‘The 3i Forum’ இல் பார்வையாளர்களுடன் இடம்பெறும் இலங்கையின் முதலாவது நேரடி தொழில்முனைவோர் பொட்காஸ்டை அறிமுகப்படுத்தும் ஸ்டீபன் டி அல்விஸ்

‘The 3i Forum’ இல் பார்வையாளர்களுடன் இடம்பெறும் இலங்கையின் முதலாவது நேரடி தொழில்முனைவோர் பொட்காஸ்டை அறிமுகப்படுத்தும் ஸ்டீபன் டி அல்விஸ்

Off By

தொழில்முனைவோர்கள், நிறுவுனர்கள், மாணவர்கள், இளம் தொழில்வல்லுநர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் இணையவும், கற்றுக்கொள்ளவும், கட்டியெழுப்பவும், வளர்ச்சியுறவும் ஒரே அறைக்குள் ஒன்றிணைக்கவுமான இலங்கையின் முதலாவது நேரடி பார்வையாளர்களுடனான நேரடி – ஒளிப்பதிவு பொட்காஸ்டான (podcast) ‘The 3i Forum’ அமையவுள்ளது.

ஸ்டீபன் டி அல்விஸ் (Stefan de Alwis) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு தொகுத்து வழங்கப்படும் ‘The 3i Forum’ ஆனது, ‘The 3i Show’ இன் எல்லையை நேரடியான, இரு தரப்பு ஈடுபாட்டுடனான சூழலாக விரிவுபடுத்துகிறது. இங்கு பார்வையாளர்கள் தொழில்முனைவோர் உடனான உரையாடல்களை கேட்கவும், கேள்விகளைக் கேட்கவும், வணிகங்களைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமுள்ள ஏனையவர்களுடன் இணையவும் முடியும்.

இணைதல் (Connect), கற்றல் (Learn), கட்டியெழுப்புதல் (Build), வளர்ச்சியுறல் (Grow) ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட இந்த மன்றம் (Forum), வணிகங்களைக் கட்டியெழுப்பி வளர்ச்சியடைந்தவர்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்கும் அதே வேளையில், தொழில்முனைவிற்கான அணுகலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையை கடந்து விரிவடைந்துள்ள இலங்கைக்கு சொந்தமான வர்த்தகநாமமான ‘Moose Clothing’ நிறுவனத்தின் நிறுவுனர் ஹசீப் ஒமர் இதன் முதலாவது கலந்துரையாடலில் பங்கேற்கின்றார். இந்த உரையாடல் வணிக விரிவாக்கம், சவால்கள் மற்றும் ஓர் இலங்கை வர்த்தகநாமத்தை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் பயணம் ஆகியவற்றை உள்ளடக்கி, அவரது வணிகத்தை கட்டியெழுப்பிய அனுபவங்களை வெளிப்படுத்துகின்றது.

இந்த மன்றத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து ‘The 3i Forum’ இன் நிறுவுனரும் தொகுப்பாளருமான ஸ்டீபன் டி அல்விஸ் தெரிவிக்கையில், “பொருளாதாரத்தை இயக்குவதற்கு உங்களுக்கு தொழில்முனைவு அவசியமாகும். இதன் முழு நோக்கமும் நாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். மக்கள் தொழில்முனைவோரைச் சந்திக்கவும், கேள்விகளைக் கேட்கவும், சொந்தமாக ஒன்றை உருவாக்குவது உண்மையான ஒரு சாத்தியம் என்பதைப் புரிந்து கொள்ளவுமான ஒரு இடத்தை உருவாக்குவதே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.” என்றார்.

இலங்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், புதிய தொழில்துறைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவை ஒரு காரணியாக நிலைநிறுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய இலக்காகும். வணிக சமூகத்தை வலுப்படுத்துவதும், உள்ளூர் வணிகங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதும் பரந்த தேசிய பொருளாதார உரையாடலின் ஒரு அங்கமாக இருக்கும் வேளையில் இது வந்தடைந்துள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை தொழில்முனைவோர் சம்மேளனத்தின் (COYLE) வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தி அளிப்பதில் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமாறு வணிக சமூகத்தைக் கேட்டுக் கொண்டார். உள்நாட்டு தொழில்துறைகளை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும், அதில் உள்நாட்டு வணிகங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் உள்ளடங்கும் என்றும் அவர் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

இப்பின்னணியில், ‘The 3i Forum’ வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகங்களைக் கட்டியெழுப்பியவர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், யோசனைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நம்பிக்கையைப் பெறவுமான ஒரு தளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய வணிகங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் இலங்கையின் தொழில்முனைவோர் சமூகத்தை வலுப்படுத்துவதே இதன் இலக்காகும்.

‘Tea Drops’ வணிகத்தின் சஷி சந்திரன், ‘Velona Group’ இன் டாக்டர் கெஹான் டி சொய்சா, ‘Priceline.com’ மற்றும் ‘Booking.com’ ஆகியவற்றின் இணை நிறுவுனர் ஜெஃப் ஹொஃப்மேன் போன்ற உள்ளூர் மற்றும் சர்வதேச வணிக ஆளுமைகளை உள்ளடக்கிய ‘The 3i Show’ இன் தொடர்ச்சியாக, இந்த மன்றம் விரிவடைந்து பயணிக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 24 நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடைகிறது. இதன் சமீபத்திய பார்வையாளர்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் சேர்க்கப்பட உள்ளன.

தொழில்முனைவிற்கான ஒரு விரிவான தளத்தை உருவாக்குவதில் அடுத்த கட்டமாக இந்த மன்றத்தை ஸ்டீபன் பார்க்கிறார். கற்றல், தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்காக உள்ளூர் மற்றும் சர்வதேச ஆளுமைகளை ஒன்றிணைத்து, இந்த மன்றத்தை ‘3i Symposium’ ஆக உருவாக்குவதே இதன் இலக்காகும். இந்தக் கருத்தாக்கம், நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஒரு மீனால் உயிர் வாழ முடியாது; ஆனால் சரியான சூழலில் வைக்கப்படும் போது அது வளரும் எனும், ஒரு எளிய யோசனை ஊடாக வேரூன்றியுள்ளது. ஒன்றை உருவாக்க விரும்புவோருக்கு, அதற்கான சூழலை உருவாக்க ‘The 3i Forum’ முயற்சிக்கிறது.

கொழும்பு ஹில்டனில் நடைபெறவுள்ள இதன் ஆரம்ப 3i மன்றத்திற்கு Digital 365 Holdings, Colombo Hilton, Hands international Group ஆகியன பங்காளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளன. பதிவு மற்றும் பங்கேற்பு தொடர்பான மேலதிக விபரங்களை ‘The 3i Show’ மற்றும் மன்றத்தின் தொடர்பாடல் தளங்கள் மூலம் அறியலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, www.stefandealwis.com எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்; சமூக ஊடகங்களில் ‘The 3i Show’ இனை பின்தொடரவும்.

‘The 3i Forum’ என்பது – “நான் எப்படி ஆரம்பிப்பது?” எனும் ஒரு கேள்விக்கு வழிவகுப்பதோடு, இது ஒரு புதிய தொடக்கமாக மாறக்கூடிய ஒரு தளமாக மாறலாம்.

END