KYC V7 மின்சார வாகனங்கள் குறித்த Onesh Investment மற்றும் Tropical Seeds நிறுவனங்களின் நேர்மையான அனுபவங்கள்

KYC V7 மின்சார வாகனங்கள் குறித்த Onesh Investment மற்றும் Tropical Seeds நிறுவனங்களின் நேர்மையான அனுபவங்கள்

Off By Mic

Onesh Investment மற்றும் Tropical Seeds ஆகிய நிறுவனங்களின் நாடளாவிய விநியோக நடவடிக்கைகளுக்கு, 7 KYC மின்சார வணிக வாகனங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுவதாக, இலங்கையின் முன்னணி மின்சார வாகனத் தீர்வுகளை வழங்கும் Evolution Auto நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை வணிக நிறுவனங்களுக்கு, மின்சார வணிக வாகனங்கள் ஒரு நம்பகமான, விரிவுபடுத்தக்கூடிய மற்றும் சிக்கனமான மாற்றீடாக அமையும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த சான்றாகும். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது இந்த KYC மின்சார வாகனங்கள் வணிக ரீதியில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. இவை முழுமையான சுமை ஏற்றப்பட்ட நிலையிலும் அன்றாட விநியோக நடவடிக்கைகளிலும் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றன. 1200 கிலோகிராம் வரை சுமை ஏற்றப்பட்ட போதிலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 முதல் 350 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிப்பதாக தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், இந்த வாகனங்கள் இதுவரை எவ்வித இயந்திர கோளாறுகளுமின்றி சுமார் 11,000 – 12,000 கி.மீ. தூரம் வரை பயணிக்கின்றன. இது அவற்றின் நீடித்த உழைப்பையும் மிகக் குறைந்த பராமரிப்புச் செலவையும் உறுதி செய்கிறது.

இலங்கையின் சவாலான வீதிகளிலும், சூழல்களிலும் மின்சார வாகனங்கள் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதை இந்தச் செயன்முறை காட்டுகிறது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் தொடர்பான பேச்சுகள் வெறுமனே சோதனைத் திட்டங்களைத் தாண்டி, நடைமுறை ரீதியாக வணிகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இது குறித்து, Evolution Auto நிறுவனத்தின் வணிக வாகன விற்பனை மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் தலைவர் திவான் விஜேரத்ன தெரிவிக்கையில், “இந்தத் திட்டம் மின்சார வாகனங்களின் வலிமையை மிக எளிமையாகவும் தெளிவாகவும் நிரூபித்துள்ளது. KYC மின்சார வணிக வாகனங்கள் இலங்கையின் யதார்த்தமான சூழலில் தினமும் இயங்கி வருகின்றன. இவை வெறுமனே சோதனையாக அன்றி, சாரதிக்கான வசதி, தொடர்ச்சியான இயக்கம் முதல் சுமையைத் தாங்கும் திறன் வரை வணிக நிறுவனங்களின் அனைத்து தேவைகளையும் இவ்வாகனங்கள் பூர்த்தி செய்துள்ளன. இது இலங்கையின் போக்குவரத்து விநியோகம் (Logistics) மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (SME) வணிகத் துறைகளில் மின்சார வாகனங்களை விரிவுபடுத்துவதில் எமக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

தமது பணி அனுபவத்தை இந்த வாகனங்கள் கணிசமாக மேம்படுத்தியுள்ளதாக Onesh Investment மற்றும் Tropical Seeds நிறுவனங்களின் சாரதிகள் மற்றும் செயற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். முழுச் சுமையுடன் செல்லும்போதும் இலகுவான கையாளுகை, சாரதிகளுக்கு ஏற்படும் உடல் சோர்வை குறைத்தல் மற்றும் KYC V7 இல் உள்ள Barn doors வசதி மூலம் பொருட்களை இலகுவாக ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் முடிவது போன்றவை அன்றாட விநியோக நடவடிக்கையில் பெரும் நன்மைகளாக அமைகின்றன.

KYC மின்சார வணிக வாகனங்களை தேர்ந்தெடுத்ததன் மூலம், இந்நிறுவனங்கள் இதனை வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த முடிவாக அன்றி, வணிக செயல்திறனை அதிகரிக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவே கருதுகின்றன. எரிபொருள் வாகனங்களில் (ICE) இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவது வணிக ரீதியாக அதிக இலாபகரமானது என்பதை, அவற்றின் நம்பகமான பயணத் தூரம் மற்றும் சுமை இழுத்தலில் நிலைபேறான தன்மை ஆகியவை எடுத்துக் காட்டுகின்றன.

மின்சார வாகனங்கள் குறுகிய தூரப் பயணங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை, அவற்றின் தூரம் நம்பகமற்றது அல்லது அதிக சுமைக்கு ஏற்றவையல்ல எனும் நீண்ட காலமாக இருந்து வந்த கருத்துகளுக்கு இந்தத் திட்டம் நேரடியாக சவால் விடுத்துள்ளது. அத்துடன், மின்சார வணிக வாகனங்கள் நாடு தழுவிய செயற்பாடுகளுக்கு திறன் கொண்டவை, நம்பகமானவை, பொருளாதார ரீதியாக சாத்தியமானவை எனும் புதிய தரநிலையை இது உருவாக்கியுள்ளது.

Evolution Auto நிறுவனம், மின்சார வாகனங்களுக்கு மாற விரும்பும் இலங்கை வணிகங்களுக்கு தனது நிபுணத்துவம், விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் உண்மையான செயல்திறன் தரவுகளுடன் தொடர்ச்சியாக உதவி வருகிறது.

KYC மின்சார வணிக வாகனங்கள் மற்றும் Evolution Auto மின்சார வாகனங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள www.evolutionauto.lk அல்லது 0777 553 355 ஊடாக தொடர்பு கொள்ளவும்.

END