LIMA ELO7 மின்சார துவிச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் சிங்கர்

LIMA ELO7 மின்சார துவிச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் சிங்கர்

புத்தாக்கம் மிக்க எடுத்துக்காட்டான நிறுவனமும் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான Singer Sri Lanka PLC (சிங்கர் ஶ்ரீ லங்கா) நிறுவனம், இலங்கைக்கு புதிய LIMA ELO7 electric bike (மின்சார துவிச்சக்கர வண்டியை) அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், இரு சக்கர வண்டி பயண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராகியுள்ளது.
ஸ்டைலான, சீரான மற்றும் நிலைபேறான பயணத்தின் புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையிலான LIMA ELO7 ஆனது, சிங்கர் விற்பனை நிலையங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்ற ஒரு நேர்த்தியான மின்சார துவிச்சக்கர வண்டியாகும். இது இலங்கையில் சிங்கரின் நம்பகமான நற்சான்றிதழ்களின் ஆதரவுடன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சூழல் நட்பு தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்ட கலவையாக காணப்படுகின்றது.
Singer (Sri Lanka) PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், “LIMA ELO7 மின்சார துவிச்சக்கர வண்டியின் அறிமுகத்தின் மூலம் இரு சக்கர வாகன சந்தையில் ஒரு அதிர்வை ஏற்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்! மின்சாரத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள், பூமியின் நிலைபேறான தன்மைக்கு இன்றியமையாத போக்குவரத்தின் எதிர்காலம் என, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நிலைபேறான அம்சத்தை மையப்படுத்திய ஒரு நிறுவனம் எனும் வகையில், இலங்கையில் உள்ள தனது வாடிக்கையாளர்களை உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்புகளின் புதிய போக்குகள் மூலம் வலுவூட்டுவதற்கு நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில் இந்த மின்சார துவிச்சக்கர வண்டி ஆனது, நவீன வடிவமைப்பு, மின்சார பயன்பாட்டு செயல்திறன், செலவு செயல்திறன், காபன் வெளியீட்டைக் குறைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை நீக்குதல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சந்தையில் யாராலும் வெல்ல முடியாத இடத்தை பிடிக்கிறது. மிகக் கவனமாக மதிப்பாய்வு செய்தபின், நம்பகமான புத்தாக்க கண்டுபிடிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தும் நீண்ட வரலாற்றை சிங்கர் நிறுவனம் கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது அறிமுகமாகும் LIMA ELO7 ஆனது அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது வாழ்க்கைப் பாணியை மேம்படுத்துவதற்கான இணையற்ற அனுபவத்தை வழங்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன், LIMA உடனான எமது கூட்டாண்மையானது, நாடு முழுவதும் அதன் பிரபலத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.” என்றார்.

LIMA ELO7 ஆனது, ஸ்டைலில் எவ்வித குறைவையும் ஏற்படுத்தாது, நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தவும், சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவும் உறுதியளிக்கிறது.
இது பற்றி Singer (Sri Lanka) PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், Janmesh Antony தெரிவிக்கையில்,: “2003 இல் LIMA Vehicle Group Co.Ltd தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், வருடாந்தம் 5 மில்லியன் சைக்கிள்களை அது உற்பத்தி செய்தவாறு, குறுகிய காலத்திற்குள் சீனாவின் முன்னணி மின்சார துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. நவீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட LIMA மின்சார துவிச்சக்கர வண்டிகள் தற்போது உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், உலகளாவிய ரீதியில் மின்சார பைக்குகளுக்கான ஒரு சிறந்த தெரிவு எனும் இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றதெனவும், பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குமெனவும் நாம் நம்புவதால் இந்த நவீன மின்சார துவிச்சக்கர வண்டியை இலங்கைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம், ” என்றார்.
Singer (Sri Lanka) நிறுவனம் சுமார் 150 ஆண்டுகளாக உலகளாவிய புதிய வர்த்தகநாமங்கள் மற்றும் தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் பெருமையைக் கொண்டுள்ளது. அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமான சிங்கரின் நீண்டகால பிரசன்னம் மற்றும் அதன் சிறந்த சேவை ஆகியன காரணமாக, இந்த வர்த்தக நாமம் முழு நாட்டுக்கும் பிடித்துள்ள ஒன்றாக விளங்குகின்றது. மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கைக்கு சான்றாக, சிங்கர் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக 18 வருடங்களாக ‘People’s best brand in Sri Lanka’ (இலங்கையில் மக்களின் சிறந்த வர்த்தகநாமம்) எனும் விருது வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து, உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்துகின்ற புதிய தொழில்நுட்ப போக்குகளைப் பயன்படுத்தியவாறு, வலுவான தொழில்நுட்ப அடித்தளத்தை Singer (Sri Lanka) அமைத்து வருகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: LIMA by Singer Facebook பக்கத்தைப் பார்வையிடவும்:
https://web.facebook.com/limaelectricbikes

அல்லது Singer (Sri Lanka) இணையதளத்தைப் பார்வையிடவும் : www.singersl.com
அல்லது உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்: 011-5400400