பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் DIMO நிறுவனம் இலவசமாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்திருந்த ‘DIMO Care Camp’ உழவு இயந்திர சேவை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதோடு, இதில் பெருமளவான உழவு இயந்திர உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

விவசாய நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை பேணுவதற்கு, விவசாய இயந்திரங்களின் முறையான பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இந்நாட்டின் விவசாயிகளுக்கு தமது பங்களிப்பை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த இலவச சேவையில், எந்தவொரு வர்த்தகநாமத்தைச் சேர்ந்த அல்லது எந்தவொரு வகையான உழவு இயந்திரங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும். இவ்வருடம் நாட்டிலுள்ள முக்கிய விவசாய மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்தொடர் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைவாக மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, அநுராதபுரம், குருணாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த முகாம்களில் பங்கேற்ற விவசாயிகளின் உழவு இயந்நிரங்கள் இலவசமாக ஆய்வு செய்யப்பட்டதோடு, பழுது பார்த்தல், உழவு இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களுக்கு விசேட தள்ளுபடி போன்ற பல சலுகைகளை DIMO வழங்கியது. அத்துடன், உழவு இயந்திரங்களுக்கான டயர்கள் மற்றும் DIMO Lumin மின் விளக்குகளுக்கு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டன. அது மாத்திரமன்றி, இந்த சேவை முகாமின் மூலம் விவசாயிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களது இரத்த அழுத்தம், வயது மற்றும் உயரத்திற்கேற்ற நிறை (BMI) தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்பட்டு, பெரும் போகத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அவசியமான சிறந்த ஆரோக்கியம் தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயத்தை வெற்றிகரகமாக முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல் பணிகள் இங்கு இடம்பெற்றன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, DIMO நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி (Automotive Engineering Solutions) மஹேஷ் கருணாரத்ன கூறியதாவது: “இந்த DIMO Care Camp நிகழ்வை முன்னெடுக்கும் இடங்களை தெரிவு செய்யும் வேளையில், ​​உழவு இயந்திர சேவை திட்டங்கள் தொடர்பில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்தோம். அதிகளவானோர் தமது உழவு இயந்திரங்களை பெரும் போகத்திற்கு தயார் செய்யும் வாய்ப்பை வழங்குவதே இதில் எமது முதன்மையான நோக்கமாகக் காணப்பட்டது. கிளிநொச்சி, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் இவ்வாறான உழவு இயந்திர சேவை முகாம் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பது இங்கு ஒரு விசேட அம்சமாகும். இந்தத் நிகழ்ச்சித் தொடர்கள் மூலம் பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் ஏராளமான விவசாயிகளுக்கு நிவாரண சேவைகளை வழங்க வாய்ப்புக் கிடைத்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Mahindra, Swaraj போன்ற முன்னணி உழவு இயந்திரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகித்தல் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் DIMO நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உழவு இயந்திர பழுதுபார்த்தல் உள்ளிட்ட விடயங்களில் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களை DIMO நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, இலங்கையின் விவசாயிகளை வலுவூட்டுவதற்கும் அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்துவதற்கும் DIMO நிறுவனம் தொடர்ச்சியாக உறுதி பூண்டுள்ளது. இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலை அபிவிருத்தி செய்வதற்கான DIMO நிறுவனத்தின் பாரிய பணியின் ஒரு படியாக முன்னெடுக்கப்படும் இந்த முகாமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கும், விவசாயிகளின் அபிவிருத்திக்கும் மிகவும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.