‘Weddings by Shangri-La: The Signature Edit’ திருமண கண்காட்சி செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது

Off By Mic

திருமணங்களையும் தேனிலவுகளையும் கலைநயத்துடனும், பிரமாண்டத்துடனும், துல்லியமாகவும், வியக்கவைக்கும் வகையிலும் முன்னெடுக்க, ஷங்ரி-லா கொழும்பு ஹோட்டல், ‘Weddings by Shangri-La: The Signature Edit’ எனும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒருநாள் கண்காட்சியை பெருமையுடன் முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வு 2025 செப்டெம்பர் 21ஆம் திகதி, பிரமாண்டமான ஷங்ரி-லா போல்ரூம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தங்களது சிறப்புமிக்க நாளைத் திட்டமிடவுள்ள திருமண தம்பதியனருக்காக, ஷங்ரி-லாவின் திருமண உலகை அறிமுகப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘தி சிக்னேச்சர் எடிட்’ நிகழ்வின் மையக்கருவாக, கொழும்பின் மிகப்பெரிய தூண்கள் அற்ற போல்ரூம் மண்டபம் மற்றும் கொழும்பிற்கு வெளியே இலங்கையின் மிகப்பெரிய தூணற்ற போல்ரூம் மண்டபமாக விளங்கும் ஷங்ரி-லா அம்பாந்தோட்டையும் திகழ்கின்றன. இந்த இரண்டு மண்டபங்களும் திருமணங்களின் அளவு, அழகு, மறக்கமுடியாத நினைவுகள் எனும் அம்சங்களுடன் திருமணங்களுக்கு மேடையை அமைக்கின்றன.

இந்த நிகழ்வானது, 2026ஆம் ஆண்டுக்கான திருமணங்களும் தேனிலவுகளும் தொடர்பான, விசேட சலுகைகள், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திருமண பொதிகள் மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட சேவைகள் எனும் அற்புத வாய்ப்புகளை திருமண தம்பதியினருக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில், மணமகள் ஆடை வடிவமைப்புகள், மலர்களின் வடிவமைப்பு, புகைப்படம், வீடியோ, தின்பண்டங்கள், அலங்காரம் என பல்வேறு துறைகளில் ஷங்ரி-லாவின் நம்பத்தகுந்த கூட்டாளர்களின் தெரிவு செய்யப்பட்ட பொதிகளையும் பார்வையாளர்கள் கண்டறிய முடியும். கண்காட்சியில் கலந்துகொள்ளும் திருமண தம்பதியருக்கென விசேட சலுகைகள் மற்றும் நன்மைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வை பற்றி கருத்துத் தெரிவித்த, ஷங்ரி-லா கொழும்பு ஹோட்டலின் பொது முகாமையாளர் Hervé Duboscq, “நீண்டகாலமாக கொழும்பின் மிகச் சிறந்த கொண்டாட்டங்களுக்கான மேடையாக ஷங்ரி-லா கொழும்பு ஹோட்டல் அறியப்படுகிறது. கொழும்பின் மிகப்பெரிய தூணற்ற போல்ரூம் உடன், திருமண தம்பதியருக்கு எல்லையற்ற ஆக்கபூர்வமான விடயங்களையும் வழங்குகிறோம். இங்கு ஒவ்வொரு விடயமும் மேம்படுத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு, ஒவ்வொரு திருமணமும் ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றப்படுகிறது. ‘The Signature Edit’ நிகழ்வில், இந்த தனித்துவமான அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க திருமண தம்பதியர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

ஷங்ரி-லா அம்பாந்தோட்டையின் பொது முகாமையாளர் Refhan Razeen இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஷங்ரி-லா அம்பாந்தோட்டை ஹோட்டலானது காதலும் பிரமாண்டமும் இணையும் ஒரு இடமாகும். கொழும்பிற்கு வெளியே இலங்கையின் மிகப்பெரிய தூணற்ற போல்ரூம் மண்டபத்தைக் கொண்ட எமது ரிசோர்ட், இலங்கையின் தெற்கின் இயற்கை அழகுடன் இணைந்து, மறக்கமுடியாத திருமணங்களையும் தேனிலவுகளையும் உருவாக்குகிறது. தி சிக்னேச்சர் எடிட் நிகழ்வின் ஊடாக, ஒரு கொண்டாட்டத்தை எவ்வாறு வாழ்நாள் பயணமாக அம்பாந்தோட்டை மாற்றுகிறது என்பதை நாம் பகிர்ந்துகொள்ளவுள்ளோம்.” என்றார்.

‘Weddings by Shangri-La: The Signature Edit’ நிகழ்வானது 2025 செப்டெம்பர் 21ஆம் திகதி மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை, கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலின் ஷங்ரி-லா போல்ரூம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம். ஆயினும் அழைப்பு விடுக்கப்படும் பதிவு செய்யப்பட்ட விருந்தினர்களுக்கே அது ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு அல்லது உங்களது வருகையை பதிவு செய்ய, தொடர்புகொள்ளுங்கள்: