2020 ஆண்டின் நான்காம் காலாண்டில் ஆசியாவில் அதிக ஏற்றுமதியை மேற்கொண்ட வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ள vivo

2020 ஆண்டின் நான்காம் காலாண்டில் ஆசியாவில் அதிக ஏற்றுமதியை மேற்கொண்ட வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ள vivo

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo,  2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஆசிய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மேற்கொண்ட நிறுவனங்களின் பட்டியலில், 15 சதவீத மொத்த சந்தைப் பங்குடன் முதலிடத்தில் உள்ளதாக Counterpoint தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற சந்தைகளில் vivo வின் உறுதியான செயற்பாட்டின் காரணமாகவே இந்த இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இந்தக் காலாண்டுப் பகுதியில் ஏனைய அனைத்து ஸ்மார்ட்போன்  தயாரிப்பாளர்களையும் விட vivo முன்னிலையைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆசியாவில் அதன் வலுவான செயல்திறனுக்கு மேலதிகமாக, vivo உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந் நிறுவனம் 8.6 சதவீத சந்தையுடன், ஐந்தாவது இடத்தில் இருந்தது. 2014 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைகளில் நுழைந்ததிலிருந்து, vivo ஆசிய சந்தையில் தனது நிலையை நிலைநிறுத்தியதோடு, உலகம் முழுவதும் உலகமயமாக்கலை துரிதப்படுத்தியுள்ளது.

Counterpoint’s China Smartphone Weekly Tracker இன் பிரகாரம் ஏப்ரல் 14 அன்று முதன்முறையாக, விவோ சீனா சந்தையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் 11 வது வாரத்தில் (மார்ச் 8 – 14), நுகர்வோர் விரும்பும் தயாரிப்பு வரிசையின் காரணமாக ஏனைய வர்த்தகநாமங்களை முந்தியுள்ளது.