3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது.
பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கான அணுகலையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்தத் திட்டம் இலங்கையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செட்டிங் செயலியான WhatsApp இல் எல்லையற்ற பயன்பாட்டை வழங்குகிறது.
இது பாவனையாளர்களுக்கு செட்டிங், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு ஆகியவற்றின் நன்மையையும் வழங்குகிறது.
இந்த திட்டங்களின் தனித்துவம் என்னவெனில், ஸ்மாட்போன் பாவனையாளர்கள் Hutch 3G வலையமைப்பு அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட bigger and better 4G வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக அணுகலை பெற்றுக்கொள்ளக் கூடியமையாகும். இது எந்தவொரு புதிய உற்பத்தி மற்றும் சேவையை செயற்படுத்தும் போது டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு மிகவும் அவசியமென HUTCH நம்பும் நடைமுறையாகும்.
இந்த திட்டங்களின் விலைகள் கட்டுப்படியாகும் வகையில் அமைந்துள்ளன. இதன் பிரகாரம் 30 நாட்களுக்கான எல்லையற்ற Facebook, Messenger மற்றும் WhatsApp திட்டம் ரூபா 124/- க்கும், 7 நாட்களுக்கானது Rs.54/- என்ற விலையிலும் கிடைக்கின்றன. இந்த திட்டங்களை *131# என்ற குறுகிய குறியீட்டு எண்களின் மூலம் அல்லது விற்பனை நிலையம் அல்லது HUTCH self-care செயலி ஊடாக ஒன்லைன் மூலம் திட்டத்தின் பெறுமதிக்கு ரீலோட் செய்வதன் மூலமும் செயற்படுத்திக் கொள்ள முடியும்.
இலங்கை நுகர்வோர்கள் தற்போது Hutch வழங்கும் பல வகையான தயாரிப்புகள் மூலம் பிரபல மொபைல் செயலிகளுக்கு எல்லையற்ற அணுகலை அனுபவித்து மகிழ முடியும். பாவனையாளர்களுக்காக நாம் அறிமுகப்படுத்தியுள்ள எல்லையற்ற Facebook, Messenger மற்றும் WhatsApp திட்டங்கள் அனைத்து இலங்கையருக்கும் கட்டுப்படியாகும் விலையில் டிஜிட்டல் சேவைகளை கொண்டு செல்லும் எமது தத்துவத்துக்கு மேலுமொரு உதாரணமாகும் என Data, VAS மற்றும் Digital இற்கான பிரதி பொது முகாமையாளர், யார்தவ் மதியாபரணம் தெரிவிக்கின்றார்.