யாழ். போதனா வைத்தியசாலையில் MRI அறிக்கைகளை விரைவாக பெற அதிநவீன கணனிமயமாக்கப்பட்ட தரவு பகுப்பாய்வு தொகுதியை நன்கொடையாக வழங்கிய DIMO Healthcare
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare நிறுவனம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனருக்கு, மேலதிக கணனி தரவுப் பகுப்பாய்வு தொகுதியை (Workstation) நன்கொடையாக வழங்கியுள்ளது. MRI அறிக்கைகளைப் பெறுவதற்கும், இதன் மூலம் நோயறிதல் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கும், உடனடியாக சிகிச்சையைத் திட்டமிடுவதற்கும் இது மிகவும் உதவியாக அமையும்.
DIMO Healthcare நிறுவனம் 2020 இல் யாழ். போதனா வைத்தியசாலையில் Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனரை நிறுவியது. யாழ். மாவட்டத்தின் பொதுச் சுகாதார சேவை கட்டமைப்பில் உள்ள ஒரேயொரு MRI ஸ்கேன் இயந்திரமான இது பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.
நோயறிதல் செயன்முறையை விரைவுபடுத்துமாறு யாழ் போதனா வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மருத்துவமனையின் MRI ஸ்கேன் இயந்திரத்திற்காக இந்த மேலதிக கணனி தரவு பகுப்பாய்வு தொகுதியை (Workstation) DIMO Healthcare வழங்கியது.
இந்த மேலதிக கணனி தரவு பகுப்பாய்வு தொகுதியானது, யாழ் போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதன் முதலாவது நன்மையானது, MRI அறிக்கைகளைப் பெறுவதை விரைவுபடுத்துவதும், நோயறிதலை மிகவும் திறம்படச் செய்வதும், அதன் மூலம் விரைவான சிகிச்சை திட்டமிடலை மேற்கொள்ள உதவுவதும் ஆகும். இதன் இரண்டாவது நன்மையானது, விரிவாக்கப்பட்ட தரவுப் பகுப்பாய்வு திறன், நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சிக்கான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனரின் மின்சக்தியைச் சேமிக்கும் விசேட திறனின் மூலம், 30% மின்சக்திச் சேமிப்பதன் மூலம் நிலைபேறான சுகாதாரச் சூழலை அது உருவாக்க உதவுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த DIMO Healthcare நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி பிரியந்த திஸாநாயக்க கூறியதாவது: “யாழ். போதனா வைத்தியசாலையின் வினைத்திறனை அதிகரிக்கவும், வடக்கு-கிழக்கு பிராந்திய மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு பங்களிப்பதில் நாம் பெருமையடைகிறோம். எமது 2030 நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலுக்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானதாகும். இதுபோன்ற முயற்சிகள், ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவது தொடர்பான சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்தும்.
இலங்கையில் உள்ள சமூகத்தின் ஒட்டுமொத்த சுகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வாழ்க்கையை மாற்றுவதற்கு பங்களிக்கும் பல புரட்சிகரமான தொழில்நுட்ப தீர்வுகளை DIMO Healthcare தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும்.