Suzuki WagonR உரிமையாளர்களின்பாதுகாப்பைஉறுதிசெய்யும்AMW
இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாயும், Suzuki வர்த்தகநாமத்தை பிரதிபலிக்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (Associated Motorways (Private) Limited) நிறுவனம், நாடு முழுவதும் உள்ள Suzuki வாகன உரிமையாளர்களைப் பாதுகாக்கும் ஒரு செயல் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பிலான சிக்கல்களை நிவர்த்தி செய்யும் இத்திட்டத்தில், AMW நிறுவனமானது Suzuki WagonR வாகனங்களை மீள் அழைத்து இந்த சேவையை முன்னெடுத்து தவறான எரிபொருள் அளவீடுகள் மற்றும் எஞ்சின் ஸ்தம்பிதத்திற்கு வழிவகுக்கும் சிக்கல்களை சீர்செய்தது.
வாகனத்தின் instrument cluster panel இல் உள்ள துல்லியமற்ற எரிபொருள் அளவீட்டு முறை மற்றும் எரிபொருள் தாங்கியில் காணப்படும் எரிபொருள் கழிவுகளால் ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்ய இம் மீள் அழைப்பு பாதுகாப்பு நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இச் சிக்கலை கவனிக்காவிடின், போதிய எரிபொருள் இன்மை தொடர்பில் ஏற்ப்படும் எச்சரிக்கைகள் தவறாக அமைய கூடும். மேலும் இதன் விளைவாக எஞ்சின் ஸ்தம்பிதமடையம் வாய்ப்புக்கள் அதிகம். இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள வாகன வகைகளாவன Suzuki WagonR Premium, Suzuki WagonR FX/FZ, Suzuki Stingray.
Suzuki WagonR உரிமையாளர்களுக்கான இந்த பாதுகாப்பு மீள் அழைப்பு திட்டமானது மிக எளிதான முறையில் AMW இனால் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது வரை, 30% மீள் அழைப்பு தொடர்பான பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயன்முறை மிகத் திறமையான முறையில் மற்றும் எளிதான முறையில் Suzuki வாடிக்கையாளர்களுக்கு வழங்ப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள AMW சேவை மையங்களில் அல்லது AMW இனால் அங்கீகரிக்கப்பட்ட சேவை முகவர்களிடம் இந்த மீள அழைப்பு சேவையை பெற்று கொள்ளலாம். இந்த செயல்முறையை மேலும் எளிதாக பெற்று கொள்ள, https://suzuki.lk/wagonrrecall/index.html எனும் இணையத் தளத்தினூடாக அல்லது AMW உடனடி தொலைபேசி இலக்கத்தை 0117 609 609 தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து இது தொடர்பான மேலதிக தகவல்களையும் பெற்று கொள்ளலாம்.
AMW நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். எனவே அனைத்து Suzuki WagonR வாகனங்களும் உயர் ரக பாதுகாப்பான மற்றும் விரைவான சேவையை வழங்குவதை முன்னிட்டு AMW நிறுவனமானது பெருமிதம் கொள்கிறது. இலங்கை மோட்டார் வாகன பாவனையாளர்களுக்கு நம்பகமான சேவை மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் AMW கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இந்த மீளப் அழைப்பு திட்டமானது ஒரு முக்கிய சான்றாகும்.
AMW இன் நாடளாவிய சேவை வலையமைபின் உதவியோடு கூட அனைத்து Suzuki WagonR உரிமையாளர்களும் இந்த மீள் அழைப்பு நடவடிக்கையை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.