Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான AMW Katana டயர்களின் புதிய வரிசையை வெளியீடு
வாகனத் துறையில் சிறந்து விளங்குவது என்பதற்கான பெயராக திகழும் Associated Motorways (AMW) நிறுவனம், டயர் தயாரிப்பில் அதன் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான AMW Katana டயர்களின் புதிய வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கட்டியெழுப்பி வரும் AMW, இலங்கையில் வாகனங்களுக்கான தீர்வுகளை வழங்குவதில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் AMW தனது புதிய டயர் வரிசைகளை AMW Katana என்ற வர்த்தகநாம பெயரில் அறிமுகப்படுத்துகிறது. இவை குறிப்பாக Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகிய இரு சக்கர வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தயாரிப்புகள், இலங்கையின் வீதிகளின் தேவைகளுக்கு அவசியமான வகையில், AMW இன் களுத்துறை தொழிற்சாலையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகன செலுத்துனர்களுக்கு வீதியில் சிறந்த பிடிப்பு, உறுதிப்பாடு, வசதியை வழங்குகிறது. கடுமையான சோதனைகள் மற்றும் பல்வேறு தயாரிப்பு மேம்பாடுகள் தொடர்பான கட்டங்களுக்கு உட்பட்டு இந்த டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தொழில்துறை தரத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு, ஆயுள், செயல்திறன் ஆகியவற்றை இவை வழங்குகிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் செலுத்துனர்களுக்கு மிருதுவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை இவை உறுதி செய்கின்றன.
AMW Katana டயர்களின் புதிய தயாரிப்பு வரிசையானது, பல்வேறு இரு சக்கர வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. குறிப்பாக, 140/60-17, 100/80-17, 90/100-10, 90 L 100-10 ஆகிய அளவுகளில் இவை வருகின்றன. இப்புதிய டயர்களை நாடு முழுவதும் உள்ள AMW Yamaha முகவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். AMW அதன் விரிவான விநியோகஸ்தர் வலையமைப்பானது, இந்த உயர்தர தயாரிப்புகளை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகுவதை உறுதி செய்கின்றது.
AMW Katana டயர்களின் இந்த புதிய தயாரிப்பு வரிசையின் அறிமுகமானது, புத்தாக்கம், தரம், உள்ளூர் உற்பத்தித் துறையில் AMW இன் இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இலங்கையின் வாகனத் துறையில் நம்பகமான மற்றும் நிலையான சக்தியாக தனது பெயரை வலுப்படுத்தி, அதன் மூலம் உள்ளூர் சந்தையில் மற்றுமொரு உள்நாட்டு உற்பத்தியை வழங்குவதில் நிறுவனம் உண்மையில் பெருமிதம் அடைகிறது.