக்கைகளே ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு செயற்த்திட்டங்களுக்கான அடித்தளத்தை வழங்கியது.
ஓசோன் தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை பரிமாறிய மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் ஆகாய வள முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரிபா வடூட்;: ஓசோன் படலத்தை பாதிக்கும் காரணிகளின் மொன்ட்ரியல் சாசனத்தின் 5வது பிரிவில் உள்ள நாடென்ற வகையில் இலங்கையானது குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளதோடு, குளிர்விப்பானாக ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன் (HCFC) பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதிலும், ஹைட்ரோ ப்ளோரோ கார்பனை (HFC) குறைப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவது இலங்கை போன்ற சிறு நாடுகளேயாகும். ஓசோன் பட சிதைவினால் ஏற்படும் புவி வெப்பமடைதல் தாக்கத்தையும் HFCகளின் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு, பெருநிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் அவற்றின் நுகர்வு மற்றும் உற்பத்திக்கு பொறுப்பேற்கும்படியும், சுற்றுச்சூழலுக்கு குறைவாக தீங்கு விளைவிக்கும் பொருத்தமான மாற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும் நான் வலியுறுத்துகின்றேன்.
‘மொன்ட்ரியல் சாசனம் : நம் உணவையும் தடுப்பூசிகளையும் குளிர்ச்சியாக வைத்துள்ளது’ என்ற தொனிப்பொருளை 2021 ஆண்டுக்கான உலக ஓசோன் தினம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் இத்தினத்தில் மனிதநேயத்திற்காக ஒன்றுபட்டு செயலாற்றி நாம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடுவோம்: உலகளாவிய ரீதியில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுவோம்! ‘என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை நாட்டின் நுகர்வோர் பொருட்களின் முன்னணியில்; திகழும் விற்பனையாளரான சிங்கர் நிறுவனம், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்று இலங்கைக்கு புகழீட்டியது. 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வர்த்தகநாமத்துக்கு புகழ் வாங்கிக் கொடுத்த R600a குளிர்விப்பானை அறிமுகப்படுத்தியதன் மூலம்; இம்முக்கிய பிரச்சினைக்கான தீர்வினை சிங்கர் நிறுவனம் இலங்கையில் வழங்கியிருந்ததுடன், உண்மையில் தெற்காசியாவில் இதனைச் செய்த முதல் நிறுவனமாகும். எங்களது அனைத்து குளிர்சாதனப்பெட்டிகளையும் CFC அற்ற வாயுக்களைக் கொண்டவையாக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிகள், ஒட்டுமொத்த தொழிற்துறையையும் இதனைப் பின்பற்றுவதற்கு கட்டாயப்படுத்தியதுடன், மொத்த இலங்கை குளிர்சாதன பெட்டி சந்தையையும் கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஓசோன் தாக்கம் கொண்ட குளிர்சாதனப்பெட்டிகளாக மாற்றியது. குளிர்சாதன உற்பத்தி செயல்பாட்டில் R600a தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சிங்கரின் R600a குளிர்விப்பான்கள்; சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் நுகரப்பட்டு, இலங்கையில் அதிகமான குளிர்சாதனப்பெட்டிகளை விற்று சாதனை படைத்தது. இதன் மூலமான மொத்த மின்னாற்றல் சேமிப்பு 1.3 Billion kWh ஆகும். R600a குளிர்விப்பான்களின் அறிமுகம் ஒரு இலங்கை நிறுவனத்திடமிருந்து ஓசோன் படலத்துக்கான பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமையப் பெற்றது. CFC வாயுவை விட R600a வாயுவின் சாத்தியமான நன்மைகளை அடையாளம் கண்டு, சிங்கர் அதன் R600a குளிர்விப்பான்களின்; அடுத்தடுத்த வரிசைகளை விரிவுபடுத்தியது.
சிங்கர் தனது நவீன தொழிற்சாலையின் ஊடாக, அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர் தரமான R600a குளிர்விப்பான்களை தயாரிக்கின்றது. சிங்கரின் R600a குளிர்சாதனப்பெட்டிகள் குறைந்த மின்னாற்றல் நுகர்வுக்கு மிகவும் புகழ்பெற்றவையாகும். அத்துடன் மின் கட்டணத்திற்காக செலவழிக்கப்பட்ட கணிசமான தொகையை இந்த சாதனத்தின் ஊடாக சேமிக்க முடியும். மிக முக்கியமாக, R600a குளிர்சாதனப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகும் அத்துடன் இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த தீர்வாகவும் அமையப்பெற்றது.
சர்வதேச ஓசோன் மண்டல பாதுகாப்பு தினத்தினை அனுஷ்டிக்கும் இந்நேரத்தில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட, சிங்கர் (இலங்கை) பிஎல்சி சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா தெரிவித்த கருத்து பின்வருமாறு ‘உலக ஓசோன் தினத்தை நாம் கொண்டாடும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவென்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். அனைத்து பாதிப்புகள், இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஓசோன் மண்டலத்துக்கான அச்சுறுத்தல் ஆகியவற்றின் வருகையை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். இந்த நிலை மாற்றியமைக்க நம் அனைவரிடமிருந்தும் ஒரு கூட்டு முயற்சி பிரதான தேவையாக தற்போது உருவாகியுள்ளது. சிங்கரால் சந்தைப்படுத்தப்படும் 100% குளிர்சாதனப்பெட்டிகளும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வாயுக்களை கொண்டிருப்பது தொடர்பில் நான் பெருமை கொள்கிறேன். சுற்றுச்சூழல் மீது அதீத பற்றுமிக்க நிறுவனமாக சிங்கர் திகழ்வதனால், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகின்றோம்,’என தெரிவித்தார்
அத்துடன் பசுமை கருத்துக்களை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகளில் தனது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் சிங்கர் நிறுவனம், ஓசோன் மண்டல சிதைவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ச்சியாக பங்காற்றி வருகின்றது. அத்துடன் மக்களை பொறுப்புடன் செயல்பட ஊக்குவித்து, இந்த உலகத்தை காப்பாற்றிட சிங்கர் நிறுவனம் செயலாற்றி வருகிறது. சிங்கர் நிறுவனம் பொதுமக்களை புத்திசாலித்தனமாக சிந்திக்க வைத்துள்ளதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற தயாரிப்புகளைத் தேர்வு செய்வதற்கு அனைத்து மக்களையும் வரவேற்பதோடு, அவ்வகையான தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயக்கும்.