SLIM Brand Excellence Awards 2020 நிகழ்வில் ஜொலித்த Velona Cuddles  வருடத்தின் புத்தாக்க வர்த்தகநாமத்துக்கான  வெள்ளி விருதையும் வென்றது

SLIM Brand Excellence Awards 2020 நிகழ்வில் ஜொலித்த Velona Cuddles வருடத்தின் புத்தாக்க வர்த்தகநாமத்துக்கான வெள்ளி விருதையும் வென்றது

இலங்கையின் சுகாதார மற்றும் ஆடை பிரிவில் முன்னணி வர்த்தகநாமமான Velona Cuddles, அண்மையில் முடிவடைந்த SLIM Brand Excellence Awards 2020 இல் “ஆண்டின் புதுமையான வர்த்தகநாமத்துக்கான” வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த அண்மைய அங்கீகாரம்,  வாடிக்கையாளர்களின் நலன்களைப் புரிந்து கொள்வதன் மூலம் கருத்தாக்கம் செய்யப்பட்ட தயாரிப்பு, பொதியிடல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் புதுமையான சேவை வழங்கல்களில் நிறுவனம் கவனம் செலுத்துவதற்கான ஒரு சான்றாகும். மேலும் இது இலங்கையின் முன்னணி அணையாடை (Diaper) வர்த்தகநாமமான Velonaவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

Sri Lanka Institute of Marketing (SLIM) ஏற்பாடு செய்யும் SLIM Brand Excellence விருதுகள், கூட்டாண்மை நிறுவனங்களின் சிறப்பான செயல்திறன், நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகள் மற்றும் புதுமையான சந்தை அணுகுமுறைகளில் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுகின்றன.

இந்த புதுமையான மற்றும் முன்னோடி தீர்வுகள் Velonaவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்துள்ளன. மேலும், இந்த மதிப்புமிக்க விருதுகள் கோவிட் – 19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொள்வதில் அதன் மீட்டெழுச்சியை பிரதிபலிக்கிறது. இலங்கையின் குழந்தைகளுக்கான அணையாடை சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி முன்னணிக்கு வந்த Velona Cuddles, அதன் சுற்றுச்சூழல் நட்புறவான உக்கும் மூங்கில் அணையாடைகள் மற்றும் 100% உக்கும் மூங்கில் நீர் துடைப்பான்களை 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம் புதுமையான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதுடன், இவை அவுஸ்திரேலிய நச்சு அற்றமைக்கான சான்றிதழ் மற்றும் ஒவ்வாமை சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

அணையாடைகள் போன்ற வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதில் சௌகரியத்தை வழங்குவதன் அவசியத்தை அடையாளம் கண்ட Velona Cuddles, இந்த தொழிற்துறையின் முதலாவது  முயற்சியாக அதன் தயாரிப்புகளை வழங்குவதற்காக  சந்தா அடிப்படையிலான அப்ளிகேஷனை அறிமுகப்படுத்திய முதல் FMCG வர்த்தகநாமமாக தனது பெயரை பதித்தது. இந்த அப்ளிகேஷனை 2020  மார்ச் மாதத்தில் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் முடக்கல் நிலை அமுல்படுத்தப்பட்ட இடங்களில் மிகவும் முக்கியமான நேரத்தில் அறிமுகப்படுத்தியதுடன், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களைப் பெறுவதை உறுதிசெய்து, பாதுகாப்பாக அவர்களின் வீட்டு வாசலிலேயே வழங்கியது.

இந்த விருது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட Threadworks (Pvt.) Ltd. இன் தலைவர் Dr. கிஹான் டி சொய்சா அவர்கள், “SLIM Brand Excellence விருதுகளில் அங்கீகாரம் பெற்றமை தொடர்பில், குறிப்பாக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்கள் வளர்ச்சியடைய வலுவான மீட்டெழுச்சியை வெளிப்படுத்த வேண்டிய வருடத்தில் தனதாக்கியமை தொடர்பில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த விருது இன்னல்களுக்கு இடையில் தொடர்ச்சியான புத்தாக்கங்கள் மீதான எங்கள் கவனத்தை பிரதிபலிக்கிறது. மேலும், இது முழு Velona Cuddles குழுவும் மதிப்புமிக்க நுகர்வோரை நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பிரதானமாக முன்னிலைப்படுத்த வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியின் அங்கீகாரமாகும்,” என்றார்.

Velona  பல தசாப்தங்களாக பிரபல வர்த்தகநாமகாக இருந்து வருவதுடன், இது பல்வேறு வயதினருக்கும் ஏற்ற வசதியான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் ஆடைத் தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. அதன் மிகவும் பிரபலமான தயாரிப்பு வரிசையான Velona Cuddles அணையாடைகள் பல ஆண்டுகளாக பல இலங்கையர்களின் இதயங்களுடன் நெருக்கமாகி, பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துகின்றது. இன்று, இந் நிறுவனம் wet wipes, Looney Tunes, Little Swimmers, Ezy Pants, Cuddles Bamboo Water Wipes, Cuddles Australian Bamboo Diapers, Pro Guard Diapers, Classic Diapers மற்றும்  பிறந்த குழந்தைகள், வளர்ந்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல குழந்தை தயாரிப்புகளை கொண்டுள்ளது. முழுமையான மன அமைதியைக் கொடுப்பதற்காக அதிகப்படியான திரவத்தை உடனடியாக உறிஞ்சும் ஒரு அகற்றக்கூடிய Proteck பெட் பேட் மற்றும் படுக்கை புண்கள் மற்றும் தடிப்புகளைத் தடுக்கும் Pro Guard அணையாடைகள் போன்ற வயது வந்தோர் தயாரிப்புகள் Velonaவில் முத்திரை பதித்த தயாரிப்புகளாகும். நச்சுத்தன்மையற்ற பொருட்களால் தயாரிக்கப்படும் Velona Cuddles மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உயர்த்துவதற்கான உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு மலிவு விலையில் பாதுகாப்பான அணையாடைகளை கொண்டு வருகிறது. Velona Cuddles இணையத்தளம் – www.velonacuddles.com வர்த்தநாமத்தின் முழு தயாரிப்பு வரிசையும் காட்சிப்படுத்துவதுடன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவர்களின் கர்ப்ப காலம் முழுவதும் விரிவான வழிகாட்டுதல் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.