நிலைபேறான எதிர்காலத்திற்காக தனது முந்த்ரா அனல் மின் நிலையத்தில் பசுமை அமோனியா மூலம் இணை-வலுவூட்டப்படும் Adani Power
- இந்தியாவின் குஜராத்தின் முந்த்ராவில் 330 மெகாவாற் அலகு மூலம் இணை வலுவூட்டப்படும் பசுமை அமோனியா
- பசுமை அமோனியா தகனத்தில் CO2 உருவாகாது; அதிக சூழல் நட்புமிக்கது
- ஜப்பானின் IHI Corporation மற்றும் KOWA உடன் இணைந்து NEDO திட்டத்தின் ஒரு அங்கமாக இதனை ஒரு முன்னோட்டமாக APL மேற்கொள்கிறது
- IHI இன் ஜப்பான் தொழிற்சாலையில் பசுமை அமோனியா தகனத்திற்காக, முந்த்ரா மின் நிலையத்தின் கொதிகலன்களை இயைபாக்குவதில் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல்கல்
- இந்த முன்னோட்ட திட்டம் ஜப்பான் – இந்தியா தூய வலுசக்தி கூட்டாண்மையின் கீழ் அமைகிறது
2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் வலுசக்தி மாற்றத்தை துரிதப்படுத்தவும், மாசுகளின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலும், 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடிய நிலையில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Adani Power Ltd., அதன் பன்முக காபன் நடுநிலையாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் முந்த்ரா மின் நிலையத்தில் ஒரு நிலத்தடி பசுமை அமோனியா தகன முன்னோட்ட திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான முந்த்ரா அனல் மின் நிலையமானது, 330 மெகாவாற் மின்சாரம் கொண்ட வழக்கமான நிலக்கரி கொதிகலனில், 20% வரை பசுமை அமோனியா இணைந்த தகனத்தை மேற்கொள்ளும்.
பசுமை அமோனியாவானது, பசுமை ஐதரசனில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்தி மின்பகுப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுவதோடு, இது கொதிகலன்களுக்கான ஒரு மூலப்பொருளாக அமைகின்றது. அமோனியாவில் காபன் இல்லை என்பதால், அதன் தகனம் காரணமாக CO2 வெளிப்படுவதில்லை. இது நிலத்தடி எரிபொருட்களுக்கு மாற்றீடான நீண்ட கால காபன் நடுநிலையாக்கத்திற்கு உதவுகிறது. Adani Power நிறுவனமானது, ‘ஒவ்வொரு அலகு’ மாசு வெளியீட்டுக்கும், தொழில்துறையில் ஏற்கனவே ஒரு அளவுகோலை அமைத்துள்ளதோடு, அதன் புதிய ஆலைகளில் அதிநவீன ‘Ultra Supercritical’ தொழில்நுட்பத்தை தழுவியுள்ளது.
இந்த முன்னோட்ட திட்டத்தை செயற்படுத்தவும் ஏனைய APL அலகுகளுக்கும், நிலையங்களுக்கும் அதனை விரிவாக்கம் செய்வதற்கும், IHI மற்றும் Kowa-Japan உடனான Adani Power நிறுவனத்தின் இந்த இணைவு அமைகின்றது. வலுசக்தி சேமிப்பு மற்றும் வலுசக்தி உருவாக்கும் தயாரிப்புகளில் Kowa செயற்படுகின்றது. அதே நேரத்தில் IHI ஆனது ஒரு பாரிய தொழில்துறை நிறுவனமாகும். இது அமோனியா தகன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானில் உள்ள IHI நிறுவனத்தின் ஆலையில் இடம்பெறும் தகன சோதனைகள், 20% அமோனியா கலவையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, முந்த்ரா மின் நிலைய உபகரணங்களை இயைபாக்கம் செய்கிறது. இரண்டு மூலப்பொருள்களுக்கும் இடையேயான பொருளாதார அம்சங்களிலான சமநிலை ஏற்பட்டதும், இந்தத் தீர்வை முந்த்ரா மின் நிலையத்தில் செயற்படுத்துவதற்கு அதன் முடிவுகள் ஊக்கமளிக்கும் என கூட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அதிநவீன பசுமை திட்டத்தை முன்னெடுக்க, ஜப்பானுக்கு வெளியே தெரிவு செய்யப்பட்ட முதலாவது இடம் முந்த்ரா மின்னுற்பத்தி நிலையமாகும்.
இந்த இலட்சியத் திட்டமானது, ஜப்பான் – இந்தியா தூய வலுசக்தி கூட்டாண்மையின் (CEP) கீழ் உருவாக்கப்பட்டுள்ளதோடு, வலுசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், காபன் நடுநிலையாக்கத்தை அடைதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது புதிய வலுசக்தி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பின் (NEDO) “காபன் நடுநிலையாக்கல் மற்றும் வலுசக்தி மாற்றத்திற்கு பங்களிக்கும் ஜப்பானிய தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச செயல்விளக்க திட்டத்தின்” கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. NEDO ஆனது, ஜப்பானின் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகும். இது நிலைபேறான சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் புத்தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
Adani Power Ltd முகாமைத்துவ பணிப்பாளர் அனில் சர்தானா தெரிவிக்கையில், “எமது வணிக பெறுமதிச் சங்கிலி முழுவதும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயலூக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், Adani Power நிறுவனம் அதன் காபன் வெளியீட்டைக் குறைப்பதில் முழுமையாக செயற்பட்டு வருகின்றது. இந்த தூரநோக்கை மேம்படுத்தும் வகையில், CO2 வெளியீட்டைக் குறைக்கும் பசுமை அமோனியாவை, எமது முந்த்ரா அனல் மின் உற்பத்தி நிலையத்தில் கலப்பதற்காக, IHI மற்றும் Kowa உடன் கூட்டு சேருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
Adani Power Ltd. பற்றி
பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Power Ltd. (APL) ஆனது, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலைய உற்பத்தி நிறுவனமாகும். வலு சக்தி தொடர்பான ஒவ்வொரு துறையிலும், தமது உலகத் தரம் வாய்ந்த நிபுணர்கள் குழுவின் உதவியுடன், Adani Power ஆனது வளர்ச்சித் திறனை அடையும் பயணத்தில் உள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: www.adanipower.com