
SLIM DIGIS 2.5 இல் 4 விருதுகளை வென்ற DSI Tyres இன் புத்தாக்கமான dsityreshop.com
DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்) முறை மற்றும் தரவு அடிப்படையிலான தன்மை, செயல்திறனை மையப்படுத்திய பிரசாரங்கள் ஆகியன, இந்த அங்கீகாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.
Pick-Up from Dealer முறையானது, இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வகை பாதை (omnichannel) விற்பனை முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் ஓர்டர் செய்து, அங்கீகரிக்கப்பட்ட DSI Tyres விற்பனையாளர்களிடமிருந்து தங்கள் டயர்களைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இது, டிஜிட்டல் வசதியையும் நம்பகமான விற்பனை நிலைய சேவையையும் ஒன்றிணைக்கிறது.
SLIM DIGIS 2.5 விருது விழாவில், dsityreshop.com பெருமை மிக்க பின்வரும் இரண்டு பிரிவுகளில் விருதுகளை (வெள்ளி) வென்றுள்ளது:
- Best use of Digital in a Marketing Campaign for Automotive (வாகனத் துறை சந்தைப்படுத்தல் பிரசாரத்தில் டிஜிட்டலை சிறந்த முறையில் பயன்படுத்தல்)
- Best Use of Data & Predictive Intelligence (தரவு மற்றும் கணித்தல் புத்திசாதுர்யத்தை சிறந்த முறையில் பயன்படுத்தல்)
அவை தவிர, இந்த இணையத்தளம் பின்வரும் விருதுகளையும் பெற்றுள்ளது:
- Bronze – Best Performance Marketing Campaign (சிறந்த செயல்திறன் கொண்ட சந்தைப்படுத்தல் பிரசாரம்)
- Merit – Best SEO/SEM Campaign (சிறந்த தேடல் பொறி/ தேடல் சந்தைப்படுத்தல் பிரசாரம்)
இந்த இரட்டை நிரப்பல் முறைமையின் மூலம், வாடிக்கையாளர்கள் அசல் DSI டயர்கள் மற்றும் Hankook டயர்களை ஒன்லைனில் கொள்வனவு செய்து, பாதுகாப்பாக வீட்டிற்கு விநியோகிக்கும் முறை அல்லது DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான விற்பனையாளர் வலையமைப்பின் மூலமான Pick-Up from Dealer தெரிவின் மூலம் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விருதுகள் குறித்து கருத்துத் தெரிவித்த Samson Rubber Industries நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் காவிந்த ராஜபக்ஷ, “SLIM DIGIS 2.5 நிகழ்வில் dsityreshop.com நான்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். இந்த சாதனையானது, இலங்கையில் டயர் கொள்வனவு அனுபவத்தை, டிஜிட்டலை முதன்மையாகக் கொண்ட புத்தாக்கத்தின் மூலம் மாற்றும் எமது தூரநோக்கை பிரதிபலிக்கிறது. இந்த வணிக முறைமை புத்தாக்கத்தை முன்னெடுப்பதன் மூலம், எமது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய எமது சந்தைப்படுத்தல் மற்றும் இணைய வர்த்தகக் குழுவினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.
இந்த வெற்றிகள் மூலம், DSI Tyres ஆதரவுடன் இலங்கையின் மிகப் புத்தாக்கமான மற்றும் அதிக விருதுகளை வென்ற இணையத்தள டயர் வர்த்தக தளமாக dsityreshop.com தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு, டயர் கொள்வனவில் டிஜிட்டல் எதிர்காலத்தை மீள்வலியுறுத்துகிறது.
மேலதிக விபரங்களுக்கு: dsityreshop.com
Image Caption –
இடமிருந்து வலமாக,
1. சஜீவ துஷார – பிரதேச முகாமையாளர்
2. மதூஷன் நெத்தசிங்க – இணைய வணிக அதிகாரி
3. ரொஷான் விதானகே – விற்பனை முகாமையாளர்
4. தனுக சசங்க – சந்தைப்படுத்தல் முகாமையாளர்
5. காவிந்த ராஜபக்ஷ – முகாமைத்துவ பணிப்பாளர் (DSI Tyres)
6. சமித் கருணாரத்ன – உதவிப் பொது முகாமையாளர்
7. ஷானுக நிர்மல் – டிஜிட்டல் சந்தைப்படுத்தல் அதிகாரி
8. மேனுக கொதாகொட – உதவி வர்த்தகநாம முகாமையாளர்
9. ஹசித ஹெட்டியாரச்சி – சிரேஷ்ட படைப்பாற்றல் வடிவமைப்பாளர்
10. எரந்த ரணவீர – பிரதேச முகாமையாளர்