நீங்கள் HUAWEI nova 7i ஐ தெரிவு செய்ய ஐந்து காரணங்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HUAWEI nova 7i , ரூபா 55000 இற்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், முக்கிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்படியாகும் விலையில், 48MP செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்படும், அனைத்து சூழ்நிலைகளுக்குமான quad கமெரா மற்றும் துறையின் முன்னணி 7nm Kirin 810 சிப்செட் என முதற்தர சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த போன் உங்கள் விருப்பத்துக்குரிய தெரிவாக இருக்க வேண்டிய காரணிகள் ஐந்து இதோ. HUAWEI nova 7i சக்திவாய்ந்த கிரின் 810 ஐப் பயன்படுத்துகிறது – இது முன்னோடி 7nm செயல்முறையின் மூலம் உற்பத்தி செய்யப்படுவதுடன், குறைந்த ஆற்றலை மட்டுமே நுகரும் இந்த சிப்செட் அதிக ஆற்றல் திறன் கொண்டது. மேலும், தனிப்பயனாக்கப்பட்ட Mali-G52 GPU கேமிங்கின் போது ரெண்டரிங் திறனை மேம்படுத்துகின்றது. இதனுடன், புதிய தலைமுறை PUBG, Arena of Valor, மற்றும் ஏனைய முன்னணி கேம்ஸ்களை, frame rate ஸ்திரத்தன்மை மற்றும் கேம் கட்டுப்பாட்டு உணர்திறன் (game control responsiveness) ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் மேலும் உகந்ததாக்குகின்றது.
படங்களை எடுத்தல், வீலொக்கிங், தொடர்ச்சியான கேம்மிங் மற்றும் வீடியோக்களை பார்வையிடுதல் போனின் மின்கலத்தின் ஆயுள் மற்றும் மின்னேற்றலின் வேகம் ஆகியவற்றில் தாக்கம் செலுத்துகின்றது. இதனாலேயே HUAWEI nova 7i, ஒருநாள் வரை நீடித்து நிலைக்கும் 4200mAh பாரிய மின்கலத்தைக் கொண்டுள்ளது. 40W HUAWEI SuperCharge சிறப்பம்சமானது உங்கள் ஸ்மார்ட்போனை வெறும் அரை மணித்தியாலங்களில் 70% வரை சார்ஜ் செய்யக்கூடியது. HUAWEI nova 7i, புதுமையான பக்கவாட்டில் அமைந்த கைவிரல்ரேகை பவர் பட்டன் தீர்வை பயன்படுத்துவதால், போனின் பின்புறம் எப்போதும் பூரணமாகவும், சீராகவும் இருக்கின்றது. மேலும், இதன் தொட்டுணரக்கூடிய கைவிரல் ரேகை பட்டனானது, அதிகமாக ஸ்மார்ட்போன்களின் காணப்படும் optical in-screen கைரேகை ஸ்னேகரை விட வேகமாகவும், மிகவும் திறமையானதாகவும், பாதுகாப்பாகவும் unlock செய்யகூடியது.
பொதுவாக ஸ்மாட்ர்ட்போன்கள் முக பொழிவுபடுத்தலை மட்டுமே மேற்கொள்கின்றன. எனினும், HUAWEI nova 7i, Kirin 810 சிப்பிலிருந்து பெறப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கணித்தலை பயன்படுத்தி நிகழ்நேரத்தில் வீடியோக்களில் பொருளின் உடல் வடிவத்தை எடிட் செய்வதற்காக உடலின் வெளிப்புறம், தோற்ற அமைவு மற்றும் சுற்றுப்புறங்களை புத்திசாலித்தனமாகக் கண்டறியும். இது “Beauty” மற்றும் “Shaping” செயல்பாடுகள் போன்ற அம்சங்களின் மூலம் பாவனையாளர்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. HUAWEI nova 7i, 48 மெகாபிக்ஸல் 48MP செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்படும் கமெராவைக் கொண்டதுடன், இதன் பிரதான கமெரா சிறப்பான 4K வீடியோ பதிவுக்கு உதவுகின்றது. NPUவின் சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கணித்தல் திறமையின் மூலம், நிலைமாற்றலை சேர்க்க, ஒரே தட்டலில் இசையை எடிட்டிங் செய்யும் வசதி மற்றும் பலவகையான சிறப்பம்சங்களை வழங்குகின்றது. இதில் தரப்பட்டுள்ள டெம்பிளேட்களைப் பயன்படுத்தி இலகுவாக தொழிற்சார் தரத்துக்கு இணையான வீடியோக்களை உருவாக்க முடியும். நீங்கள் கேமராகவோ, புகைப்படவியலாளராகவோ அல்லது வீடியோக்கள் எடுப்பதனை ரசிப்பவராகவோ இருக்கலாம், இவை அனைத்துக்கும் ஏற்ற சிறந்த தெரிவு HUAWEI nova 7i.