2025 யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதாரம் மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்திய Link Natural
CIC ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமும், மூலிகை மருந்து, மூலிகைச் சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத ஞானத்தில் வேரூன்றிய, நவீன விஞ்ஞானத்துடன் இணைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளில் நிபுணத்துவம் பெற்ற நம்பகமான பெயரான, Link Natural (லிங்க் நெச்சுரல்) அண்மையில் யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற 2025 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (JITF) பெருமையுடன் பங்கேற்றது. Link Natural கூடத்தில் சுமார் 25,000 பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வானது, ஆர்வம் மிக்க யாழ்ப்பாண மக்களுடன் இணைவதற்கும், ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இக்காட்சிக்கூடத்தில் Link Natural இன் நம்பகமான உற்பத்தி வரிசைகளிலிருந்தான முக்கிய தயாரிப்புகளான லிங்க் சமஹன், லிங்க் சுதந்த, லிங்க் கேஷா, சுவஸ்தா அமுர்தா, SP பாம், உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகநாமங்கள் இடம்பிடித்தன. புத்தாக்கமான ஆயுர்வேத மூலிகைத் தீர்வுகள் மூலம் முழுமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதில் Link Natural இன் உறுதிப்பாட்டை இந்த தயாரிப்புகள் தொடர்ச்சியாக எடுத்துக்காட்டுகின்றன.
இந்த முதன்மையான தயாரிப்புகளை பார்வையாளர்கள் ஆராய்ந்ததோடு, இங்கு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இலவச சுகாதார சேவைகளையும் பயன்படுத்திக் கொண்டனர். இதில் பிரத்தியேக கூந்தல் ஸ்கேன் மற்றும் பகுப்பாய்வு, இலவச பல் பரிசோதனைகள், இலவச சுகாதார ஆலோசனைகள் ஆகியனவும் அடங்கியிருந்தன. பங்கேற்பாளர்கள் தமது தனிப்பட்ட உடல்நலம் மற்றும் சுகவாழ்வை மேம்படுத்துவதற்கான பயனுள்ள அம்சங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
அது மாத்திரமன்றி, இந்த காட்சிக்கூடத்தில் பார்வையாளர்களுக்கு Link Natural தயாரிப்புகளுக்கான கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்கப்பட்டன. இது ஆரோக்கியத்தை அணுகக்கூடியதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கியது. மேலும் பங்கேற்பாளர்கள் மதிப்புமிக்க பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்ற, பங்குபற்றுதலுடன் கூடிய போட்டிகள் மற்றும் டிஜிட்டல் சவால்களும் இங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வின் வெற்றி குறித்து Link Natural சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ராஜ் குமார் தெரிவிக்கையில், “JITF 2025 இல் எமது பங்கேற்பின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களின் சுகவாழ்வை மேம்படுத்துவதில் Link Natural இன் அர்ப்பணிப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களின் ஆவல் மிக்க ஈடுபாட்டைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம். எமது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதோடு மாத்திரமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த எமது தயாரிப்புகள் எவ்வாறு உதவுகிறது என்பதை நிரூபிக்கும் ஒரு முக்கிய அனுபவத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டோம். இந்தப் பயணத்தை வட பிராந்தியத்தில் உள்ள மக்களுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், நீடித்த உறவுகளை உருவாக்கவும், சமூகத்தின் பொதுவான சுகவாழ்வை மேம்படுத்தவும் ஒரு ஒப்பிட முடியாத தளத்தை 2025 யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி Link Natural இற்கு வழங்கியது. JITF 2025 இல் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் பங்குபற்றலுடன், ஆரோக்கியமான, மிகவும் நிறைவான வாழ்க்கையை தழுவுவதற்காக, சமூகங்களை மேம்படுத்துவதில் நம்பகமான பங்காளியாக Link Natural தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Link Natural பற்றி
மூலிகை மருந்துகள், மூலிகை சுகாதாரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் அதிகரிகத்து வரும் தயாரிப்பு வகைகளுடன் உள்ளூர் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக Link Natural திகழ்கின்றது. ஏற்றுமதிச் சந்தைக்கான அத்தியாவசிய எண்ணெய்களை தயாரிப்பதன் மூலம் 1982 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்த Link Natural ஆனது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தயாரிப்புகளை வழங்கி வருகிறது. சமஹன், சுதந்த, கேஷா, ஸ்வஸ்தா அமுர்தா, ஸ்வஸ்தா திரிபலா, மஸ்ஸல்கார்ட், கிராம்ப்கார்ட் உள்ளிட்ட சர்வதேச ரீதியல் நம்பகமான மற்றும் காலத்தால் அழியாத பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக உள்ள Link Natural, நுகர்வோருக்கு தலைமுறை தலைமுறையாக முழுமையான சுகவாழ்வை வழங்குகிறது. வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை வணிகத்திற்கான உறுதியான அடித்தளத்தின் மூலம் அமைத்துள்ளதோடு, தொடர்ச்சியாக ஆயுர்வேதத்தின் பொக்கிஷங்களை ஆராய்ந்து, இன்றைய நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும் பாதுகாப்பான, பயனுள்ள, தரமான, உறுதியான சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நிறுவனம் பாடுபட்டு வருகிறது.
END