கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் Shield

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் Shield

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கை சுத்திகரிப்பு தரக்குறியீடான Shield, கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான நாட்டின் திட்டங்களுக்கு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முயற்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு Shield ஆனது, மேல் மாகாணம் மற்றும் காலியில் உள்ள தடுப்பூசி மையங்களில் 28 கை சுத்திகரிப்பு தொகுதிகளை அமைத்து, அங்கு தடுப்பூசி பெற வரும் பெருமளவான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுயுள்ளது.

தடுப்பூசிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுமார் 50,000 பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையையும் Shield குழு முன்னெடுத்தது. தடுப்பூசி போட வந்த ஒவ்வொருவருக்கும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்துடன் இணைந்து தொகுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரமும் இதன்போது விநியோகிக்கப்பட்டது.

Shield இன் இந்த முயற்சி குறித்து, Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் முகாமையாளர் நவீத் அஞ்சூன் கருத்து வெளியிடுகையில், “அரசாங்கத்தின் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான அதன் முயற்சிகளுக்கும் கை கொடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். தடுப்பூசிக்குப் பின்னர் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியாது என்பதை நாம் அவதானித்தோம். Shield ஆனது, குடும்பங்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு தரக்குறியீடாக இருப்பதால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க உதவுதல் உள்ளிட்ட சமூகப் பொறுப்பை அது நன்றாக அறிந்து வைத்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், இந்த முயற்சியை ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு தரக்குறியீடான, Hemas Consumer Brands இன் ஆதரவுடன் Shield ஆனது, இந்நாட்டிலுள்ள குடும்பங்களை தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. இது போன்ற முயற்சிகளில், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் எல்லா நேரங்களிலும் உச்ச அளவிலான சுகாதாரத்தை பராமரிப்பது மிக முக்கியமானதாகும். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது போன்று, இந்த தொற்றுநோயை நாம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, பெருமளவிலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதேயாகும். Shield மற்றும் Hemas Consumer இதை அடையாளம் கண்டு, இது தொடர்பாக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மிகத் தீவிரமான ஆதரவை வழங்க முடியு செய்துள்ளது.

Shield ஆனது, உண்மையான இலங்கை தரக்குறியீடாகும். இது Hand Sanitizer, Soap and Hand wash (கை சுத்திகரிப்பான், சவர்க்காரம், கை கழுவும் திரவம்) போன்ற விரிவான சுகாதார மைய தயாரிப்புகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேண உதவுகின்றது. Shield Hand Sanitizer ஆனது, 50 மி.லீ, 200 மி.லீ. 225 மி.லீ. போத்தல்களில் கிடைப்பதுடன், அவை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கைக்கடக்கமானதாக காணப்படுகின்றன. Shield Hand Wash ஆனது, 200 மி.லீ, போத்தல்களிலும் 200 மி.லீ. மீள் நிரப்பும் பைக்கற்றுகளிலும், Shield Original மற்றும் Shield Nourish ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

Shield சவர்க்காரமானது, 99.9% கிருமிகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும், செயற்படுத்தப்பட்ட கரி எனும் தனித்துவமான மூலப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. Shield சவர்க்காரம் தோல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பானதும், சருமத்தில் எரிவை ஏற்படுத்தாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தரக்குறியீடானது, இலங்கை குடும்பங்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் உறுதி செய்கிறது.