வளர்ச்சியுறும் நாட்டிற்கு உயிர் கொடுக்கும் மல்டிலக் சமூக நற்பணி

வளர்ச்சியுறும் நாட்டிற்கு உயிர் கொடுக்கும் மல்டிலக் சமூக நற்பணி

தேசிய குருதி மாற்றீட்டு மையத்திற்கு உதவும் வகையில், அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் 4ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான சமூகநலப் பணி, அண்மையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் கல்தெமுல்ல வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. இப்பெரும் சமூகப் நற்பணிக்கு, வண்ணப்பூச்சு உலகின் உள்ளூர் வர்த்தக நாமம் எனும் மாபெரும் நற்பெயரைக் கொண்ட மல்டிலக் நிறுவனம், அனுசரணை வழங்கியிருந்தது.

போட்டித்தன்மை கொண்ட வர்த்தக உலகில், உள்ளூர் அடையாளத்திற்கான வலுவான நற்பெயரை வென்றுள்ள மல்டிலக் நிறுவனம், இவ்வாறான சமூகப் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்ற ஒரு நிறுவனமாகும். தேசியத்திற்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தியை எதிர்பார்த்து செயற்படும் தற்போதைய அரசின் முக்கியமான திட்டங்களுக்கு தொடர்ந்தும் பக்கபலமாக இருந்து, ‘வளரும் நாட்டை கட்டியெழுப்பும் நாம்’ எனும் கருப்பொருளின் கீழ் இந்த இரத்த தான செயற்பாட்டிற்கு, அனுசரணை வழங்கியுள்ள மல்டிலக் நிறுவனம், உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஒரு முன்மாதிரியாக, அது தனது வெற்றிகளை ஈட்டி வருகிறது.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், தேசிய இரத்தமாற்றீட்டு மையத்தில் இரத்தப் பற்றாக்குறை நிலவி வருகின்றமை தெரியவந்ததைத் தொடர்ந்து, அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த இரத்த தான முகாமுக்கு மல்டிலக் நிறுவனம் அனுசரணை வழங்கியது. மல்டிலக் நிறுவனம் எப்போதும் வர்த்தக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு செயற்படும், பரந்த சமூகப் பொறுப்பைக் கொண்ட ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது.

நீங்கள் வழங்கும் ஒரு துளிக் குருதி, விலைமதிப்பற்ற உயிரொன்றைக் காப்பாற்றும் வலிமை கொண்டுள்ளது. அவ்வாறான கொடையை வழங்கும் பொருட்டு, இலங்கையிலுள்ள கொடையாளர்களுக்கு, களமொன்றை ஏற்படுத்திய மல்டிலக் நிறுவனம், எதிர்காலத்தில் இதுபோன்ற நற்பணிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும் என உறுதிபூண்டுள்ளது.