இலங்கையில் காலடி வைத்துள்ள SpideRadio Telecomதள நிலையங்கள் 5G செயற்படுத்தலை இலகுவாக்குகிறது

இலங்கையில் காலடி வைத்துள்ள SpideRadio Telecomதள நிலையங்கள் 5G செயற்படுத்தலை இலகுவாக்குகிறது

உலகின் அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான துறையில் புதிதாக நுழைந்துள்ள SpideRadio Telecommunication Technology Co. Limited நிறுவனத்துடன் Hyperjet Technologies Sri Lanka நிறுவனம் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் துறையில் 5G இன் சாத்தியக்கூறுகள் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தும் SpideRadio நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தயாரிப்புகளை அந்நிறுவனம் இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்துனர்கள், கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவை வழங்குனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமையுமென, Hyperjet Technologies உறுதியாக நம்புகிறது. புரோட்பேண்ட் மூலம் பொருளாதார வளர்ச்சியை செயற்படுத்தும் டிஜிட்டல் பிரிவைக் குறைத்து, 5G தொழில்நுட்பங்களில் தனது வலையமைப்புத் திறனை மேம்படுத்தும் இலட்சியத்தை இலங்கை கொண்டிருப்பதால், SpideRadio நிறுவனத்தின் வலையமைப்பு தர நுண்ணறிவு (carrier-grade Intelligent) மூலம் கம்பியற்ற தொலைபேசி வலையமைப்பிற்கான அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான தயாரிப்புகள், கையடக்கத்தொலைபேசி தகவல்தொடர்பாடல் தயாரிப்புகளுக்கான தெற்காசிய சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.

4G மற்றும் 5G  Radio Access Network (RAN) தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள், முக்கிய வலையமைப்புத் தீர்வுகள், ஸ்மார்ட் தொழிற்சாலைகள், ஸ்மார்ட் தொழில்துறைகள் மற்றும் பல்கலைக்கழக பயன்பாடுகள் போன்றவற்றிற்கான தனியார் வலையமைப்புகள் மூலம் வலையமைப்பு அணுகலுக்கான விரிவாக்கம் மற்றும் தெளிவுத்திறன் மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பான தீர்வுகளை வழங்க SpideRadio எதிர்பார்க்கிறது. இத்தகைய தரமான தொடர்பாடல் இணைப்புகள் தன்னியக்க கார்கள், டிஜிட்டல் நிதி, தொலைதூரக் கற்றல், வீட்டிலிருந்து பணி, e-அரசாங்கம், தொழில்துறை 4.0 மற்றும் தொழில்துறை 5.0 பயன்பாடுகளுக்கான டிஜிட்டல் பொருளாதார நோக்கங்கள் மற்றும் டிஜிட்டல் சமூகத்திற்கு மாறுவதற்கான சாத்தியங்களை செயற்படுத்தும்.

SpideRadio நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளில் Indoor and outdoor 4G and 5G  Base Stations, Indoor and outdoor 4G & 5G Dual mode DBS / ISC Base Station, Indoor and outdoor WCDMA Base station, Indoor and outdoor GSM Base stations ஆகியன உள்ளடங்குகின்றன. அது மாத்திரமன்றி அதிவேக புரோட்பேண்ட் மற்றும் நம்பகமான தொடர்பாடல் இணைப்பிற்கான அடுத்த தலைமுறை தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கம்பியற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான அனைத்து தயாரிப்புகளையும் அது கொண்டுள்ளது.

Hyperjet Technologies (Pvt) Ltd Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த கருணாநாயக்க இது பற்றித் தெரிவிக்கையில், “SpideRadio” நிறுவனத்தின் பரந்துபட்ட தீர்வுகள் தனித்துவமானவை, மிகவும் நம்பகமானவை, செயற்றிறன் மிக்கவை என்பதோடு கட்டுப்படியான விலையில் கிடைக்கின்றன. சீனா முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) மையங்களின் மூலமான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தான நிறுவனத்தின் குழுவின் பணிப்பாளர்கள் மற்றும் உயர் தலைமைத்துவத்தினால் இது வழிநடத்தப்படுகின்றது. தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கும் இலங்கையின் மாற்றத்திற்கும் இந்த சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் செயற்படுத்தவுள்ளோம். இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் பரந்த தரமான தயாரிப்புகள் செல்ல வேண்டும் என்பதால், தெற்காசியாவிற்கான SpideRadio வின் பிராந்திய சேவை மையமாக மாறும் வகையிலான சேவைகளை வழங்குவதற்கான முழு அளவிலான மையத்தை நாம் நிறுவவுள்ளோம்.” என்றார்.

Hyperjet Technologies (Pvt) Ltd நிறுவனமானது Optical fibre cables மற்றும் FTTH  material ஆகியவற்றில் மிகச் சிறந்த முன்னணி நிறுவனமாகும். இது 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் கட்டடங்களுக்கு வெளியில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பாடல் தயாரிப்புகளை விற்பனை செய்யும் மிகப்பாரிய விற்பனையாளர் எனும் நற்பெயரைக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்பாடல் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு காப்புரிமையைப் பெற்றுள்ள இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் ISO 56002 புத்தாக்க முகாமைத்துவ தொகுதியைக் கொண்டுள்ள ஆசியாவின் முதலாவது நிறுவனமாகும். Hyperjet நிறுவனமானது, ISO 9001, ISO 14001, ISO 22301, ISO 26000, ISO27001, ISO45001, ISO 56002 ஆகிய தர நிலைகளை இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடமிருந்தும் (SLSI), SGS, Control Union Inspections மற்றும் URS சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் ஏனைய அனைத்து தொலைத்தொடர்பாடல் வலையமைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான வணிகப் பங்காளியாக திகழ்கின்றது. அத்துடன் தரம், நம்பகத்தன்மை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றில் உயர்ந்த தரத்திலுள்ள விற்பனையாளராக விளங்குகின்றது.