‘Odyssey Through the Wild’ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த JCSL உறுப்பினர்கள்

‘Odyssey Through the Wild’ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த JCSL உறுப்பினர்கள்

Off By Mic

நாட்டிலுள்ள அதிகம் அறியப்படாத பல தேசிய பூங்காக்களை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கிய The Jeep Club of Sri Lanka (JCSL) ஏற்பாடு செய்த வருடாந்த ‘Odyssey Through the Wild’ ஆய்வுப் பயணம் அண்மையில் மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் JCSL உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர். 1,000 கி.மீ. இற்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கிய இந்த நான்கு நாள் மலையேறும் நிகழ்வு, இயற்கையின் அழகை இரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததோடு, பூங்காவை பார்வையிடுவதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. Jeep Wranglers, Grand Cherokees, Cherokees ஆகிய வாகன அணிவகுப்பின் வழிநடத்தலுடன், DIMO குருணாகல் கிளையில் ஆரம்பிக்கப்பட்ட மின்னேரியா, கல் ஓயா, குமண காடுகளுக்கான 4 நாள் பயணத்தின் போது அரிய சிறுத்தைகள், கரடிகள், யானைகள், பல்வேறு வகையான பறவை இனங்களைப் பார்க்கும் தனித்துவமான வாய்ப்பை JCSL உறுப்பினர்கள் பெற்றனர்.

DIMO Nature Club இன் ஒத்துழைப்பும் இந்தப் பயணத்திற்கு கிடைத்ததுடன், இலங்கையின் சூழல் தொகுதிகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய பல்வேறு தகவல்களும் அவர்களால் பகிரப்பட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த JCSL தலைவர் பிரஷான் விஜயநாயக்க, “JCSL ஆகிய நாம், எப்போதும் பொறுப்பான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு ஆய்வுப் பயணங்களின் மூலமும், இலங்கையின் இயற்கை அழகைப் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம். அத்துடன், இதன் மூலம் உயிர்ப்பல்வகைமையை

ஆழமாக ஆராய்ந்து அதனை பாராட்ட இது எம்மை மேலும் ஊக்குவிக்கிறது.” என்றார்.

இந்த விடயத்தில் DIMO நிறுவனத்தின் குழும நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கஹநாத் பண்டிதகே கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் Jeep தொடர்பான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் எனும் வகையில், பொறுப்புமிக்க ஆய்வுப் பயணத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு சமூகத்தை மேம்படுத்த DIMO நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைத்ததில் நாம் பெருமையடைகிறோம். JCSL இன் இந்த வருடாந்த சுற்றுப்பயணத்தின் மூலம் ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரட்டை இலக்குகள் சிறப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இது சூழல் பொறுப்பு தொடர்பான DIMO நிறுவனத்தின் பரந்த அர்ப்பணிப்புடன் ஒத்திசைகிறது.” என்றார்.

இந்தப் பயணம் முழுவதும் JCSL உறுப்பினர்களின் வசதியையும் அவர்களது பாதுகாப்பையும் பேணுவதில், DIMO நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய சேவைப் பிரிவு முக்கிய பங்கு வகித்தது.