ஸ்மார்ட்போன் கெமரா அமைப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் VIVO

ஸ்மார்ட்போன் கெமரா அமைப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் VIVO

ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அம்சங்கள் மற்றும் நன்மைகளின் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய தேவையாகிவிட்டன. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கமானது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பொருத்தமான நுகர்வோர் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கெமராக்களின் தரமும் கடந்த சில வருடங்களாக முன் மற்றும் பின்பக்க கெமரா என இரு வகைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றன. இன்றைய ஸ்மார்ட்போன்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தும் உள்ளமைக்கப்பட்ட உயர்தர கெமரா லென்ஸ்கள்,  மொபைல் செயலிகள் உட்பட நீட்டிக்கப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன் மூலமான புகைப்படம் எடுக்கும் போக்கு அதிகரித்து வருவதால், இந்த நாட்களில் கெமரா திறன் ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய விற்பனை புள்ளியாக மாறியுள்ளது.

vivo, “வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புத்தாக்கம்” என்பதை நோக்காகக் கொண்ட அதன் அர்ப்பணிப்புடன், V மற்றும் Y தொடர் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட கெமரா அனுபவத்தில் புதுமைகளை முன்னெடுத்து வருகிறது. ஸ்மார்ட்போன் துறையில் முன்னோடியான vivo அன்றிலிருந்து எல்லைகளைத் தாண்டி, தொழில்துறையில் சிறந்த கெமரா தொழில்நுட்பங்களைக் கொண்ட போன்களை வழங்கி வருகிறது. நீண்ட காலமாக, கெமராவின் மெகாபிக்சல் எண்ணிக்கை அதன் தரத்தின் நேரடி குறிகாட்டியாகக் கருதப்பட்டது. இப்போது, ​​ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒருவரின் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த நவீன கெமரா தொழில்நுட்பங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஒப்டிக் சென்சர்களை அதிகளவில் கொண்டு வருகின்றனர்.

AI இனால் வலுவூட்டப்பட்டு, quad மற்றும் triple-camera அமைப்புகளுடன் பல படப்பிடிப்பு முறைகளுடன், Y தொடர் மூலமாக vivo மேம்பட்ட கெமரா அம்சங்களை பாவனையாளர்களுக்கு விரும்பத்தக்க விலை வரம்புகளில் வழங்குகிறது. vivoவின் Y தொடர் தயாரிப்பு வரிசையானது வேகமாக நகரும் பாவனையாளர்களின் வாழ்க்கை முறைகளுடன் ஒத்திசைந்து இருக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Y தொடர் ஸ்மார்ட்ஃபோன்கள் நவநாகரீக வடிவமைப்பு, சிறந்த கெமரா அமைப்புகள், சக்திவாய்ந்த புரசசர்கள் மற்றும் பாரிய பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

vivo, முன்னணி கெமரா அம்சங்களைக் கொண்ட பிரீமியம் V தொடர் மூலம் புதிய எல்லைகளை உடைத்தது. செல்ஃபி எடுப்பது, குறுகிய வீடியோக்கள் எடுப்பது மற்றும் தனிப்பட்ட தருணங்களைப் படம்பிடிப்பது ஆகியவை பாவனையாளர்கள் தமது கையடக்க சாதனங்களிலிருந்து மிகவும் எதிர்பார்க்கும் தேவை என்பதை vivo புரிந்துகொண்டது. மேலும், முன்புற கெமராவுக்கு Eye autofocus என்ற முன்னணி தொழில்நுட்பத்தையும் வழங்கி அதன் திறனை மீள்வரையறை செய்துள்ளது. இவற்றுடன், dual-view video mode, ultra-stable video, super night mode, slow-motion video feature உட்பட மேலும் பல சிறப்பம்சங்களை புகைப்பட பிரியர்களுக்கும், உள்ளடக்க உருவாக்குனர்களுக்கும் V தொடர் வழங்குகின்றது.

பல ஆண்டுகளாக, vivo ஆனது V மற்றும் Y தொடர்களில் மேம்பட்ட கெமரா தொழில்நுட்பம் மற்றும் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தடையற்ற செயல்திறனை உறுதி செய்யும் தொழில்துறையில் முன்னணி புரசசர்களுடன் நீண்ட பேட்டரி ஆயுளின் முக்கியத்துவத்தையும் இந்த வர்த்தகநாமம் வலியுறுத்துகிறது.