Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

இலங்கையின் பரந்த வலுசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும், முன்னணியில் உள்ள David Pieris Solar Energy நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமான David Pieris Renewable Energy (Private) Limited நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உயர்தர, பாரிய அளவிலான சூரிய மின்சக்தி தீர்வுகளை வழங்கும் திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. நாட்டின் உள்ளக வடிவமைப்புத் துறையில் முக்கிய இடத்திலுள்ள Leema Creations (PVT) Ltd நிறுவனத்தின் தொழிற்சாலையில், பாரிய அளவிலான கூரை மீதான சூரிய மின்கலத் தொகுதி கட்டமைப்பை நிறுவனம் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
இந்த கட்டமைப்பின் முதன்மை நோக்கம், இத்தொழிற்சாலையின் மின்சாரச் செலவுகளை முற்றிலுமாக நீக்குவதோடு, நிலைபேறான, சூழலுக்கு உகந்த பசுமையான, பராமரிக்கத்தக்க தொழில்முறை நடவடிக்கையை ஆதரிப்பதேயாகும். இந்த திட்டத்தின் கீழ் 848 Jinko 590W N-Type Solar PV மின்கலங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மொத்தமாக 500 kWp திறன் கொண்ட கட்டமைப்பாகும். இது நான்கு Huawei 100kW இன்வேட்டர்களால் இயக்கப்படுகிறது. சிறந்த வலுசக்தி பயன்பாட்டை உறுதிப்படுத்தி, உயர் செயற்றிறனை வழங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்பானது வருடாந்தம் சுமார் 660,422 kWh மின்சாரத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருடாந்தம் 429.27 தொன் காபனிரொட்சைட்டு வாயு வெளியீட்டை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் தொடர்பாக David Pieris Renewable Energy (Private) Limited நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டுத் தலைவர் (COO) கீத் சமரநாயக்க தெரிவிக்கையில்: “Leema Creations நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் இந்த பாரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம். மிகப்பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்ளும் திறன், அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் எம்மிடம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற நாம் ஆவலாக உள்ளோம். குறிப்பாக விற்பனைக்குப் பிந்தைய சேவையில் 40 வருட அனுபவத்துடன் David Pieris குழுமத்தின் நம்பிக்கைக்குரிய ஆதரவுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நீண்டகாலம் நீடித்த பெறுமதியும் நம்பிக்கையும் உறுதி செய்யப்படுகின்றன.” என்றார்.
ஒரு சூரிய மின்சக்தி கட்டமைப்பில் முதலீடு செய்வதானது, எதிர்கால மின்சார செலவுகளைப் பற்றிய கவலையின்றி, எந்தவொரு மின்சார பயன்பாட்டு சாதனத்தையும் பயன்படுத்தும் வசதியை பெறுவதோடு மட்டுமல்லாது, மின்சார சேமிப்பையும் தேசிய மின்கட்டமைப்புக்கு பங்களிப்பதன் மூலம் மேலதிக வருமானத்தையும் ஈட்டும் வாய்ப்பையும் தருகிறது. இது ஒரு புத்திசாதுர்யமான, நிலைபேறான தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் அறிய அல்லது உங்கள் மின்சக்தி தேவையில் மாற்றத்தை ஏற்படுத்தத David Pieris Renewable Energy இனால் எவ்வாறு உதவ முடியும் என்பதை தெரிந்துகொள்ள www.dpre.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது விற்பனை 0114700440 மற்றும் தொழில்நுட்ப 0114700444 பிரிவுகளின் உடனடி தொலைபேசிகளுக்கு அழையுங்கள்.
நிறுவனம் பற்றி David Pieris Renewable Energy (Private) Limited (DPRE) ஆனது David Pieris குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இது இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் நம்பகமான ஒரு நிறுவனமாக விளங்குகின்றது. வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான on-grid, off-grid, hybrid கட்டமைப்புகளை உள்ளடக்கிய பல்தரப்பட்ட சூரிய மின்சக்தி தீர்வுகளை இது வழங்குகிறது. அத்துடன், இது வலுசக்தி திறன்வாய்ந்த ஐரோப்பாவின் முன்னணி water heating வசதியை வழங்கும் வர்த்தகநாமமான Calpak Hot Water Systems இன் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராகவும் செயற்படுகிறது.