இரைச்சலை இரத்துச் செய்யும் விவேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய FreeBuds 3i இனை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Huawei
Huawei நிறுவனத்தின் FreeBuds 3 வரிசையின் புதிய இணைப்பே FreeBuds 3i. டிஜிட்டல் ஓடியோ உலகத்துடன் தடையற்ற இணைப்பிற்கு வழி வகுக்கும், சத்தத்தை நீக்கும் (noise cancellation) மற்றும் True Wireless Stereo (TWS) தொழில்நுட்பத்தின் சக்தியை Huawei FreeBuds 3i முழுமையாகக் கொண்டுள்ளது. இக் காலப்பகுதியின் முக்கிய தேவையாக Wireless earphones உள்ளதுடன், இவற்றின் சௌகரியம் காரணமாக பலர் இதனை தமது நாளாந்த பாவனைக்காக தம்மிடம் வைத்திருக்க விரும்புகின்றனர்.
சுற்றுப்புறச் சூழலில் இருந்து ஏற்படும் இடையூறைக் குறைக்கும் பொருட்டு Huawei FreeBuds 3i இரட்டை மற்றும் மூன்று microphone இரைச்சல் குறைப்பு முறையைப் பின்பற்றுகிறது. இது 32dB வரை இசைச்சல் குறைப்பை அடைவதுடன், உச்சபட்ச இரைச்சல் இரத்துச் செய்யும் அனுபவத்தை வழங்குகின்றது. Huawei FreeBuds 3i, அதன் சிறிய உள் பகுதியில் 10mm பெரிய dynamic driver ஐ உள்ளடக்கியுள்ளது. உரத்த இரைச்சலைக் கொண்ட சூழலில், இது இரைச்சலை ஈடுசெய்ய பின்னோக்கிய இரைச்சல் இரத்துச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கி, உகந்த இரச்சல் இரத்துச் செய்யும் விளைவை வழங்குகின்றது. இரட்டை மைக்ரோஃபோன்களுடன் இரைச்சலை இரத்துச் செய்யும் பாரம்பரிய TWS earphones போலல்லாமல், Huawei FreeBuds 3i இன் மூன்று மைக்ரோஃபோன் அமைப்பு அதி உகந்த இரைச்சல் இரத்துச் செய்தலை உருவாக்குகிறது. மேலும், இது இரைச்சலை திறம்பட வடிகட்டுவதுடன், ஒட்டுமொத்த அழைப்பின் தரத்தை மேம்படுத்த பேசுபவரின் குரலை தெளிவாக்குகின்றது.
இதன் smart touch control மனித-கணினி தொடர்புக்கு மிகவும் பொருத்தமான ஒரு capacitive சென்சரைக் கொண்டுள்ளது. இந்த earphone மேல் விரலைப் பிடிப்பதன் மூலம், பாவனையாளர்கள் active noiseஐ on அல்லது off செய்ய முடியும். இரண்டு முறை தட்டுவதன் மூலம் play அல்லது pause செய்யவோ அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ முடிவதுடன், பாவனையாளர்களுக்கு உள்ளுணர்வு ரீதியான அனுபவத்தைத் தருகின்றது. இந்த earphone இன் மேற்பரப்பானது அதி பளப்பான மேற்பூச்சைக் கொண்டதுடன், அழுக்குகள் சேராத வகையிலும், anti-miss touch algorithm உடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் earphones இனைக் கழற்றும் போது இதன் ஸ்மார்ட் சென்சரானது தானாக இசையை நிறுத்துவதுடன், மீண்டும் அணியும் போது மறுபடியும் இசையை play செய்யும் அதேவேளை, charging case இல் இடும் போது standby mode நிலைக்கு மாற்றிக்கொள்ளும்.
Huawei FreeBuds 3i இன் நிறை வெறும் 5.4 கிராம் மட்டுமே என்பதால் இந்த இரு துண்டுகளையும் அணிந்து கொள்வது சௌகரியமாக இருக்குமென்பதுடன், charging case இன் நிறை 51 கிராம்களாகும். இடத்தை மீதப்படுத்த charging case இனுள் earphones கிடைநிலையில் வைக்கப்படுகின்றன. இதனால் பாவனையாளர்கள் அவற்றை வசதியாக எடுத்துச் செல்ல முடியும். அதன் power button, port இன் வலது புறத்தில் அமைந்துள்ளதுடன், கட்டைவிரலால் எளிதில் அணுகலாம். மேலும், உள்ளேயும் வெளியேயும் indicator light ஐக் கொண்டிருக்கின்றமையானது பாவனையாளர்கள் சார்ஜ் மட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள உதவுகின்றது. USB-C சார்ஜிங்கை Huawei FreeBuds 3i ஆதரிப்பதுடன், USB-C உடாக power banks மற்றும் PC போன்ற பல சாதனங்கள் மூலம் மின்னேற்றம் செய்யும் வாய்ப்பையும் இது வழங்குகின்றது.
Huawei FreeBuds 3i ஆனது ஒரு Huawei ஸ்மார்ட்போனுக்கு அருகில் pairing mode இனுள் நுழையும் போது, இணைந்து கொள்வதற்கான pop-up notification ஆனது Huawei ஸ்மார்ட்போனில் தோன்றும். முதல் இணைப்பிற்குப் பிறகு ஒவ்வொரு தடவையும் பாவனையாளர்கள் charging case இனைத் திறக்கும் போதும், சாதனமானது தானாகவே இணைந்து பாவனையாளரின் சௌகரியத்துக்காக pop-up notification மூலம் அறிவிக்கும். அதே அறிவிப்பிற்குள், pop-up ஆனது earphones மற்றும் charging case இன் மின்கலத்தின் நிலையைக் குறிப்பதுடன், பாவனையாளர்கள் அவற்றை நிகழ்நேரத்தில் சரிபார்க்க முடியும்.
Huawei FreeBuds 3i ஆனது தயாரிப்புகள் பலவற்றுடன் (ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லெட்கள்) இயங்குவதுடன், சாதனங்களுக்கிடையில் மாற்றிக் கொள்ளவும் முடியும். ஒரே Huawei ID இல் பதிவுசெய்யப்பட்ட earphoneகளை பாவனையாளர்கள் சாதனங்கள் இடையே மாற்றிக்கொள்வதற்கு அவற்றை கைமுறையாக மீண்டும் இணைக்கத் தேவையில்லை. பாவனையாளரொருவர் தனது ஸ்மார்ட்போன் இன்றி நடைப்பயிற்சிக்கு செல்லும் போது, Huawei FreeBuds 3i ஆனது Huawei Watch GT 2e உடன் தானாக இணைந்து கொள்ளும். பாவனையாளர்கள் earphoneகளை இருமுறை தட்டுவதன் மூலமோ அல்லது smart watch இலிருந்து கட்டுப்படுத்துவதன் மூலமோ இசையைக் கேட்கத் தொடங்கலாம்.
Huawei FreeBuds 3i ஒரே மின்னேற்றத்தில் 3.5 மணிநேர தொடர்ச்சியான இசையை வழங்குகிறது, இது வெவ்வேறு சூழ்நிலைகளில் பல வகையான பாவனையாளர் தேவைகளுக்கு போதுமானது. மேலும், charging case உள்ளே மின்கலம் உகந்த பயன்பாட்டிற்காக 14.5 மணிநேர uptime இனை வழங்குகிறது.