இலங்கையின் முதல் மெய்நிகர் நிதியியல் தொழில்நுட்ப விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் 7 தொடக்க நிறுவனங்கள் தகைமை பெற்றுள்ளன
இலங்கையின் முதல் நிதியியல் தொழில்நுட்ப தொழில்முயற்சி ஆரம்ப விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டமான HatchX சமீபத்தில் தனது விளக்க செயற்பாட்டுத் தினத்தை அதன் முதல் கூட்டாளர்கள் அணியுடன் ஏற்பாடு செய்துள்ளதுடன், நம்பிக்கையூட்டும் 7 உள்நாட்டு நிதியியல் தொழில்நுட்பத் தொழில் தொடக்க நிறுவனங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகைமைப் பட்டம் பெற்றதுடன், பல தொழில்துறை கூட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இலங்கைக்கு அப்பால் தங்கள் வணிக முயற்சிகளை வளர்ப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் உள்நாட்டு நிதியியல் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் வெற்றியை ஈட்ட உதவுவதே HatchX இன் குறிக்கோள். தகைமை அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட ஏழு தொடக்க வர்த்தக முயற்சிகள் வருமாறு: DirectPay, Smart Insure, Fipbox.com, HeliosP2P, iLoan, Algoredge, மற்றும் OGO Pay.
Lankan Angel Network இன் பங்குடமையுடன் Hatch முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு Ford Foundation இன் நிதியுதவி கிட்டியுள்ளது. HatchX ஆனது தெற்காசியாவின் முதன்முதல் மெய்நிகர் வர்த்தக முயற்சி தொடக்க விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டம் என்பதுடன், இது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது.
வர்த்தக தொடக்க முயற்சிகள் அவர்களின் வணிக முதிர்ச்சி, நேர்மறை இழுவை மற்றும் வணிக ரீதியாகவும் முதலீட்டு திறனாகவும் சாத்தியமான வணிகமாக இருத்தல் போன்ற அவர்களின் ஒவ்வொரு திறன்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. HatchX ஒரு 4 மாத கால கற்கைநெறி மூலமும் நிகழ்ச்சித்திட்ட கட்டமைப்பு மற்றும் ஆலோசனைத் தளம் மூலமும் வணிக ஆதரவு, கல்வி மற்றும் முதலீட்டாளர்-தயார்நிலை ஆகிய மூன்று முதன்மைக் கூறுகளை நோக்கியதாக HatchX நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நியோ லியனகே அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இதனுடன் இணைந்ததாக, இந்த நிகழ்ச்சித்திட்டமானது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வலையமைப்புக்களுக்கு அடைவுமட்ட வாய்ப்பினை வழங்கியது. இந்த வாய்ப்புகளுக்கான அடைவுமட்டம் இல்லாமல் பாரம்பரியமாக அவ்வாறு செய்திருந்தால் பல ஆண்டுகள் எடுத்திருக்கக்கூடிய ஒரு நிலையில், தங்கள் வணிக முயற்சிகளை குறுகிய காலத்திற்குள் வளர்ப்பதற்கு இந்த முயற்சிகள் உதவியுள்ளன.
HatchX இன் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில், அதன் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளரான நியோ லியனகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இது போன்ற ஒரு நிகழ்ச்சித்திட்டம் இதற்கு முன்பு ஒரு போதும் நடத்தப்படவில்லை. ஆரம்ப நாட்களில் பல சவால்களை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் Zoom போன்ற டிஜிட்டல் இயங்குதளங்களைப் பயன்படுத்தி ஒரு மெய்நிகர் சூழலில் செயல்பட நிகழ்ச்சித்திட்டத்தை விரைவாக மாற்றியமைக்க முடிந்தது. மேலும், HatchX இன் மதிப்பை தெளிவாக இனங்கண்ட ஆர்வமுள்ள நிறுவனர்களிடமிருந்து ஒரு வலுவான உள்வாங்குதல் இருந்தது. அவர்களின் ஆதரவு மற்றும் தொழில்துறைப் பங்குதாரர்களின் ஆதரவுடன், தெற்காசியாவின் முதலாவது மெய்நிகர் விரைவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
செயல் விளக்கமளிப்பு தினத்தின் உத்தியோகபூர்வ நிறைவில், 7 வர்த்தக முயற்சித் தொடக்க நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறைப் பங்குதாரர்களுக்கு முன்னால் தங்கள் திறனைக் காண்பித்தன. வர்த்தக முயற்சி தொடக்க நிறுவனங்கள் பங்குதாரர்களுடன் வலையமைப்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பற்றிக் கொண்டதுடன், மேலும் ஒத்துழைக்க புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இணைப்புகளை உருவாக்கின. இது இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள வங்கிச்சேவைகளைப் பெறுகின்ற மற்றும் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு நிதிச் சேவைகளை மேலும் அடையப்பெறக்கூடியதாகவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் வழி சமைக்கிறது. 7 நம்பிக்கைக்குரிய நிதியியல் தொழில்நுட்ப வர்த்தக தொடக்க முயற்சிகளுக்கு Hatch தொடர்ந்து தனது ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்கி வருகிறது.
இந்த வர்த்தக தொடக்க முயற்சிகளுக்கு Hatch எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை விளக்கிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளரான சஞ்சித சில்வா, “முறையான நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்தவுடன், HatchX நிகழ்ச்சித்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 வர்த்தக தொடக்க முயற்சிகளும் பரந்த Hatch சமூகத்தின் அங்கத்தவர்களாக உள்ளன. தற்போது, தொழில் வல்லுநர்களிடமிருந்து வாய்ப்புக்களை மேம்படுத்த உதவும் வகையில் அவர்களுக்கு நீண்டகால வழிகாட்டுதல் ஆதரவை வழங்கியுள்ளோம். அவர்கள் வளர்ச்சி காணும்போது, மூலதனத்தைப் பெறுவதில் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். மற்றும் இலங்கைக்கு அப்பால் அவர்களின் அடிச்சுவடுகளை விரிவுபடுத்துவதற்கான அவர்களின் நீண்டகாலத் திட்டங்களுக்கு உதவக்கூடிய பங்குதாரர்களுடன் இணைப்போம். Hatch அவர்களின் வணிகங்களை வளர்க்க எல்லா வழிகளிலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
Hatch என்பது தொழில் தொடக்க நிறுவனங்களை வணிக ரீதியாக சாத்தியமான நிறுவனங்களாக அவற்;றின் சிந்தனைகளை மாற்றுவதற்கான ஒரு தளமாகும். இது கொழும்பில் புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையம். வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு பங்களிக்கும் உயர் திறன் கொண்ட வர்த்தக தொடக்க முயற்சிகளால் தூண்டப்பட்ட பொருளாதாரத்தின் தொலைநோக்குடன் Hatch தோன்றியது.
புகைப்பட தலைப்புகள்
1. HatchX வர்த்தக தொடக்க முயற்சிகள்
2. Hatch பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்