
Siemens உடன் இணைந்து ஹபரணையில் இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையம் மூலம் தேசிய மின் கட்டமைப்பை பலப்படுத்தும் DIMO
தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமானது, DIMO மற்றும் Siemens இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டாண்மையின் பலத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் மின்சார கட்டமைப்பின் 70% இற்கு மேலான நிர்மாணத்திற்கு முக்கியப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முழுமையான ஒப்பந்ததாரராக (turnkey contractor) செயற்பட்ட Siemens நிறுவனம், தன்னியக்கம், SCADA மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உபகரணங்களின் பொறியியல், கொள்முதல், நிறுவுதல், சோதனை மற்றும் செயற்படுத்தல் ஆகியவற்றை நிர்வகித்தது. கட்டுமான வடிவமைப்பு, நில மேம்படுத்தல், கட்டமைப்பு மற்றும் மின்சார உபகரணங்களின் நிறுவல் உள்ளிட்ட முழுமையான கட்டுமானம் மற்றும் மின்சாரப் பணிகள் (civil and electrical scope) பிரதான துணை ஒப்பந்ததாரரான DIMO நிறுவனத்தின் பொறுப்பில் இருந்தது.
15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த 220/132/33 kV புதிய துணை நிலையம் (greenfield substation), வியாங்கொடை துணை நிலையத்தின் விரிவாக்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது நாட்டின் மையத்தில் ஒரு முக்கியமான பரிமாற்ற மையத்தை நிறுவுகிறது.
ஹபரணை – வியாங்கொடை மற்றும் விரைவில் வரவுள்ள ஹபரணை – கப்பல்துறை போன்ற மூலோபாய விரிவாக்க பாதைகளுக்குத் தளமாகச் செயற்படுவதன் மூலம், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஹபரணை நிலையமானது, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களுக்கிடையேயான இணைப்புகளை ஏற்படுத்துகிறது.
அதிக கொள்ளளவு கொண்ட உட்செலுத்தும் புள்ளியை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஹபரணை துணை மின்சார நிலையம் தேசிய மின் கட்டமைப்பு முழுவதும் ஒட்டுமொத்தப் பரிமாற்றத் திறனை மேம்படுத்துகிறது. பரிமாற்ற நெரிசலைக் குறைப்பதுடன் மின்னழுத்த நிலைத் தன்மையை (voltage stability) பலப்படுத்துகிறது. இதன் எதிர்கால மேம்பாடுகள், 75MVA ஒத்திசைவான மின்தேக்கியை (synchronous condenser) கட்டமைத்தல் போன்ற நிலையான தன்மை மற்றும் மின்னழுத்த பேணுதலுக்கான மிகவும் ஆற்றல்மிக்க ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹபரணை துணை நிலையமானது மூலோபாய ரீதியாக 132kV மற்றும் 220kV இடையிலான சந்திப்பில் அமைந்துள்ளது. முன்மொழியப்பட்ட ஹபரணை – கப்பல்துறை விரிவாக்கமானது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் அதிகரித்து வரும் தேவையை தேசிய கட்டமைப்புடன் இணையச் செய்யும். இதன் மூலம் நிலைபேறான மேம்பாடு மேலும் செயலாக்கம் அடையும்.
IEC 61850 மற்றும் அதிநவீன Siemens பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட துணை மின் நிலையத் தன்னியக்க கட்டமைப்புகள் (Substation Automation Systems – SAS) துணை மின்
நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன. இது பாதுகாப்பான செயற்பாடுகள், பிழைகளுக்கான விரைவான தனிமைப்படுத்தல் மற்றும் ஒன்றோடொன்று ஒத்திசைவுடன் செயற்படக்கூடிய பாதுகாப்பிற்கு வழி வகுக்கிறது. DIMO நிறுவனத்தின் வலுவான சுகாதார, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் (HSE) நடைமுறைகள் மற்றும் திட்ட முகாமைத்துவ கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தத் திட்டமானது பாதுகாப்பு விசேடத்துவத்திற்கான கௌரவத்தை பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் பெரிய புதிய கள (greenfield) நோக்கம் மற்றும் திட்டத்தின் பரந்த அளவு ஆகியவற்றை கடந்து, ஒப்பந்தக் காலக்கெடுவுக்குள் அது நிறைவு செய்யப்பட்டுள்ளது. நில மேம்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் போன்ற தடைகளைச் சமாளிக்க DIMO நிறுவனம் கொண்டுள்ள உள்ளக அறிவு மற்றும் HSE தரங்களில் உள்ள தலைமைத்துவம் ஆகியன முக்கிய பங்களிப்பை வழங்கியது. இதன் மூலம் அது தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
Siemens நிறுவனத்தின் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) ஆதரவானது இந்த திட்டத்தின் நீண்ட கால நம்பகத்தன்மையை உறுதி செய்வதால், செயற்படுத்தலுக்குப் பின்னரும் தொடர்ச்சியான உத்தரவாத ஆதரவு, உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகள், அழைப்பு விடுக்கப்படும் நேரத்தின் போதான தொழில்நுட்ப உதவி மற்றும் இயக்குதலுக்கான பயிற்சி ஆகியவற்றை DIMO வழங்குகிறது.
இந்த முக்கிய மைல்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த DIMO Energy பொது முகாமையாளர் ஷெஹான் அமரதுங்க, “ஹபரணை மின்சார துணை மின் நிலையமானது இலங்கையின் மின்சாரத் துறைக்கான ஒரு வரலாற்றுச்
சிறப்புமிக்க திட்டமாகும். தேசிய மின் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை தற்போது மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத் தொழில்துறை மற்றும் வலுசக்தி மேம்படுத்தலுக்கான அடித்தளத்தையும் அமைக்கும் இந்த கட்டமைப்பு மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளை வழங்க Siemens உடன் கூட்டுச் சேர்ந்ததில் DIMO மகிழ்ச்சி அடைகிறது.” என்றார்.
புதிய ஹபரணை துணை மின் நிலையமானது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமையானது, தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் உலகத் தரமான உட்கட்டமைப்பை வழங்குவதில் DIMO நிறுவனம் நம்பகமான பங்காளி எனும் அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.
END